பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர்  தீவிரவாதிகளை அழிப்பதற்கா ?அல்லது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கா?

அரசியல் இந்தியா உலகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால சில இடப் போராட்டம் ஒரு பக்கம், இந்த இடப் போராட்டத்தில் தீவிரவாதிகள் அங்கு முழுமையாக ஆக்கிரமித்த நாடாக பாலஸ்தீனத்திம் உள்ளது .அங்கிருந்து பல நாடுகளுக்கு அவர்கள் ஆட்களை அனுப்பி, அந்த நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ,அந்த நாட்டுக்கு எதிராக நாச வேலை செய்வதும் இது ஒரு தொடர்கதை.

 இப்படிப்பட்ட சூழலில் தான் இஸ்ரேலுக்கும் ,பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், பாலஸ்தீனத்திற்கு முஸ்லிம்களின் சில நாடுகளும், ஈராணும் ஆதரவு  தெரிவித்துள்ளன. இது மூன்றாம் உலகப் போர் ஏற்படுமா? என்ற அச்சத்தையும், உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது .இருப்பினும் ஐநா சபை இந்தப் போரை நிறுத்துங்கள் என்று சொல்லியும் ,இரு நாடுகளும் போரை நிறுத்தவில்லை.

 இதில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இஸ்ரேல் பக்கம் நியாயம் இருக்கிறது. அங்குள்ள இஸ்ரேல்  மக்களை அநியாயமாக முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்தி இருக்கிறார்கள் இது ஒரு பக்கம், இது மதத்திற்கான போரா? அல்லது தீவிரவாதத்திற்கான போரா? அல்லது நாட்டை பிடிப்பதற்கான போரா ?இப்படி எல்லாவற்றையும் சேர்ந்த ஒரு போராகத் தான், இஸ்ரேல் – பாலஸ்தீன போர் இருந்து வருகிறது.

தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக இந்தப் போரில், இதுவரை யாருக்கு முன்னேற்றம்? யாருக்கு பின்னடைவு? என்பது இன்னும் சரியான தகவல்கள் இல்லை. இதில் எந்த பக்கம் அதிக உயிர் சேதம் அடைந்துள்ளது? எந்த பக்கம் கட்டிடங்கள்  தரைமட்டமாக்கப்பட்டுள்ளது? என்பது போரின் முடிவில் தான் தெரியும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *