பத்திரிகை துறை மட்டுமல்ல, எல்லாத் துறையும் மனித வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமே மாறாத ஒன்று.

இந்தியா ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி

பத்திரிகை துறையில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாற்றங்கள் என்பது, எந்த துறையானாலும் அது மாறிக்கொண்டு தான் இருக்கும் .அந்த மாற்றத்தை மனித வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

ஆனால் செய்தித் துறை அதிகாரிகளுக்கு அந்த மாற்றங்கள் இன்னும் ஏன் தெரியவில்லை என்பதுதான் நடுநிலை ஆன பத்திரிகையாளர்கள் கேள்வி? மேலும், அந்த மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் ,பத்திரிகை துறையின் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். அப்படி மாற்றி அமைக்கவில்லை என்றால், பத்திரிகை

விதிமுறை சட்டங்களை நீங்கள் ஒரு பக்கம் ஏமாற்றி இருட்டடிப்பு செய்து, தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே, அதை மடைமாற்றம் செய்யும் வேலைதான் செய்தித் துறை அதிகாரிகளின் வேலையாக இருக்கும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

மேலும், 1947 இல் போடப்பட்ட சட்டம் இன்று வரை பத்திரிகை துறையில் மாறாமல் இருப்பது தான் மிகப்பெரிய ஒரு அவல நிலை. இதை மத்திய மாநில அரசுகள் இன்றைய மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் அதை மாற்றி அமைக்க வேண்டும். அப்படி அமைக்காமல் அதே சட்டத்தை வைத்து அல்லது அதே விதிமுறைகளை வைத்து ,தினசரி, மாதம் ,வாரம் என்று பத்திரிகைகளின் சர்குலேஷன் வைத்து ,அதனுடைய சலுகை, விளம்பரங்கள் என்பது அது ஒரு ஏமாற்று வேலை.அந்த காலத்தில் அரசியல் பின்பலத்தால் ,வளர்ந்த பத்திரிகைகள் கூட இன்று அவர்களுடைய பத்திரிகை வியாபாரம் நடக்கவில்லை. மேலும் பத்திரிகை என்பது தற்போது மிகப்பெரிய போட்டி வியாபாரம் ஆகிவிட்டது. இதில் சிறிய பத்திரிகைகளும் போட்டி போடுகின்றன .வளர்ந்த பத்திரிகைகள் சிறிய பத்திரிகைகளுக்கு எவ்வித சலுகை, விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பது அவருடைய ஆரம்பகால அரசியல் செல்வாக்கில் இருந்து இன்று வரை அதை தான் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால்,பத்திரிகை துறை மிகப் பெரிய அதீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒரு பக்கம் சோசியல் மீடியா மற்றொரு பக்கம் ஆன்லைன் வெப்சைட்டுகள், ஆன்லைன் பத்திரிகைகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிடும்போது, மக்களுக்கு அச்சிடும் பத்திரிகைகளை விட அதிக அளவில் மக்களின் பார்வைக்கு இந்த செய்திகள் போய் சேர்கின்றன.

மேலும், அச்சுப் பிரதிகளை வாங்கி படிக்கும் மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக இளைய தலைமுறைகள் இடம் துளி கூட இல்லை. தவிர ,தற்போது ஒன்றை வயது குழந்தை முதல் 80 வயது வரை இன்று செல்போன் உபயோகம் வந்துவிட்டது. இதில் தான் இளைய தலைமுறை அதிகம் கவனம் செலுத்துகிறது. மேலும், ஒரு பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்யும்போது அல்லது உட்கார்ந்து இருக்கும்போது, நூற்றுக்கு 95% செல்போனை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது, இந்த அச்சுப் பிரதிகளை மக்கள் வாங்கிய படிக்கவில்லை என்பது உண்மை. ஆனால், செய்தித்துறை அரசு அதிகாரிகள் இந்த அச்சு பிரிதியை கணக்கில் வைத்து அது பெரிய பத்திரிகையாக இருக்கட்டும், சிறிய பத்திரிகையாக இருக்கட்டும், அதற்கு எப்படி சலுகை விளம்பரங்கள் கொடுக்கிறார்கள்? மேலும், அந்த பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகளின் முக்கியத்துவம் என்ன? செய்திக்கும் ,ஜஸ்ட் இன்பர்மேஷஸன்

(Just Information) அதாவது சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் , அர்த்தம் தெரியாது செய்தியாளர்கள் இருப்பது போல,இந்த பத்திரிகை துறையில் பிஆர்ஓ மற்றும் ஏபிஆர்ஓ இருக்கிறார்கள். இதைவிட ஒரு கொடுமை நான் நிருபராக பணியாற்றிய காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏபிஆர்ஓவாக பணியாற்றிய ஒருவர் தப்பு தப்பாக செய்தி எழுதிக் கொண்டு வருவார்.

