பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். அவருடைய அரசியல் பேச்சு உண்மையிலேயே அது தவறானது என்று சொல்ல முடியாது.ஏனென்றால், திமுகவின் அரசியல் தவறுகளை தான் ஒவ்வொன்றாக அடுக்கி வருகிறார். அது அவர்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். அல்லது வேதனையாக கூட இருக்கலாம்.
ஆனால் அதிலிருந்து அவர்களும் திருந்தி நல்ல வழிக்கு வந்து விடுவார்களா? என்றால் அது முடியாத காரியம். ஒரு மனிதன் நல்ல செயல்களுக்கும், கெட்ட செயல்களுக்கும் ,அவனுடைய பிறப்பு என்ற விதியால் எழுதப்பட்டிருக்கிற ஒரு உண்மை. சொல்லப்போனால் அது ஒரு கர்மாவின் செயல் .
இன்று வந்து ஒருவன் நல்லவனாக இங்கு மாறிவிட முடியாது .அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவன் மாறிவிட்டாலும் ,அதையும் சொல்ல முடியாது. யார் எந்த வேலைக்கு வந்திருக்கிறார்களோ, அந்த வேலையை அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அதனால், திமுக தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளுமா? என்றால் அது முடியாது.
ஒரே நாளில் திருடன் நல்லவனாக மாறி விட முடியாது. ஒரே நாளில் நல்லவன் திருடன் ஆகிவிட முடியாது. இதற்குள் நிறைய உண்மைகள் இருக்கின்றன. அப்படித்தான், இந்த தமிழ்நாட்டின் அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணாமலை சொன்னது போல, இந்த மக்கள் இந்த அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், சில காலம் அதை சுமந்து, அந்த வேதனையுடன் தான் அவர்களும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது.மேலும்,
இயற்கையின் நியதியில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது அதை மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை தான் அண்ணாமலை தெளிவாக சொல்லி இருக்கும் இந்த அரசியல் பேச்சு. அது மட்டுமல்ல, இவர்களுடைய அரசியல் மக்களுக்கு வேதனை என்றால், அவர்களுக்கு சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கிறது. இது கூட தெரியாமல் கார்ப்பரேட் கம்பெனி அதை எல்லாம் விளம்பரப்படுத்தி இன்றைய தமிழ்நாட்டு ஊடகங்கள் கூலிக்கு மாரடிக்கிறது.
கூலிக்கு மாரடித்தாலும் உண்மைக்கு மாரா அடிக்க வேண்டும். அந்தப் பொய்களை எல்லாம் மக்களிடம் திணித்துக் கொண்டு, மக்களை முட்டாளாக்குவது பெரிய காரியம் அல்ல. உண்மையை சொல்வதற்கு தகுதியில்லாத ஊடகங்கள் தன்னை பெரிய ஊடகங்கள் என்று பிரபலப்படுத்திக் கொள்வது அதைவிட முட்டாள்தனமான வேலை எதுவும் இல்லை .இந்த உண்மைகள் அரசியலும், பத்திரிகையும் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை.