மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, அரசியல் ரீதியாக அவர்கள் வேண்டியவர்களுக்கு சில சலுகைகளை எந்த அரசு வந்தாலும், அதை செய்து கொள்ளும் .
ஆனால், நீதிமன்றத்தில் தன்னுடைய கட்சிக்காக வாதாடியவர்களை நீதிபதிகளாக நியமனம் செய்யக்கூடாது. அது பாஜக மட்டுமல்ல, திமுக, அதிமுக, பாமக, எந்த அரசியல் கட்சியானாலும், அந்த தவறை செய்யக்கூடாது.
இவர்கள் கட்சி நீதிபதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிச்சயம் அது ஏற்படும். மேலும், இவர்கள் நியாயமான தீர்ப்பை வழங்கினாலும் கூட ,அப்போதும் இவர்கள் மீது ஒரு கட்சி என்ற ஒரு சாயம் இருந்து கொண்டே இருக்கும்.
அதனால், எந்த அரசியல் கட்சியானாலும், இனி நீதிபதிகளை சிபாரிசு செய்வது என்ற வேலையை விட்டு விட்டு, கொலிஜியம் செய்யும் முறையில்சுதந்திரமாக தகுதியின் அடிப்படையில் நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் வலுவான ஜனநாயகத்தின் தூணாக இருக்க முடியும்.
ஏனென்றால், நீதித்துறை பணக்காரன் முதல் ஏழை வரை உள்ள ஒரு நம்பிக்கை அந்த நம்பிக்கையை அரசியல் அதிகாரத்தால் தகர்க்கக் கூடாது.