பெரியார் அணைகளில் உள்ள தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கம் அரசியல் நோக்கம் என்ன? – தேனி மாவட்ட விவசாய சங்கங்கள்.

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

பெரியாறு அணையின் கொள்ளளவு 142 கன அடி  to 152 கன அடி கூட நீர்தேக்கலாம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள் . மேலும், இந்த நீர் தேக்குவதில் பெரியார் அணையில் என்ன பிரச்சனை இருக்கிறது?  மேலும், இதை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்காமல் ,பிற மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் செல்வதில் உள்ள அரசியல் என்ன?

 இது தவிர, இந்த தண்ணீர் திறந்து விடும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் விட தெரிந்த அளவிற்கு ,தகுதியான நேரத்தில் விவசாயிகளுக்கு தேனி மாவட்டத்தில் ஏன்? தண்ணீர் திறப்பதில்லை. மேலும், விவசாயிகள் இது பற்றி 15 நாட்களுக்கு மேலாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு போன் செய்தால் ,எடுக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன? மேலும், தேனி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்கள், எல்லோரும் ஒரு பெரும் படையுடன் தண்ணீர் திறக்கும் போது கூடி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து கொள்கிறார்கள்.

 ஆனால் ,இங்குள்ள பிரச்சனையை தேனி மாவட்ட விவசாயிகள், விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் .மேலும், விவசாயிகள் சொல்வது, ஊருக்கு இரண்டு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து ,கள்ளச் சந்தையிலும் வியாபாரம் செய்வது, மக்களின் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் இவர்கள், மக்களுக்காக உழைக்கும் விவசாயிகளின் பிரச்சனை என்ன? என்பது காது கொடுத்து கேளாமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருந்து வருகிறார்கள் என்பது தேனி மாவட்ட விவசாய சங்கங்கள் பொதுப்பணித்துறை மீது புகார் தெரிவித்து வருகின்றனர்.

 மேலும், இந்த மாவட்டத்தில் பெய்த மழை நீர் தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை நீர் எல்லாம் சேர்ந்து பெரியார் அணைக்கு வந்து சேர்ந்தது .இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5000 கன அடி வந்து சேர்ந்தது. வந்து சேர்ந்த தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரியார் அணையில் இருந்து, தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

இருப்பினும் ,தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கும், வைகை அணைக்கும், தண்ணீர் தேவையில்லை .இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவையில்லாத தண்ணீரை திறந்ததன் விளைவு பெரியார் அணையில் நீர்மட்டத்தின் அளவு 142 கனஅடி ஏற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டது.மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள் அணையில் நீர் இருப்பு உயர மற்றும் நீர்வரத்து அதிகரிக்க பதினெட்டாம் கால்வாய் ,பிடிஆர் கால்வாய், 58 ஆம் கால்வாய், திருமங்கலம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களுக்கு, குறிப்பாக தேனி மாவட்ட கால்வாய்களுக்கு வேண்டுமென்றே தண்ணீர் திறந்து விடாமல், அதற்கு பதிலாக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திடீரென்று வெளியேற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்ததன் அரசியல் நோக்கம் என்ன ?

மேலும், தண்ணீரை முறையாக சேமிக்காமல்,அதேபோல் முறையாக பாசனத்திற்கு விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் கொடுக்காமல், செய்கின்ற பொதுப்பணி துறையின் உள்ளடி வேலை மற்றும் அரசியல் பின்னணி என்ன?  என்பது தெரியாமல், தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?  அல்லது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா?  என்பதுதான் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் எதிர்பார்ப்பு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *