போலியான ஆவணங்கள் மூலம் ,போலியான விலாசம், ஆள் மாறாட்டம் போலி கையெழுத்துக்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளபத்திரத்தை ரத்து செய்து, நிலத்தை உரியவருக்கு ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

மே 03, 2024 • Makkal Adhikaram

காஞ்சிபுரம் மாவட்டம் ,வையாவூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தன்னுடைய புஞ்சை நிலம் தாயார் பெயரில் 3 ஏக்கர் 77 சென்ட் நிலம் இருந்துள்ளது . இந்த நிலத்தின் பத்திர காப்பிகள் எடுத்து போலியான ஆவணங்கள் மூலம், போலியான விலாசம், ஆள் மாறாட்டம், போலி கையெழுத்துக்கள் மூலம், பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

 இது சம்பந்தமாக சுப்பிரமணி சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ,கிராம நிர்வாக அதிகாரி ,தலைமைச் செயலக அதிகாரிகள் ,ஆகியோர்களுக்கு மனு அளித்து,நடவடிக்கை எடுக்காமல், சுமார் 15 வருடமாக இவரை அலைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடியான வேலை.

இந்த வேலைக்கு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், பத்திரப்பதிவுத்துறை அலுவலர் ,கிராம நிர்வாக அதிகாரி, இவர்கள் அனைவரும் இதற்கு உடந்தையாக செயல்படுகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலத்தை அபகரித்து வைத்திருப்பவர் கூட, அவருக்கு எந்த கட்சிக்காரர்? என்ற பெயர் கூட சொல்ல தெரியவில்லை.

 அந்த அளவிற்கு அவர் ஒரு படிப்பறிவு இல்லாத நடுத்தர ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். இதற்காக அவர் போராடி எத்தனை நாள் மன உளைச்சலில் ஈடுபட்டு இருப்பார்? இதைப்பற்றி கூட இவர்கள் மனசாட்சியுடன் நினைத்து பார்க்கவில்லை. மேலும், ஏதோ ஒரு கட்சியை சேர்ந்த நபர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை சமாதானம் செய்து கொண்டிருக்கிறாராம்.

 இப்படி எல்லாம் இருந்தால், நாட்டில் யார் சொத்து வைத்துக்கொண்டு வாழ முடியும்? இது மிகப்பெரிய மோசடி .அதனால் உடனடியாக அந்த போலி பத்திரத்தை ரத்து செய்து ஆக்கிரமிப்பு மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளவர் மீது நடவடிக்கை எடுத்து, உரியவருக்கு நிலத்தை மீட்டு தர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் . நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இவர்களிடமிருந்தும் ஏன் சுப்பிரமணியை கோர்ட்டுக்கு போ என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்? என்கிறார் .மேலும், இவ்வளவு நாள் காலதாமதம் என்பது ஏன் என்பதுதான் இப்ப பிரச்சனையின் மிகப்பெரிய கேள்வி ? அதிகாரிகள் இதற்கு உடந்தையா ?

அடிக்கடி மக்கள் அதிகாரம் பத்திரிகையில் அரசியல் கட்சிகளையும் அரசியல் கட்சியினரையும் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கிய செய்திகளை மக்கள் அதிகாரம் தெரிவித்து வருகிறது. இதற்கு முன் இணையதளத்தில், பத்திரிக்கையில் மக்கள் சரியான அரசியல் கட்சியும் ,தகுதியான வேட்பாளரையும் தேர்வு செய்யவில்லை என்றால்! தனி மனித வாழ்க்கை போராட்டமாகிறது என்பதை தெரிவித்துள்ளேன். இச்சம்பவம் இதற்கு மிகப்பெரிய உதாரணம் என்பதை பொதுமக்கள் எப்போது உணர்ந்து கொள்வார்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *