ஏப்ரல் 07, 2024 • Makkal Adhikaram
கடந்த கால மனித வாழ்க்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு மக்களின் உண்மையான உழைப்பில் நிம்மதி, சந்தோஷம் இருந்தது. .ஆனால்,உழைக்காமல், எந்த தொழிலும் செய்யாமல்,எந்த வேலையும் தெரியாமல், இருக்கின்ற அரசியல் கட்சியினர் கொடி பிடித்துக் கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டு ,எப்படி கோடீஸ்வரர்களாக ஆனார்கள் ? ஆகிறார்கள்? அப்படி என்றால் இன்றைய அரசியல் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறதா? நல்லவர்கள் வேஷத்தில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த போலி அரசியல் கட்சியினரிடம், ஒவ்வொரு நாளும் உழைக்கின்ற மக்களுக்கு, இது போராட்டமான வாழ்க்கை .மேலும்,உழைப்பவர்கள் முன்னேற முடியாமல், வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சிகளில் பதவியை அனுபவித்துக் கொண்டு ஊரை ஏமாற்றி, சட்டப்படி தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வது எப்படி குற்றமாகும்? இது அரசியல் கட்சியினரின் கேள்வி?
இதற்கு உடந்தையாக இருப்பது யார்? அதிகாரிகள். அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் சேர்ந்து தான் ஊழல். மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள்,கொடுக்க வேண்டிய சலுகைகள், எல்லாமே அரசியலுக்குள், தனக்கு வேண்டியவர்களுக்கும், தங்களுக்கு மட்டுமே சொந்தம் ஆகி விட்டது .இது மக்களுடைய நிலைமை மட்டுமல்ல, எங்களைப் போன்ற பத்திரிகைகளின் நிலைமையும், இதே நிலைதான்.மேலும்,
கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலையை, இப்போது உள்ள மக்களின் மனநிலையை ஒப்பிட்டு பாருங்கள். அந்த மக்கள் எவ்வளவு சிறப்பானவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்? படிப்பறிவே இல்லை என்றாலும், எவ்வளவு பண்பாளர்களாக, சட்டத்தை மதித்து, சமூகத்தை மதித்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது இருப்பவர்களுக்கும் சந்தோஷமும், நிம்மதியும் கேள்விக்குறியாகி உள்ளது. அது ஏன்?.
இந்த மக்கள் சுயநல எண்ணங்களுக்கு தகுந்தாற்போல், பதவி வெறியும், பணமும் மட்டுமே குறிக்கோளாக கொண்ட அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும், கட்சியினரும் உருவாகி விட்டார்கள் .அதாவது, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் திமுக ,அதிமுக அரசியல் கட்சியினர் உடைய சொத்து மதிப்பு என்ன? தற்போது உள்ள சொத்து மதிப்பு என்ன? என்பதை கணக்கெடுத்தாலே, இந்த அரசியல் கட்சிகளின் ஊழல்கள் மக்களுக்கு புரியும். மேலும்,
இவர்கள் எல்லாமே வாயிலே வடையை சுட்டுக் கொண்டு, சீமான் போல் பாட்டு பாடி கொண்டு ஏமாற்றுவது தான் அரசியலா? இது என்ன சினிமாவா? பாட்டு பாடி டான்ஸ் ஆடி கொண்டு இருக்க ? அரசியலின் தகுதியே உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் பொதுநலம். இது எல்லாம் இல்லாதவர்கள் எப்படி மக்களுக்காக உழைப்பவர்கள் வருவார்கள்? நேர்மையானவர்கள் வருவார்கள்? அப்படி இல்லாதவர்கள் இன்றைய அரசியலில் !
குடிகாரர்கள், நல்லவர்களாக வேஷம் போடுபவர்கள், பேசி மக்களை கவிழ்த்து கொண்டிருப்பவர்கள், ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், சுயநலவாதிகள், ரவுடிகள், பொறுக்கிகள், வெத்து வெட்டுகள், சட்டத்தை ஏமாற்றுபவர்கள். அரசியல் வியாபாரிகள், இவர்கள்தான் இன்றைய அரசியல் கட்சிகளில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த அரசியல் கட்சிகளால் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை போராட்டம் என்பதை பல அரசியல் கட்சியில் இருக்கின்ற இந்த கூட்டங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதிலும், குறிப்பாக வன்னிய சமுதாயத்திற்கு அதன் சமூக கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியினர் ,அதே போல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புரட்சி பாரதம் ,புதிய தமிழகம் போன்ற கட்சியினர் அந்தந்த சமூகத்தில் உழைக்கின்ற மக்களுக்கு இன்று எதிராகவே உள்ளது என்கின்றனர் அச் சமூகத்தினர் . தவிர, இதுவரையில் இவர்களுடைய போராட்டங்கள், இந்த சமுதாயத்திற்கு என்ன பலன் பெற்றுத் தந்தது? சமுதாயத்தின் மூலம் இவர்கள் பலன் பெற்றார்களா? அல்லது சமுதாயம் பலன் பெற்றதா? இதற்கு மட்டும் இந்த சமுதாயம் பதில் தெரிந்து கொண்டால் போதும் .மேலும், இன்றைய அரசியல் !
தற்போது மக்களுக்காக இல்லை.இது அந்தந்த அரசியல் கட்சியின் தலைவர்களுக்கும் ,அரசியல் கட்சியினருக்கும் சொந்தமாகி விட்டது. அதனால் தான், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்களுக்கான பிரச்சினைகள்,அதிகரித்து விட்டது. மேலும்,மக்களுக்கான சேவைகள் மறுக்கப்பட்டு, இவர்களுடைய சுயலாபங்களுக்காக அரசியல் ஆகிவிட்டது. அரசியல் என்பது கடினமான பாதை. அதற்கு தகுதியானவர்கள் இவர்கள் அல்ல.
இவர்களுக்கு அரசியல் என்றால் வியாபாரம் .அந்த வியாபாரத்தில் ,எத்தனை கோடிகளை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்? இதுதான் இவர்களுடைய அரசியல் கனவு. ஒரு எம்எல்ஏ குறைந்தபட்சம் 500 இல் இருந்து ஆயிரம் கோடிகள் டார்கெட், ஒரு மந்திரி ஆயிரத்தில் இருந்து 2000, 5000 கோடிகள் டார்கெட் , இதற்கு கீழ் உள்ளவர்கள், அவரவர் நிலைக்குத் தக்கவாறு, இந்த பணத்தை சட்டப்படி கொள்ளை அடிப்பது அரசியல் ஆகிவிட்டது .அரசியலில் இவர்களால் எப்படி பொதுநலத்துடன் செயல்பட முடியும்? அதனால்தான் மக்கள் அரசியல்வாதிகளாலும், அரசியல் கட்சியினராலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை கணக்கு கேட்டு,
மற்றொரு பக்கம், மத்திய அரசு இன்கம் டேக்ஸ்(INCOME TAX) ,சிபிஐ (CBI), அமலாக்கத்துறை (E D),லஞ்ச ஒழிப்புத்துறை (VIGILANCE & ANTI CURRUPTION) நீதிமன்றம் (SUPREME COURT)இவை எல்லாம் சேர்ந்து ,இன்று இவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை எப்படி எடுப்பது? என்று போராடிக் கொண்டிருக்கிறது? மேலும், அவர்கள் காட்டும் கணக்கு இவர்களுடைய பூர்வீக சொத்துக்கும் ,தற்போது உள்ள சொத்துக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது .
அதனால், இந்த அரசியல் கட்சியினரை நம்பி வாக்களிக்க அதற்கு தகுதி உள்ளவரா? என்பதை ஒருமுறைக்கு 100 முறை சிந்தித்து வாக்களியுங்கள். அப்பொழுதுதான், உங்களுடைய உழைப்புக்கு, மரியாதையும் , தீர்வும் இருக்கும் .பொது நலன் இன்றி சுயநலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை எந்த கட்சியில் இருந்தாலும், அவர்களுக்கு மக்கள் மறந்தும் வாக்களிப்பது,தேர்வு செய்வது, அவர்கள் தலையில் அவர்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வது தான்.
எனவே, பொதுநலமும், சுயநலமும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருங்கால சந்ததிகளை வாழ வைக்க முடியாமல், அவர்களுடைய வாழ்க்கையும், போராட்டம் ஆக்கிவிடாதீர்கள்.மேலும்,நாட்டில் இவர்கள் செய்கின்ற கனிம வள கொள்ளைகள் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது .
மற்றொரு பக்கம், வண்டி வாகன புகையிலிருந்து புவி வெப்பமயமாதல், தொழிற்சாலை ரசாயன புகை மண்டலங்கள், காற்றை மாசுபடுத்துகிறது, தொழிற்சாலை கழிவுகள், நீர்நிலைகளை அசுத்தப்படுத்துகிறது, மரங்கள் அழிக்கப்பட்டு, நீர்நிலைகள் அசுத்தமாகி ,காற்று மண்டலங்கள் பாதிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக வெப்பம், புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கையின் சிற்றங்களால் மக்களின் வாழ்க்கை போராட வேண்டி இருக்கிறது.
இது தவிர ,ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தியாகின்ற விவசாய பொருட்கள் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, தேவையற்ற நோய்களை எல்லாம் உருவாக்குகிறது .இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் ஓட்டல் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் தரமற்றதாக உள்ளது. இது பற்றி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி போஸ் இடம் தெரிவித்தால், அவர் எங்களை போய் பார்க்க சொல்கிறார்.
எந்தெந்த ஓட்டலில் எப்படிப்பட்ட உணவு சரியில்லை? என்பதை பார்த்து போட்டோ எடுத்து அதை உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப்பில் அனுப்ப சொல்லுகிறார். இது எங்களுடைய வேலை இல்லை. அரசாங்கம் அதற்கு தான் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது .நாங்கள் எந்த இடத்தில் என்ன தவறுகள் நடக்கிறது? என்பதை போய் பார்த்தாலும் நடவடிக்கை எடுப்பது இவர்கள் தானே, இது இவர்களின் வேலை. நாங்கள் பல ஓட்டல்களில் சாப்பிட்ட உணவை பற்றி தான் தெரிவிக்க முடியும்.
அதை போட்டோ எடுத்து இவருக்கு அனுப்பினால், இவர் அவர்கள் மீது வழக்கு தொடுப்பாராம். அதுவும் அந்த உணவு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் செரிமானம் ஆகிவிட்டால், அதுவும் இல்லை. இந்த சட்டங்கள் எல்லாம் உணவு பாதுகாப்பு சட்டம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள்.பொதுவான விஷயத்தை மட்டும் தான் நாம் சொல்ல முடியும். மக்களுக்கான உணவு எப்படி இருக்க வேண்டும்? எப்படி தயாரிக்க வேண்டும்? என்பதை நீங்கள் ஓட்டல் உரிமையாளர்களுக்கு சொல்லி செயல்படுத்துங்கள் . பொதுமக்களை நோய் தாக்குதல் இன்றி பாதுகாக்க முடியும்.இதனால் மனித வாழ்க்கையின் ஆயுள் குறைவதை தடுக்க முடியும் .மேலும்,
இப்படி உணவு ,அரசியல், விவசாய உற்பத்தி பொருட்கள், இயற்கை சீற்றங்கள், மது ,போதை, சுற்றுச்சூழல் போன்ற எல்லாவற்றிலும் மக்கள் ஒவ்வொரு இடத்திலும், வாழ்க்கையுடன் போராட வேண்டி இருக்கிறது . இப்படிப்பட்ட போராட்ட வாழ்க்கைக்கு யார் முக்கிய காரணம்? இது எல்லாவற்றிற்கும் மூல காரணம் அரசியல் .
அதனால், அரசியலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறான அரசியல் மக்களுக்கு போராட்ட வாழ்க்கையும், தேவையற்ற பிரச்சனைகளையும், சமூக முன்னேற்றத்திற்கான தடைகளையும் உருவாக்குகிறது, என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, என்பதை பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. உங்கள் அலட்சியத்தால், உங்கள் வாழ்க்கை போராட்டம் ஆகிறது என்பது நிதர்சனமான உண்மை .
மேலும், தேர்தல் பொறுத்தளவில் யார் எந்த கட்சியில் இருந்தாலும், சமூக அக்கறை இல்லாதவர்களுக்கு வாக்களிப்பது அது வீண். அரசியலில் சுயநலமிக்க அரசியல், மக்களுக்கு ஒருபோதும் பயன் தராது. மேலும் இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியலை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பணத்திற்காகவோ, அவர்களின் பேச்சுக்காகவோ, மயங்கி வாக்களித்தால், நாட்டில் தீய சக்திகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அந்த தீய சக்திகளால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது .
அரசியலில் போலி வேஷங்கள் மக்களின் வாழ்க்கை போராட்டத்தை மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர, மக்களுக்கு ஒரு நல்ல ஆட்சியும், நிர்வாகத்தையும், இந்த அரசியல் கட்சிகளால் கொடுக்க முடியுமா? அல்லது நீங்கள் தேர்வு செய்யக்கூடியவர்கள் அதற்கு தகுதியானவர்களா? என்பதை பொறுத்துதான் மக்களின் வாழ்க்கை போராட்டம் குறைத்துக் கொள்ள முடியுமா? அல்லது அதிகரித்துக் கொள்ள முடியுமா? என்பது மக்களின் முடிவு.எனவே,மாற்றத்தை நோக்கி மக்கள் மாற்றினால் ! மாற்றம் உங்களிடம் வந்து சேரும் என்பதை புரிந்து கொள்வீர்களா ?