அதைப்பார்த்து பி ஆர் ஓ பெரிய தொல்லையா, போச்சு தலையில் அடித்துக் கொள்வார். அவரும் தலைமைச் செயலகத்தில் சென்று ஓய் பெற்றுவிட்டார் .இவரும் இணை இயக்குனர் அளவுக்கு பதவி உயர்வு பெற்று ஓய்வு விட்டார். அப்போது நானும் இந்த உண்மைகளை தெரிந்திருக்கவில்லை.

இதை தெரிந்து கொண்டது நான் சொந்தமாக பத்திரிக்கை ஆரம்பித்து, அதன் வலியும், வேதனையும் தெரிந்து கொண்ட பிறகுதான் அதை அறிந்தேன். அதனால், இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். உண்மைகள் எது? என்பது ஒவ்வொருவருக்கும் ,அதன் அனுபவம் தான் எடுத்துச் சொல்லும். அதை தான் நான் இந்த பத்திரிகை உலகிற்கு தற்போது இந்த உண்மைகளை எடுத்துரைக்கிறேன். நூற்றுக்கு 90 சதவீத செய்தி துறை அதிகாரிகளுக்கு பத்திரிகை பற்றிய உண்மை தெரியாது.

இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளை போல, அரசியல் பின்புலத்தில் அரசு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள். அது அதிமுகவாக இருக்கலாம் அல்லது திமுகவாக இருக்கலாம் அது முக்கியமல்ல. ஆனால், இவர்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் எவ்வளவு கருத்துக்களையும், பத்திரிகை பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய செய்தி துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியனிடம் இந்த உண்மைகள் பற்றி எடுத்துரைத்தேன். அதற்கு அவரும் அதை பொறுமையாக கேட்டு அதனுடைய உண்மைகளை ஒத்துக் கொண்டார். மேலும் ,அது பற்றி சிஎம் கிட்ட பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், ஆட்சி மாறிவிட்டது. இருப்பினும் செய்தி துறை என்பது ஆட்சியாளர்களின் சுயநலத்துறை அல்ல. மேலும், கார்ப்பரேட் பத்திரிகைகளின் அரசியல் டாமினேஷன் அல்ல .இதை செய்து துறை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது மக்களுக்கான செய்தி துறையாக மாற்றப்பட வேண்டும் .

இது பத்திரிகைகளின் சுதந்திரத்தையும் ,அதன் நலமும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் இது சமூக நன்மைக்காக போராடும் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும். வியாபார பத்திரிகைகளுக்கும், கட்சி சார்பான பத்திரிகைகளுக்கும் இதுவரையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இது தவறான விதிமுறை. மேலும் இந்த பத்திரிகைகள் எல்லாம் இன்று வளராமல் முட்டுக்கட்டையாக இருப்பது இந்த பத்திரிக்கை துறையில் உள்ள அரசியல் தலையீடு தான் .எப்போது நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு வந்ததோ ,அப்போது பொதுமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதே போல் தான் பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு எப்போது வந்ததோ ,அப்போதே மக்களுக்கு உண்மையான செய்திகள், நடுநிலையான செய்திகள் போய் சேரவில்லை. இதனால் என்ன நடந்தது? என்றால், இதனுடைய பின் விளைவு ஊழல் ஆட்சி, ரவுடிசம் ஆட்சி இதுதான் மக்களுக்கு கிடைத்த ஒரு சமூக அநீதி.

அதனால் இந்த மாற்றத்தை கொண்டு வருவது செய்தித் துறை அதிகாரிகளா? அல்லது நீதிமன்றமா? இதற்கு காலம் தான் பதில் சொல்லும்………….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *