பொது மக்களுக்கு தற்போது எது முக்கியமானது? எது வாழ்க்கைக்கு அவசியமானது? மக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது? என்பதை தேர்வு செய்து செயல்படுத்தி இருக்கிறார்- புதுவை முதல்வர் ரங்கசாமி.
இந்த திட்டங்கள் அனைத்தும், மக்களுக்கு வாழ்க்கையில் அத்தியாவசியமான திட்டங்கள். இதுதான் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள். இந்த திட்டங்கள் மக்களால் வரவேற்கப்பட்டு, புதுச்சேரி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தவிர, தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்கள் ஏன் கொண்டு வரக்கூடாது? என்ற ஏக்கமும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. இங்கே திட்டங்கள் போடப்பட்டு பேச்சளவிளே ,பத்திரிகை ,தொலைக்காட்சிஅளவிளே நின்று விடுகிறது. தமிழக மக்கள் சொல்வதையும் ,தொலைக்காட்சி ,பத்திரிகைகளில் செய்திகள் வருவதையும் பார்த்து தான், திருப்திப்பட்டு கொள்ள வேண்டும்.
பாண்டிச்சேரி முதல்வரின் செயல்பாடு போல், தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருவாரா? மேலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் கொடுக்கின்ற புகாரை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதி எங்கே? மேலும்,
தமிழ்நாட்டில் இருந்து பிரதமருக்கு அனுப்பப்படும் புகார்கள் (MY GRIVENCE PETITION ) எத்தனை லட்சம்? என்பதை கணக்கெடுத்தாலே, இங்குள்ள மாவட்ட ஆட்சியர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? என்பதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிந்து கொள்ளலாம்.
தவிர தேர்தல் வாக்குறுதியில் 100 நாட்களுக்குள் எந்த புகாரானாலும் முடித்து வைக்கப்படும் என்று சொன்ன வாக்குறுதி காற்றிலே, நீரிலே, அல்லது பேப்பரிலே சென்று விட்டதா ? மேலும்,
இதற்கெல்லாம் கூலிக்கு மார அடிக்கும் சிறிய, பெரிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் செய்திகள், விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பத்திரிகை நடத்துவது எதற்கு என்று தெரியாமலா? அல்லது ஆட்சியாளர்களின் அரசியலா? அல்லது பத்திரிகைகளின் சுயநலமா?
மேலும்,பொதுமக்கள் சிறிய, பெரிய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் செய்திகள் என்று பார்க்காமல், உண்மையான செய்திகள் எந்த பத்திரிகையில் வந்தாலும், எந்த தொலைக்காட்சியில் வந்தாலும், அதை கவனித்து படியுங்கள். அப்போதுதான் தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாக அவலங்கள் ,பொதுமக்களுக்கு புரியும். தவிர,
பத்திரிகை என்பது ஆட்சியாளர்களை பாராட்டுவதற்கும், புகழ் பாடுவதற்கும் பத்திரிகை தேவையில்லை. இதில் தினசரி, வாரம், மாதம் என்று எதுவாக இருந்தாலும் ,தன்னுடைய சுயலாபம், வியாபாரம் போன்றவற்றை படிப்பறிவு இல்லாத மக்களிடம்
அல்லது அரசியல் பற்றி தெரியாதவர்களிடம்,அரசியல் கட்சியினரிடம் வியாபாரம் செய்து பெரிய பத்திரிகை என்று பெயர் வாங்கிக் கொள்வது பெரிய காரியம் அல்ல.மேலும், அவர்களுடைய பாராட்டு பெருவதும் பெரிய காரியம் அல்ல.
பாராட்டு என்பது விவரமானவர்களிடமும், படித்தவர்களிடமும் வாங்குவது தான் பெருமை ,அதற்கு தகுதி அல்லாதவர்களிடம் வாங்குவது பெருமை அல்ல. தவிர, மக்களுடைய வரிப்பணத்தில்,
பத்திரிகை நடத்தி, பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லாமல் ,ஆட்சியாளர்களுக்கு மட்டுமே பத்திரிகையாக இருப்பது ,அது பத்திரிகையின் சுயநலம். இதற்கு நீதிமன்றம் பொதுநலத்துடன் தீர்ப்பு வழங்குமா? என்பதுதான் சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கை.
மேலும்,புதுவை முதல்வரின் திட்டங்கள், செயல்பாடுகள், அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளன. இதுவே மக்களுக்கான ஆட்சி. இதை தமிழக முதல்வர் ஸ்டாலினால் கொடுக்க முடியுமா ? தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.