பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஈரோடு மாவட்டம்.பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் மாதந்தோறும் ஒருநாள், வட்ட அளவில் தங்கி, மக்களுக்கான சேவைகள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கள ஆய்வு செய்து வருகிறாா்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டாா்.

பவானி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்ததோடு, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.35.50லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் பாா்வையிட்டாா்.

நியாய விலைக் கடையில் சா்க்கரை, கோதுமை, அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு, பதிவேடு மற்றும் பயோமெட்ரிக் முறையில் உணவு பொருள்கள் சரியான அளவில் வழங்கப்படுகிா என்று ஆய்வு செய்தாா். அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடி, கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.

பெரியபுலியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் விவரம் குறித்துகேட்டறிந்தாா். பெரியபுலியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எம்ஜிஆா் நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள், சலங்கபாளையம் கிராம நிா்வாக அலுவலகம், சலங்கபாளையம் பேரூராட்சியில் சிறுவா் பூங்கா பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த முகாமில் சாா்-ஆட்சியா் எஸ்.சிவானந்தம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் பி.கணேசன்,வட்டாட்சியா் சித்ரா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், வரதராஜன், நகராட்சி ஆணையா் மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *