
தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. சினிமாவைப் பற்றியும் விழிப்புணர்வும் இல்லை. பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன்.
சினிமா வேறு ,அரசியல் வேறு, நிஜம் வேறு, நிழல் வேறு, இதையெல்லாம் தெரியாமல், இன்று சினிமா ரசிகர் கூட்டம் கரூரில் கூடி, சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த மக்கள் எதற்காக? இந்த கூட்டத்திற்கு போனார்கள்? சினிமா நடிகன் என்ற விஜய்யை பார்க்க போனார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என்று போனார்களா? இல்லை, திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலாக கருதி போனார்களா? எதற்கு போனார்கள்!. இல்லை ஒருவேளை, இந்த கட்சிக்காரர்கள் பேச்சை நம்பி, ஆயிரத்திற்கும், ஐநூறுக்கும் ஆசைப்பட்டு போனார்களா?
இல்லை, நம்முடைய வாழ்க்கையே விஜய் புரட்டி, மேலே உயர்த்தி, பல லட்சங்களை சம்பாதிக்க போனார்களா?

மக்களுக்கு அறிவு இல்லை என்றால்! இப்படி தான் உங்களை இந்த அரசியல் கட்சிகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். அவர்களுடைய நோக்கம் உங்களை வைத்து அதிகாரம் செய்ய வேண்டும்.

நீங்கள் அதற்கு பலிகடா ஆகியிருக்கிறீர்கள். இதில் எத்தனை பேர் கட்சிக்காரர்கள்? எத்தனை பேர் பாமர மக்கள்? யாருக்கு தெரியும்? எத்தனை பேர் சினிமா ரசிகர்கள் ? இப்படி கூட்டம் அதிகரிக்கும்போது, நீங்கள் ஏன் அங்கே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? வீட்டுக்கு போக வேண்டியது தானே. மேலும்,
மக்கள் மனசாட்சியுடன் வாழவும், பேசவும் ,தெரியாமல், நடிப்பே வாழ்க்கை என்று நடிகர்கள் பின்னால் செல்வது, அவர்களை ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருப்பது, அதேபோல் அரசியல் கட்சிகளில் நடிகர்களை போல் பேசுபவர்களின் பேச்சை நம்பி பின்னால் செல்வது , அவனுடைய பணத்தைப் பார்த்து, செல்வாக்கை பார்த்து செல்வது ,இவை அத்தனையும் மக்களுக்கு பேராசையின் ஏமாற்றம்தான்.
யாரோ ஒருவருக்கு லாட்டரியில் நம்பர் விழுந்து கோடீஸ்வரன் ஆகிவிட்டார் என்று, எல்லோரும் சீட்டு வாங்கி ஏமாறுவது போல தான், இந்த அரசியல் ! அதனால், மக்கள் உண்மைகளைப் பற்றி சிந்திக்காத வரை, உண்மைகளை அலட்சியம் செய்யும் வரை ,உங்களுக்கு இப்படிப்பட்ட துயர சம்பவங்கள் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .மேலும்,

இந்தியாவில் கேரளா போன்ற ஒரு மாநிலத்தை பார்த்து ,எல்லா மாநில மக்களும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அங்கே சினிமாக்காரனை சினிமாவில் மட்டுமே பார்ப்பார்கள். தியேட்டரில் மட்டுமே பார்ப்பார்கள் .வெளியில் அவனை வைத்து கடவுள் ஆக்கி, அவனுக்கு ரசிகனாக்கி, பார்க்க மாட்டார்கள்.
அதேபோல் தான், அரசியல் கட்சியானாலும், அரசியல்வாதியானாலும், மந்திரியா ஆனாலும், எம்எல்ஏ ஆனாலும், எம் பி ஆனாலும், அங்கே எல்லாம் மக்கள் பெரிய ஆரவாரம் காட்ட மாட்டார்கள். அவர்களுக்கு உயர்ந்த மதிப்பு, மரியாதை எல்லாம் அளிக்க மாட்டார்கள் .நமக்கு வேலை செய்ய வந்தவர்கள் என்று தான் நினைப்பார்கள்.

தமிழ்நாட்டில் தான் ,காலில் விழுந்து நடிக்கிற வேலை, மேடையில் நடிக்கிற வேலை, எல்லா வேலையும் இங்குதான் சினிமா முதல் அரசியல் வரை இன்று நடிப்பு ஆகிவிட்டது. அங்கே மக்கள் வாழ விரும்புகிறார்கள் .இங்கே நடிகர்களை போல், வாழ விரும்புகிறார்கள் .அதுதான் தவறு. நடிகர்கள் எங்கு இருக்க வேண்டும்? அவர்கள் அங்குதான் நடித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதை பல நடிகர்கள் ,அந்த காலம் முதல் இந்த காலம் வரை, பல நடிகர்களே இந்த உண்மையை சொல்கிறார்கள். குறிப்பாக அந்த காலத்து நடிகர் எம் ஆர் ராதா இதை சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

மேலும்,படித்த இளைஞர்களுக்கும் ,படிக்காத இளைஞர்களுக்கும், இந்த உண்மை புரியவில்லை. ஒரு ஹீரோ உங்கள் மனசிலே வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அரசியல், உங்கள் வாழ்க்கை இல்லத்திலும் கொண்டு வந்து, சேர்த்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள்.
எத்தனையோ படித்த இளைஞர்கள், பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள் ,அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அரசியல் தெரியாமல், அரசியல் புரிந்து கொள்ளாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இவர்களே இப்படி இருக்கும்போது, படிக்காத பாமர மக்கள் எப்படி இருப்பார்கள்?

