ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram

வன்னியர் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு சங்கம் வன்னியர் சங்கம். பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. முதலில் சங்கம்தான், பிறகுதான் கட்சி. இப்படி உருவாக்கப்பட்ட ஒரு சங்கத்தின் கட்சி,தற்போது ராமதாஸின் குடும்பம் கட்சியாக அது மாறி விட்டது.இவர்களுக்கு உள்ளே அதிகாரப்போட்டி அப்பன்,பிள்ளை தகராறு, மகள் வயிற்று பேரன் தகராறு, இப்படி இருந்தால் இது எப்படி வன்னியர் சமுகத்திற்கு நல்லது செய்யப் போகிறது? மேலும்,
தகுதி, தரம், குணம், படிப்பு இதைப் பார்த்து வாழ்ந்த போது, சமுதாயம் நன்றாக இருந்தது. கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை பார்த்து, நாமும் கொள்ளையடிக்கலாம் என்று சூடு போட்டுக் கொண்ட சமுதாயமாக பார்க்க முடிகிறது. விவசாயத்தை நம்பி, உழைப்பை நம்பி, இருந்த வரைக்கும் வன்னியர் சமுதாயம் உண்மையிலேயே பெருமைக்குரிய சமுதாயமாக இருந்தது. அதை எல்லாம் கூட்டிச் சுவராக்கி கெடுத்த வரலாறு ராமதாஸுக்கு உண்டு. இனி சமுதாயத்தில் தர மானவர்கள், தகுதியானவர்கள் இவர்களை ஏற்க மாட்டார்கள் .மேலும்,
வன்னியர் சமூகத்தை அழிக்கவும், அவர்களை சுரண்டி சாப்பிடவும், கேவலப்படுத்தவும், பாட்டாளி மக்கள் கட்சி, எந்த ஊரிலும் இவர்களுக்கென்று ஒரு நல்ல பெயரை எடுக்கவில்லை. அந்த அளவிற்கு இவர்கள் இந்த சமூகத்தின் விரோதிகளாகத் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் மானமுள்ள எந்த வன்னியரும் ராமதாஸ் கட்சியில் இருக்க மாட்டான். ராமதாஸ் எப்படி சுயநலமாக இருக்கிறாரோ, அதே மாதிரி தான் இவர்களும் சுயநலமாக தான் இருப்பார்கள். உன் வீட்டுக்கும், உனக்கும், ஊர் சொத்துக்கும், இந்த சமுதாயத்தை வைத்து ஜாதியை வைத்து சுரண்டி சாப்பிட வன்னியர்கள் முட்டாள்களாக இருந்தால் தான், அதை ஏற்றுக் கொள்வார்கள். தகுதி உள்ள ,மானமுள்ள வன்னியர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இதனால் சில பேருக்கு வெறுப்பு, கஷ்டம் கூட இருக்கலாம். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை .இந்த சமுதாய நன்மைக்காக தான், இந்த கருத்தை தெரிவிக்கிறேன். இது உண்மை என்று ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக் கொள்ளட்டும். ஏற்றுக்கொள்ளாதவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
அதனால், இனியாவது தமிழ்நாட்டில் இந்த கட்சிகளை எல்லாம் தூர தூக்கி வைத்து விட்டு, ஒருவனுடைய தனிப்பட்ட தகுதி என்ன? நேர்மை என்ன? அவனுடைய உழைப்பு என்ன? தியாகம் என்ன? இதுதான் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளர்களின் முக்கிய தேர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சியில் இருக்கும் பிராடுகள், கிரிமினல்கள் வாக்கு கேட்டு வர மாட்டார்கள். அவர்களுக்கு தகுந்த தண்டனை மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பது நிறுத்த வேண்டும்.மேலும்,

வன்னியர் ஜாதியில் தான், பெரும்பாலும் நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலோ, நகரத்திலோ, மாவட்டத்திலோ, இந்த ஜாதிக்காக என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை வன்னியர்கள் தான் பட்டியல் போட்டு சொல்ல வேண்டும்.
மேலும், இவர்கள் ஜாதியை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்களா ? அல்லது இவர்களை வைத்து ஜாதிப் பிழைத்துக் கொண்டிருக்கிறதா? தவிர, ராமதாஸ், அன்புமணி, இவர்கள் இதுவரை இந்த ஜாதிக்காக அரசியலில் என்ன வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்? இதை வன்னியர்கள் பட்டியல் போட முடியுமா? இட ஒதுக்கீடு பிரச்சனையை இந்த கட்சி ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரை, இதையே சொல்லி இந்த வன்னிய சமுதாயத்தை ஏமாற்றிய ஒரு கூட்டம் ராமதாஸ்.
இப்போதாவது இந்த உண்மைகள் சமுதாயத்திற்கு இது காதில் விழுமோ, விழாதோ தெரியவில்லை. அல்லது புரியுமோ, புரியாதோ தெரியவில்லை. என்னுடைய கடமை சொல்லி விட்டேன். புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்ளட்டும், புரியாதவர்கள் போகட்டும்.
மேலும், இவர்களுக்கு கட்சிக்கு அர்த்தம் தெரியாது. எதற்காக இந்த கட்சி ஆரம்பித்தது ?அதன் நோக்கம் என்ன? அதுவும் தெரியாது. சமுதாயத்துக்காக ஒரு கட்சியை ஆரம்பித்து, கட்சியே சமுதாயத்தை சுரண்டுவதற்கும், அழிப்பதற்கும், இருந்தால், தவறு சமுதாய மக்களிடமே உள்ளது என்பதை சிந்தித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கே புரியும்.