குஜராத்தில் தன்னுடைய பூர்வீக இடத்தில் எளிமையாக வாழ்ந்து ஹீராபின் மோடி காலமானார். அந்த அளவிற்கு தன் குடும்பத்தை சொகுசு வாழ்க்கையில் ஈடுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை. அவர்கள் அன்று எப்போது எளிமையாக வாழ்ந்தார்களோ ,அதே எளிமையோடு தான் வாழ்ந்து தங்கள் வாழ்நாளை கழித்திருக்கிறார்கள்.
மோடி நினைத்திருந்தால் தன் தாய் மட்டும் அல்ல, தன் குடும்பத்தையே டெல்லியில் கொண்டு வந்து வசதியில், சொகுசு வாழ்க்கையில், திளைத்து வைத்திருக்க முடியும் .ஆனால், அதை ஒருகாலும் நிறைவேற்றாமல் சத்தியத்தின் மீதும், தர்மத்தின் மீதும் ,கடவுளின் மீதும் நம்பிக்கை கொண்ட மோடி! ஆட்சியை மக்களுக்காக செய்து வருகிறார் .
இருப்பினும், எவ்வளவோ குறைகள் சொல்ல முடியும். எப்படி நேர்மையானவராக இருந்தாலும், அவர் மீதும் குறைகள் ,புகார்கள், சொல்ல முடியும். காரணம், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் செய்த ஊழல்கள், மோசடிகள், 50 ஆண்டுகால இந்தியாவின் வரலாற்று ஆட்சியாக இருந்தது. அதை ஒரே நாளில் யாராலும், தடுத்து நிறுத்த முடியாது.
அதை எந்த அளவுக்கு குறைத்து ஒரு மனசாட்சியுடன் செய்திருக்கிறார் என்றால், அது பற்றி அரசியல் தெரிந்தவர்கள் மற்றும் தகுதியான, தரமான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. வாய்க்கு வந்தபடி பேசுவது, ஏமாற்றுவது இன்றைய அரசியல் ஆகிவிட்டது.அதுவும் தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமான அரசியலாக உள்ளது.
அதற்கும் ஜால்ரா அடிக்க, பத்திரிக்கை தொலைக்காட்சிகள் அது உண்மையா? பொய்யா? என்று கூட பார்க்காமல் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக தான் இங்கு உள்ளது. இதையெல்லாம் இளைய தலைமுறை உன்னிப்பாக நீங்கள் கவனித்து வாழ வேண்டும். இல்லையென்றால், உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
அந்த அளவிற்கு இந்த சமூகம் 50 ஆண்டுகால அதிமுக, திமுக அரசியல் வரலாற்றில் மக்களின் வாழ்க்கை தரும் உயராமல் ,அரசியல் கட்சியினர் வாழ்க்கை தரம் தான் உயர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் என்ன மிகப்பெரிய கொடுமை என்றால், இதில் ஒன்று, இரண்டு என சிலர் புகார்கள் நீதிமன்றத்திற்கு சென்றாலும் கூட, நீதிமன்றமும் அரசியல் தலையிட்டால் ,குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்பதுதான் நீதி தேவனே வருந்தக்கூடிய மிகப்பெரிய ஒரு துயரம். தவிர,
மோடி தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் ?என்பது கடவுளுக்கு தெரியும் .இருப்பினும், இந்த நாட்டு மக்களுக்காக ,ஒரு தேச பக்தி உணர்வுடன் எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்கு இடையில் அவர் வெற்றி என்னும் வாகை சூடி வருகிறார் என்றால், அவருடைய தாய் ,தந்தையர் செய்த புண்ணியம். இறைவன் அவருக்கு கொடுத்த ஒரு ஆற்றல் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் உண்மைகளை சொல்வதற்கு கூட தயங்குகின்ற இந்த பத்திரிகை உலகம், வருங்கால தலைமுறையை எப்படி வாழ வைக்கப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? சுயநலத்திற்காக பத்திரிக்கை என்றால், அதில் எவ்வளவோ டாம்பிகத்துடன் செய்திகளை கொடுத்து ஏமாற்ற முடியும். .அந்த வேலையை மக்கள் அதிகாரம் ஒரு காலும் செய்யாது.
எமது நோக்கம் நாட்டில் நல்லாட்சி தொடர, நல்லவர்கள் வாழ ,தர்மம் நிலை நிறுத்த ,மக்கள் அதிகாரம் தொடர்ந்து பாடுபடும். மேலும் பிரதமர் மோடிக்கு இத் தருணம் துயரமான சம்பவம் என்றாலும், ஒரு சத்தியத்தாயின் வாழ்க்கை மோடிக்கு! அந்த ஆத்மா எப்போதும் துணை இருக்கும் .அது மட்டுமல்ல, ஒரு நாட்டின் பிரதமரை பெற்றெடுத்த பெருமைமிகு தாயாக ஹீராபின் மோடி இறைவனடி சேர்ந்துள்ளார். அவருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், மோடி நினைத்திருந்தால் ராணுவ வண்டியில், ராணுவ மரியாதை உடன் கொண்டு சென்று இருக்க முடியும். ஆனால், ஒரு சாதாரண ஏழையின் தாய் எப்படி எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்வார்களோ ,அந்த முறையில் தான் அந்த தாய்க்கு பிரதமர் மோடி அடக்கம் செய்கிறார்.
அதையெல்லாம் பார்க்கும் போது, ஒன்றுமே இல்லாம ஒரு சிறிய அதிகாரத்தை வைத்து எவ்வளவு ஆட்டி படைக்கிறார்கள்? எத்தனையோ கிராமங்களை, நகரங்களை அடக்கிப் பார்க்கிறார்கள். இதை பார்த்தாவது அந்தக் கூட்டம் திருந்துமா?