அவன் பணத்துக்காக நடிக்கிறான். அரசியல் கட்சிக்காரன் அதிகாரத்திற்காக நடிக்கிறான். இவ்வளவுதான் வித்தியாசம். நடிகன் அரசியலுக்கு வந்தால், மீண்டும், அதிகாரத்திற்காக நடிக்கிறான். இந்த சம்பவத்தை பல அரசியல் கட்சிகள் அரசியலாக்கி கொண்டிருக்கிறது. அதில் திமுக முதலிடம் பெற்றுவிட்டது.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் அரசு அறிவித்து விட்டது. சிகிச்சை செய்பவர்களுக்கு தல ஒரு லட்சம் அறிவித்து விட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 20 லட்சம் அறிவித்துவிட்டார். சிகிச்சை பெறுபவர்கள் தல 2 லட்சம் அறிவித்து விட்டார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஐம்பதாயிரம் அறிவித்துவிட்டார்.இது எல்லாம் ஒரு விதத்தில் மக்களுக்கான ஒரு ஆறுதல் .மேலும், அந்த இடத்தில் சம்பவத்திற்கு ஓடிவந்து பணிகளை பார்க்கிறார்கள். அதை தவறு என்றும் சொல்லவில்லை.

ஆனால், மக்கள் இந்த தவறை செய்யவில்லை என்றால்! ஏன் ?இப்படி ஒரு சம்பவம்? இப்படி ஒரு அரசியல், நீங்களாக கொண்டு வந்து உங்கள் தலையில் விதித்து கொள்கிறீர்கள்? என்பதுதான் அறிவார்ந்தவர்கள் கேள்வி?
இன்று விஜயைப் பற்றி தாறுமாறாக பல அரசியல் கட்சிகள் பேசினாலும் , திமுகவில் உன்னை கீழ்மட்ட வெத்து வெட்டுகள் ,அசிங்கமான வார்த்தைகளை உபயோகித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அது கிராமங்களில் ,அவர்களுக்கான அரசியல் இடமே டீ கடை முதல் பார்பர் ஷாப் வரை பேசுகிறார்கள். மேலும், விஜய்க்கு இந்த சம்பவம் அரசியலில் முக்கிய அடி தான். இதை வைத்து எதிர்க்கட்சிகள் விஜய்யும், தமிழக வெற்றி கழகத்தையும், அரசியல் செய்யப் போகிறார்கள்.
இது எதிர்பாராத நிகழ்ந்த சம்பவமாக இருந்தாலும், இந்தக் கூட்டத்தை காக்க வைத்து, அவர்களை மயக்கமடையும் அளவுக்கு அரசியல் செய்வது ,எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் ,அது ஒரு சுயநலத்தின் அடையாளம்.

மக்களுக்கு அரசியல் தெரியவில்லை ,அவர்களுக்கு அரசியல் புரியவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஓடக்கூடியவர்கள்.மேலும், இப்படி ஒரு சம்பவம் அனுபவித்து தங்களுடைய உயிரை விடும் அளவுக்கு, உங்களுக்கு இப்படி ஒரு அரசியல் கூட்டம் தேவையா?
நீங்கள் என்ன அனுபவித்தீர்கள்? நெரிசலில் மாட்டிக் கொண்டு, ஐயோ, குயோ என்று கத்தி கொண்டு, உங்களுக்காக, உங்கள் குடும்பம் கதறிக்கொண்டு, வேதனைப்படுவது தேவை தானா?

இனிமேலாவது இந்த மக்கள் திருந்துவார்களா? என்று தான் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? மேலும்,கேரளா மக்களை பார்த்து திருந்துங்கள். எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும்,எந்த ஒரு சினிமா நடிகர்களுக்காகவும், இப்படி கூட்டமாக ஓட மாட்டார்கள்.

உங்களுடைய உழைப்பை நம்புங்கள் ,அது தான் உங்களை உயர்த்தும். இந்த அரசியல் கட்சிக்காரனும், சினிமா நடிகர்களும், உங்களையோ அல்லது உங்கள் வாழ்க்கை தரத்தையோ உயர்த்த மாட்டார்கள்.

அவர்களை உயர்த்திக் கொள்ள உங்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் பேச்சிலே இருக்குமே தவிர அதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்குமே தவிர, செயலில் எதுவுமே இருக்காது.
இப்போதாவது திருந்துங்கள்!தமிழ்நாட்டு இளைஞர்கள்!பொதுமக்கள் .