பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டதால் –  கலக்கத்தில் திமுக.

ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .அதன்படி இன்று அவர்களின் சொத்து பட்டியலும் வெளியிட்டுள்ளார்.

இது முதல் கட்டமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து கோடிக்கு மேல் அமைச்சர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் சபரீசன் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் மீது பினாமி சொத்துக்கள் குடும்ப சொத்துக்கள் வெளிவந்துள்ளது. இது தமிழக மக்களிடையே எப்படிப்பட்ட ஒரு அரசியல் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் ?

மேலும், அதற்கு திமுக தரப்பிலிருந்து எப்படிப்பட்ட பதில்கள் வரப்போகிறது? ஏனென்றால், திமுகவில் வாய் சொல் வீரர்களுக்கு பஞ்சம் கிடையாது. நாட்டில் உழைப்பவன் ,நேர்மையானவன் முன்னுக்கு வர முடியவில்லை. ஆனால் இவர்களுடைய சொத்து பட்டியல் மட்டும் பல லட்சங்களை தாண்டி நீண்டு கொண்டே போகிறது. மக்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள்? அரசியல் என்பது மக்களை ஏமாற்றுவதற்கா? அல்லது நல்லவர்கள் வேஷம் போட்டு கொள்ளையடிப்பதற்கா? அரசியல் என்றால் உழைக்காமல் கொள்ளையடித்துக் கொள்ளும் கூட்டமா…?

இந்த சொத்து பட்டியல் அண்ணாமலை சிபிஐக்கு கொடுக்கும்போது, இந்த வழக்கு விசாரணை மிகப் பெரிய அளவில் செல்லும். ஆகக் கூடிய தமிழ்நாட்டில் இனி இவர்களுக்கு இந்த வேலையை பார்க்கத்தான் நேரம் இருக்குமே ஒழிய, மக்கள் வேலையை பார்ப்பதற்கு நேரம் இருக்காது.

மேலும், ஆளுநர் ஆர் என் ரவி ,பள்ளி மாணவர்களிடையே பேசும்போது ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வந்துள்ளது என்பதை தெரிவித்துள்ளார் .இதில் உண்மை உள்ளது. ஆதாரம் இல்லாமல் அவர் பேசி இருக்க மாட்டார் .ஆனால், ஒரு ஆளுநர் இதை எல்லாம் ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்? அரசியலுக்கு வந்து நேர்மையானவர்கள் என்று தங்களை மக்களிடம் காட்டிக் கொள்ளும் போது பொதுமக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொன்னால் அது தவறு என்று சட்டமன்றத்திலே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

இப்படி ஊழலை செய்வதற்கும், செய்த ஊழலலை மறைப்பதற்கும், தன்னுடைய திறமை ,தகுதி எல்லாவற்றையும் வாய்ஸ் வீரர்களாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு இந்த தமிழக மக்கள் ஏமாற போகிறார்கள்?

 மேலும், அதிகாரிகள் அதனால் தான் பொதுமக்கள் தருகின்ற ஊழல் புகார்கள், பத்திரிகைகள் வெளியிடும் உண்மை செய்திகள், எதற்கும் நடவடிக்கை இல்லை. இதிலிருந்து என்ன தெரிந்து கொள்வது? என்றால் ,பொதுமக்கள் நீங்கள் நேர்மையானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட முடியும்.மக்கள் தான் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.மேலும்,

இன்று சாமானிய மக்கள் படுகின்ற துன்பங்கள், துயரங்கள், எவ்வளவு என்பது சொல்ல முடியவில்லை. ஓட்டு போடும் வரை காலில் விழுந்து கட்சிகாக கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்கள், பிறகு அவர்கள் காலில் விழுந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். எந்த கதறளும் கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு காதில் விழுவதில்லை .அது அவர்களின் சுயநலம். அதனால் தான், இவர்களும் பல கோடியில் இன்று சொத்துக்களை குவித்து இருக்கிறார்கள்.

இதனால் வரை, சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுப்பதில்லை. எதற்காக என்றால், கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை தொலைக்காட்சிகள் போல், பொய் சொல்லாமல் உண்மையை எடுத்துச் சொல்லும் போது, உண்மைக்கு மக்களும் ஆதரவு தரவில்லை. இந்த ஆட்சியாளர்களும் ஆதரவு தரவில்லை .அதனால், பொது மக்களை போல் இந்த பத்திரிகைகளும் போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு சமூக நலன் போராட்டம்.

மேலும், மக்களுக்கும், அரசியல் குடிகாரர்களுக்கும், குடிகாரர்களுக்கும், தேர்தல் என்பது அவர்களுக்கு ஒரு கச்சேரி போல் ஆகி விட்டது. மேலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டுக் கொண்டிருக்கும் மகளிர் குழுக்களுக்கும், இந்த உண்மைகள் தெரியாதவர்களா? தெரிந்து செய்கின்ற தவறு. இன்று ஏழைகளும், நடுத்தர மக்களும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,ஒரு சிறிய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள், கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டு, நடந்து சென்றவர்கள், பைக்கில் போனவர்கள், அடுத்த சில மாதங்களிலேயே எல்லோரும் காரில் பயணம் செய்கிறார்கள்.

இது எதனால்? இவர்கள் எல்லோருடைய நினைப்புகள், அதாவது கிராமத்து பஞ்சாயத்து தலைவர் முதல் எம்எல்ஏ, எம்பி ,மந்திரி வரை இந்த மக்களை நாம் காசு கொடுத்து விலைக்கு வாங்கி விட்டோம் என்ற நினைப்பில் தான் அவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான், இந்த மக்களே ஊழலுக்கும், அரசியலில் கொள்ளை அடித்துக் கொள்ளவும், அவர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கிறார்கள். நமக்கு காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட அடிமைகள். அடிமைகளை விலைக்கு வாங்கி விட்டோம்.

மேலும்,தேர்தலில் இத்தனை கோடி செலவு செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். அதற்கு நூறு மடங்கு பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்ற தைரியத்தில்தான் ,அரசியலில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் தமிழக மக்கள் இனியும் ஏமாந்து காசு வாங்கி ஓட்டு போட்டு, பின்னால் கதறுவதால் எந்த லாபமும் இல்லை என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்களோ? அப்போதுதான் இதற்கெல்லாம் ஒரு சரியான அரசியல் தீர்வு உங்களால் ஏற்படுத்த முடியும்.

 அதுவரையில் இந்த ஊழல்வாதிகள் இடம் நீங்கள் அடிமைகளாக, அவர்களுடைய நல்லவர்கள் வேஷத்தில் ஏமாந்து கொண்டிருப்பீர்கள் என்பது உறுதி.. அரசியல் என்பது உங்களுக்காக, உங்களின் நலனுக்காக, ஆனால், எப்பொழுது அவர்களுடைய நலனில் அக்கறை எடுத்து கோடிகளை எடுத்துக் கொண்டு போகிறார்களோ, அப்போதவது உங்களுக்கு உண்மை புரிகிறதா? புரிந்தால், வருங்கால சந்ததிகளின் வாழ்க்கை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *