பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்பு பாரதிய ஜனதா கட்சி தான் வெற்றி பெறும் என்றெல்லாம் வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் ,சோசியல் மீடியாக்களின் ஆதரவாளர்கள் பேச்சு,,பத்திரிகைகளின் சப்போர்ட் ,இவை எல்லாம் தூக்கி எறிந்து விட்டது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள். மேலும்,
காங்கிரஸ் கட்சி ஊழலில் மிகப்பெரிய அளவில் நாட்டை சீர்குலைத்த போதிலும், நாட்டின் பாதுகாப்புக்கு தீவிரவாதம், அந்நிய நாடுகளின் சதி, இவை எல்லாம் அச்சுறுத்தலாக இருந்த போதிலும், தவிர, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல நாடுகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வட்டி கட்டி அதை எல்லாம் சரி செய்த பெருமை பிஜேபிக்கு உண்டு. மேலும்,ஏழை எளிய மக்களுக்காக பிரதமர் மோடி நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி, நாட்டை வளர்ச்சிக்கு வித்திட்ட போதிலும், கொரோனா போன்ற இக்கட்டான காலங்களில் மக்களின் பேரழிவை தடுத்து நிறுத்திய போதிலும், உண்மையை சொல்லப்போனால், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் ஒரு நல்லாட்சியை கொடுத்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை, அது கடந்த 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது அதையெல்லாம் விட சிறப்பான ஆட்சி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி.
அப்படி இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தான் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் 14 அமைச்சர்களே தோல்வியுற்றிருக்கிறார்கள். அவர்கள் யார்என்றால், கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி – தோல்வி,ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர், டி.கே.சிவகுமாரை எதிர்த்து சன்னபட்னா தொகுதி – தோல்வி; பத்மநாபநகர் தொகுதி – வெற்றி.பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர், பெல்லாரி ஊரகம் – தோல்வி.முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர், பீளகி தொகுதி – தோல்வி.வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் – 2 இடங்களிலும் தோல்வி,
டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர், சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி – தோல்வி.ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர், எல்புர்கா தொகுதி – தோல்வி.எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர், ஒசகோட்டை தொகுதி – தோல்வி.கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர், கிருஷ்ணராஜ் பேட் தொகுதி – தோல்வி,பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர், ஹிரேகேரு தொகுதி – தோல்வி.ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர் – சிக்கநாயகனஹள்ளி தொகுதி – தோல்வி,சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, சிர்சி தொகுதி – தோல்வி,பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்- திப்தூர் தொகுதி – தோல்வி,சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர் நாவல்குண்ட் தொகுதி – தோல்வி.
அங்கே என்ன மாதிரியான ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி கொடுத்து இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது? என்னதான் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உண்மையாகவே மக்களுக்காக உழைத்தாலும், அல்லது நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினாலும், அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உழைக்காமல் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு காண்பது தவறு. அடுத்தது மக்கள் பிரச்சனைகள் காதில் வாங்காமல், ஆட்சியை நடத்தியது இரண்டாவது தவறு. அது மட்டுமல்ல, ஊழல் செயல்பாடுகள் நிர்வாகம் இதையெல்லாம் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினால் மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள். மேலும்,
ஒவ்வொரு வாக்காளர்களுக்கும், பணமும், பரிசுப் பொருட்களும் அதாவது காங்கிரஸ் கட்சி முதலில் 5000 ரூபாய் மற்றும் பட்டு சேலை, அது தவிர கூப்பன் இவை எல்லாம் கொடுத்து மக்களை படுகுழியில் தள்ளி இருக்கிறது. இதைதான் இந்த நாட்டுக்கு சட்டம் இயற்றிய அம்பேத்கர் வெள்ளைக்காரனைவிட, இந்த கொள்ளைக்காரர்களை ஆட்சியில் அமருவதற்கு வழிவகை செய்து இருக்கக்கூடிய ஓட்டை சட்டம் தான் கொண்டு வந்துள்ளார். இந்த ஓட்டையை அடைக்க தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவிர,
அரசியல் தெரியாத மக்களிடம் இது போன்ற குறுக்கு வழியில், உழைக்காமல் பணம் கொடுத்து ,பரிசு பொருட்களை கொடுத்து, ஏலத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளைக்காரன் படித்தவர்கள், பட்டதாரிகள், தகுதியானவர்கள், அவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வைத்தது இப்போதாவது புரிந்ததா?இது,
கர்நாடக தேர்தலில் மக்கள் சொல்லி இருக்கும் பாடம்.
அதே போல் தான், தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை சாமானியர்கள் மட்டுமல்ல, எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் போன் செய்தால் கூட எடுப்பதில்லை. நான் அது பற்றி சில நிர்வாகிகளிடம் குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் போன் செய்தால் கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள். இவர்களை எப்படி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க போகிறார்கள்?
தவிர, சோசியல் மீடியாக்களில் ட்விட் போட்டுக் கொண்டு, மீடியாக்களில் பேட்டி கொடுத்து பேசிக் கொண்டிருப்பது, ஆட்சியைப் பிடிக்க முடியாது. மக்களிடம் நெருங்காமல் ,அவர்களுடைய குறை ,நிறைகளை நிறைவேற்றாமல் அல்லது அவர்களுடைய பிரச்சனைகள் என்ன என்று கூட காது கொடுத்து கேட்காமல் ,இனி எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், கர்நாடக தேர்தல் முடிவுகள் தான் என்பதை மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள்.
மேலும், இதே பாரதிய ஜனதா கட்சி உத்தரபிரதேசத்தில் ஏன் அங்கே முன்னிலை வகிக்கிறது? அங்கே யோகி ஆதித்யநாத் நிர்வாகம் செயல்பாடு மக்களுக்காக இருக்கிறது .அங்கே தலைமை மக்களுக்காக இருக்கும்போது, கீழ் பணியாற்றுபவர்களும் மக்களுக்காக மாற வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். இனிமேலாவது பாரதிய ஜனதா கட்சி மோடி செய்கிறார், அமித்ஷா செய்கிறார் என்றெல்லாம் இருந்தால், வேலைக்காகாது.
எப்போது மக்களோடு மக்களாக நின்று செயல்பட போகிறார்களோ, அப்போதுதான் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த வெற்றியை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது கர்நாடக தேர்தலில் மக்கள் சொல்லி இருக்கும் பாடம்.