பாபா ரீ-ரிலீஸ்..ரஜினி முடிவெடுத்தது எதனால்?..2-கே கிட்ஸை குறி வைக்கும் படமா? ..வெற்றி கிடைக்குமா?

சினிமா ட்ரெண்டிங்

ரஜினிகாந்த் பாபா படத்தை திடீரென ரீ.ரிலீஸ் செய்ய முடிவெடுக்க காரணம் என்ன?

விஜய், கமலின் திடீர் வெற்றியை வைத்து ரஜினிகாந்த் ரசிகர்களின் பல்ஸை பார்க்க முடிவெடுத்துள்ளாரா?

கண்டாரா, பிரம்மாஸ்திரா வெற்றியை அடுத்து பாபாவை ரீ.ரிலீஸ் செய்ய முடிவெடுத்தாரா?
இளம் ஹீரோக்களை எதிர்பார்த்த தமிழ் திரையுலகம் நடிகர் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தார். சாதாரண நடிகராக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்த ரஜினிகாந்த் அதன் பின்னர் வில்லன், ஹீரோவின் நண்பர் போன்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். 80 களின் ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பெரிய நடிகர்களின் திரைத்துறை வாழ்க்கை இறுதி கட்டத்தை நெருங்கிய நேரம். இளைஞர்களை தமிழக மக்கள் தேடிக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது புதிய வரவாக விஜயகுமார், மாஸ்டர் சேகர், கமல்ஹாசன் போன்றோர் திரைக்கு வந்திருந்தனர். ரஜினிகாந்த் சாதாரண வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

பாட்ஷா பட விழாவில் ரஜினி பேசிய பேச்சு அவருக்கு சிக்கலை கொண்டு வந்தது. 96 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு உதவிய ரஜினி 96 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு உதவிய ரஜினி அவர் பேசுகின்ற வசனங்கள் எல்லாம் அப்போதைய ஆட்சிக்கு எதிரான வசனங்களாக பார்க்கப்பட்டது. ரஜினி விரும்பியோ விரும்பாமலோ அவர் ஒரு இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நேரத்தில் 96 ஆம் ஆண்டு தேர்தல் வந்தது ரஜினியின் நெருங்கிய நண்பரான ‘சோ’,. ஆனால் 98 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை.

இந்த நேரத்தில் தான் 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் சொந்தமாக கதை எழுதி சொந்த தயாரிப்பில் பாபா படத்தை எடுத்தார். அதற்கு முன்னர் படையப்பா என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருந்த ரஜினி மூன்றாண்டு இடைவெளியில் பாபா படத்தை தானே எழுதி, தயாரித்திருந்தார். இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா. பாபா படத்தில் ரஜினியை புறக்கணித்த ரசிகர்கள் பாபா படத்தில் ரஜினியை புறக்கணித்த ரசிகர்கள் அந்த படம் ஒரு வகையான ஃபேண்டஸி பிக்சர் என்பதாலும், நம்ப முடியாத காட்சிகள் நவீன உலகில் நடப்பதாக வழக்கமான ரஜினி படத்திலிருந்து வேறு ஸ்டைலில் இருந்ததாலும், ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்த ரஜினிகாந்த் ஆக இல்லாமல் டல்லாக ஒரு விதமாக ரஜினி காட்சி அளித்ததாலும் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடவில்லை. மற்றொருபுறம் பாமக உடன் ரஜினிக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக பல இடங்களில் பாபா படத்தை ஓட விடாத சூழ்நிலையே இருந்தது. இதனால் பாபா படம் ரஜினி வாழ்க்கையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான ஒரு தோல்வியை சந்தித்த படமாக இருந்தது. தோல்வியை வெற்றியாக்கிய சந்திரமுகி படம் தோல்வியை வெற்றியாக்கிய சந்திரமுகி படம் இது ரஜினி மனதில் ஆறாத வடுவாக மாறியது. தனது படம் தோல்வி அடைந்தாலும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டம் அடைய கூடாது என்கிற எண்ணத்தில் அவருடைய நஷ்டத்தை ரஜினி ஈடு கட்டினார். இது ஒரு புறம் இருக்க தன்னுடைய தோல்வியை தொடர விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ரஜினிகாந்த் உடனடியாக சாந்தி பிலிம்ஸ் மூலம் சந்திரமுகி படத்தை நடித்துக் கொடுத்தார். இந்த படத்துக்காக அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து புதிய பொலிவுடன் கம்பீரமான ரஜினி ஆக தோன்றினார். வடிவேல் காமெடி ரஜினியின் அசத்தலான தோற்றம் பாடல்கள் என அந்த படம் 800 நாளுக்கு மேல் ஓடியது. உலகம் முழுவதும் வசூலில் முதல் இடத்தில் ரஜினி உலகம் முழுவதும் வசூலில் முதல் இடத்தில் ரஜினி ரஜினி நான் யானை அல்ல குதிரை விழுந்தா சட்டுனு எழுந்து ஓடுகிற குதிரை என்று வெற்றி விழாவில் ரஜினி பேசும் அளவிற்கு பெரிய பெயரை பெற்று தந்தது. அதன் பின்னர் ரஜினிகாந்த் பல வெற்றி படங்களை கொடுத்தார். இன்றளவும் தமிழில் முன்னணி நடிகர், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நடிகர், தமிழகம், தமிழகம் தாண்டி வெளி மாநிலங்கள், ஓவர்சீஸ் மார்க்கெட் என எங்கு திரும்பினாலும் அங்கு கால் பதித்து நிற்பது ரஜினியின் படங்களே

அதிலும் ஆன்மிக வகை பேண்டஸி படங்களுக்கு மவுசு கூடி உள்ளது. ரஜினி நடித்த பாபா படம் வந்த பொழுது குழந்தைகளாக இருந்த பலரும் இன்றைக்கு இளைஞர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாபா படத்தை அறிமுகப்படுத்த நினைக்கிறார் ரஜினிகாந்த். இதன் மூலம் ஒரு பெரிய அளவில் வெற்றியை சாதிக்க நினைக்கிறார். ரஜினிக்கு அருகில் நெருங்கி வரும் விஜய், கமல், அஜித் ரஜினிக்கு அருகில் நெருங்கி வரும் விஜய், கமல், அஜித் மற்றொருபுறம் என்னதான் ரஜினிகாந்த் ஓடிக் கொண்டிருந்தாலும் அவருக்கு மிக மிக அருகில் நெருங்கி வந்து விட்டார் விஜய். ரஜினியின் சக போட்டியாளராக 1980 முதல் இருந்த கமல்கூட விக்ரம் படம் கொடுத்து 400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து லைம் லைட்டுக்கு வந்துவிட்டார். ஆகவே ஜெயிலர் படம் வருவதற்கு முன் பாபா படம் மூலம் தனது உண்மையான ரசிகர் கூட்டம் குறித்து பல்ஸ் பார்க்க விரும்புகிறார். அதற்காக பாபா படத்தை ஜெயிலர் படத்துக்கு முன் வெளியிட விரும்புகிறார் ரஜினி என்கிறார்கள். தோல்வி படத்தை ஏன் எடுத்து ரீ ரிலீஸ் செய்கிறார். தோல்வி படத்தை ஏன் எடுத்து ரீ ரிலீஸ் செய்கிறார். மறுபுறம் ரஜினியின் புகழ்பெற்ற வெற்றிப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யாமல் தோல்வி படமான பாபாவை ரீ.ரிலீஸ் செய்து வெளியிட என்ன காரணம் என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது.

அதற்கு படத்தின் இயக்குநர் சமீபத்தில் பாபா படம் குறித்த சந்திப்பில் ரஜினியுடன் பேசியது பற்றி கொடுத்த பேட்டியை எடுத்துக்கொள்ளலாம். ஃபாண்டசி வகை அதிலும் ஆன்மிகம் கலந்த ஃபாண்டசி வகை படங்கள் வெற்றிகரமாக ஓடும் காலம், காந்தாரா, பிரம்மாஸ்திரா போன்ற படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன. ஆகவே இந்த நேரத்தில் பாபா படத்தை புதிதாக ரீ மாடிஃபை செய்து வெளியிடுவதன் மூலம் வெற்றிப்படமாக்கினால் பாபா தோல்விக்கு காரணம் அன்றைய அரசியல் சூழலே என்பதை நிரூபித்ததாக இருக்கும், தன்னுடைய சொந்தப்படத்தின் தோல்வியை மாற்ற விரும்புகிறார் ரஜினி என்கின்றனர். புது படம் போல் பாபா-வுக்கு செய்யப்படும் ப்ரமோஷன் புது படம் போல் பாபா-வுக்கு செய்யப்படும் ப்ரமோஷன் பாபா படம் டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாள் அன்று வெளியாகிறது. இந்தப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரஜினி எடுக்கும் முனைப்பு நன்றாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் தினமும் பாபா பற்றிய செய்திகள் அதிகம் பகிரப்படுகிறது. காட்சித்துண்டுகளை வெட்டி ட்விட்டர் பிரபலங்கள் மூலம் ப்ரமோஷன் செய்யப்படுகிறது. என்ன செய்தாலும் பழைய படம் பழைய படம் தான் என்கிற முடிவுக்கும் ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது. என்னதான் புதிதாக செய்துள்ளார்கள் என்று பார்க்கவும் வாய்ப்புள்ளது. இது பான் இந்தியா படமாகவும் ரீ.ரிலீஸ் செய்யப்படுகிறது. புதிய பொலிவுடன் வரும் படம் என்பதால் பாபா கைகொடுப்பார் என்றே தெரிகிறது. முடிவு தமிழ் ரசிகர்கள் கையில்.