ஒரு காலத்தில் உயர்வகைப்பினருக்கு மட்டுமே கல்வி என்ற நிலை இருந்ததை, பின்தங்கிய மக்களுக்கு கல்விச் செல்வத்தை கொண்டு வந்து சேர்த்தவர் கர்மவீரர் காமராஜர். அவருடைய ஆட்சியில் ஊழல் என்பது பொதுமக்களுக்கு தெரியாத ஒன்று .
அவருடைய ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது .அப்போது அவர் உருவாக்கவில்லை என்றால் இன்று தமிழகம் எவ்வளவு பெரிய நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. அது மட்டும் அல்ல, அவர்களுடைய அரசியல் நேர்மை, உழைப்பு, தியாகம் இதுதான் தமிழகத்தை தலை நிமிர வைத்தது.
அவர் காலத்தில் முதல்வர்கள்ஆட்சி மாறி இருந்தாலும், தமிழகம் வளர்ச்சியில் தான் இருந்தது. இப்போது கேட்கலாம் என்ன வளர்ச்சியில் இருந்தது என்று? அன்றுஒன்றுமே இல்லாமல் இருந்த நிலையில், உருவாக்கி வைத்த பிறகு அதை வைத்து யார் வேண்டுமானாலும், உருவாக்கலாம். அவர் காலத்தில் மின்சாரம் கிடையாது. கிராமங்களில் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர், ஏரி ஆறு, குளங்களை தான் நம்பி இருந்தார்கள்.
அதன் பிறகு கிணறுகள் வெட்ட கடன் கொடுத்துள்ளார்.மின்சாரம் கொண்டு வந்துள்ளார். தொழில் வளர்ச்சி கொண்டு வந்துள்ளார். கல்வியை கொண்டு வந்துள்ளார் .அப்போது அவர் காலத்தில்கல்வி வியாபாரம் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது. மேலும்+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்..
மேலும், அவர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் எதிர் கால கல்வியை தேர்வு செய்து கல்வியாளர்களாக வர வேண்டும் என்ற துடிப்புடன் இருந்து வரும் அனைவரையும் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தவறியவர்கள் மீண்டும் முயற்சிக்கவும். வெற்றி நிச்சயம்.