பத்திரிக்கை துறையில் மாற்றங்கள் கொண்டுவர சமூக நல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் முயற்சிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலையிடுவார ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 05, 2024 • Makkal Adhikaram

பத்திரிக்கை துறையில் மாற்றங்கள் சட்டரீதியாகவும், விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக மக்கள் அதிகாரம் பத்திரிகையில் செய்திகள் வெளியிட்டும், ஆர்டிஐ மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்வது குறித்து இன்று இந்திய நாட்டின் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் பத்திரிக்கை மற்றும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 அது பற்றிய செய்தி தான் இது. நீதித்துறையின் கவனத்திற்கும், பத்திரிக்கை துறையின் கவனத்திற்கும், பொது மக்களின் கவனத்திற்கும், இச்செய்தி கொண்டு செல்லும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

கால மாற்றங்களுக்கு சட்டத்தின் மூலம் சமூகத்திற்கு அதன் உரிமைகளை மீட்பதற்கு தேவையான சமூக நீதி! அது சட்டத்தின் மூலம் தான் கிடைக்கும். அந்த நம்பிக்கையில் தான், பத்திரிக்கை துறையில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு அதன் உரிமைகள் மறுக்கப்படும் போது, சட்டத்தால் அதை சரி செய்ய முடியும் .

அந்த நம்பிக்கையுடன் இந்திய நாட்டின் தலைமை நீதியரசருக்கு எங்களின் வேதனையும், கஷ்டங்களையும் தெரிவித்து அதற்கான சமூக நீதியை  இப் பத்திரிக்கை துறையில் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இதை அவருக்கு அனுப்பியுள்ளேன். 

நாட்டில் திறமை, தகுதி எல்லாமே இருந்தும் ,எங்கள் உழைப்புக்கு மத்திய, மாநில அரசாங்கம் அலட்சியப்படுத்தி வருகிறது. பணத்தால் இதையெல்லாம் விலைக்கு வாங்க முடியாது. ஆனால், தகுதியற்ற பத்திரிகைகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருந்தால், அதுவும் தங்களை தெரிய பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்கிறது. அது வியாபார நோக்கமாக இருந்தாலும் அல்லது அரசியல் கட்சி சார்ந்து இருந்தாலும், அதற்கெல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்படும் போது, சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு அதை கொடுக்காமல் புறக்கணிப்பது, சமூக நன்மைக்கு எதிரான ஒன்று. மேலும்,

நாங்கள் கேட்பது எங்களுடைய தகுதியை பார்த்து, தரம் பார்த்து, திறமையை பார்த்து எங்களுக்கான உரிமைகளை கொடுத்து அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், ஒரு சார்பாக கார்ப்பரேட்டுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் மக்களின் வரிபணம் சொந்தமானது என்றால், அதை ஒருகாலும் ஏற்க முடியாது. அதனால், நீதியைத் தேடி, நீதியரசர் இடம் நீதி கேட்டு. எங்களது நியாயமான கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *