மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Makkaladhikarammedia.com,ல் சப்ஸ்கிரைப் செய்து இணைந்திடுவீர்.

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Makkaladhikarammedia.com,ல் சப்ஸ்கிரைப் செய்து இணைந்திடுவீர். இது மக்கள அதிகாரம் பத்திரிகையின் அன்பான வேண்டுகோள். எல்லோருக்கும் இதனுடைய லிங்க் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க முடியவில்லை.

 அதேபோல், எங்களிடத்தில் உள்ள வாட்ஸ் அப் குரூப் அனைவருக்கும் நேரம் கருதி அனுப்ப முடியவில்லை. அது மிகவும் கஷ்டமான வேலையாக உள்ளது. எங்களுக்கு செய்தி கொடுக்கவே நேரம் போதவில்லை .அதனால், பல நேரங்களில் எல்லோருக்கும் என்னால் செய்து அனுப்பப்பட முடியவில்லை,. என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

அதனால், செய்திகளை மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்களின் நலனுக்காக உண்மையான செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த செய்திகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.மேலும்,

நம் வாழ்க்கையில் சந்தித்த மோசடிகள், ஏமாற்றங்கள், அரசியல் அதிகார மையங்களால் ஏற்படும் பிரச்சனைகள், அரசியல் கட்சியினர் மிரட்டல்கள், இதிலிருந்து மக்கள் போராட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இன்றைய அரசியல் நிர்வாகம், அரசியல், ஆட்சி இவை எல்லாம் மக்களின் சராசரி வாழ்க்கைப் பிரச்சனை ஆகிவிட்டது.

இதை எதிர்கொள்ள பொதுமக்கள் வருங்கால இளைய தலைமுறைகள் அரசியலைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம். இந்த உண்மைகள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளாக தான் இருக்கும். அல்லது சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளாக தான் இருக்கும். அதை தெரிந்து கொள்வது பொதுமக்களின் முக்கிய தேவை. ஏனென்றால், தெரியாமல், புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் தான் இன்று அரசியல் அதிகாரங்கள் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இது தவிர, இதற்கு ஆதரவான ஊடகங்கள் ஒத்து ஊதூகிறது.

சில ஊடகங்கள் அதை எதிர்த்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஊடகங்களில் மக்கள் அதிகாரமும் ஒன்று. தவிர, தற்போது நடுநிலையான ஊடகங்கள் மிகவும் குறைந்து விட்டது. அப்படி ஒரு சில நடு நிலையான ஊடகங்கள் சரியான முறையில், நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டாலும், அதற்கும் எப்படியும் பேசலாம், என்று ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர், பேசுகின்றனர். எப்படியும் பேசி மக்களை முட்டாளாக்குவது, பத்திரிகைகளுக்கு சவால் விடுவது, அரசியல் அல்ல.

உண்மை, நேர்மை, உழைப்பு ,தியாகம், இதுதான் அரசியலின் வெற்றி. அதனால், தமிழ்நாட்டின் அரசியல்! இன்று திருடனும் என்னை விட யோக்கியன் இல்லை என்கிறான். கொள்ளை அடிப்பவனும் என்னை விட உத்தமன் இல்லை என்கிறான். அதாவது,பத்திரிகை அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் எல்லாம், நிருபர்கள் என்று சொல்லி கொள்வது போல, இன்றைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி வருங்கால இளைய தலைமுறைகள் புரிந்து கொள்ளப் போகிறது?

இதைப் புரிந்து கொள்வதற்கு உங்களிடம் போதுமான அறிவாற்றல் இருக்க வேண்டும். அல்லது இந்த ஊடகங்களை பற்றியும், அரசியலைப் பற்றியும், அதிகமான கருத்துக்கள், உண்மைகள், சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருந்தால் மட்டும் தான், இதனுடைய உண்மை தன்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மேலும், இன்றைய அரசியல், ஆன்மீகம், கலாச்சாரம், சமூக வாழ்க்கை, பத்திரிகை ,சமூக ஊடகங்கள், எல்லாம் ஒரு வியாபார நோக்கத்துடன் அதிக அளவில் போட்டி, போட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் நலன் சார்ந்து, வியாபாரா நோக்கம் இல்லாத பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மிகவும் குறைவு. மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை, வியாபார நோக்கம் கொண்டதல்ல.இது மக்கள் நலன் மட்டுமே சார்ந்தது.

அதனால், இதில் வெளிவரும் செய்திகள், முக்கியத்துவமான, உண்மையான செய்திகள். மக்களின் நலன் கருதி வெளியிடப்படும் செய்திகளை, makkaladhikarammedia.com  என்ற இணையதள வெப்சைட்டில் உள்ளே சென்றால், இணையதள செய்திகள் மற்றும் இ – புக் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும், அதற்கான தரவுகள் உங்களது இமெயில் முகவரி மற்றும் செல் போன் நம்பரை கொடுத்து, இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.

 பிறகு , நாங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் ,(மக்கள் அதிகாரம் மீடியா டாட் காமில்) makkaladhikarammedia.com  website ல், உங்களுடைய இ – மெயில் முகவரியில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி, வணக்கம்.

இப்படிக்கு, நிர்வாகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *