மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது தேவையா?

அரசியல் இந்தியா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram

நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிடுவதற்கு பதிலாக, வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசுகள் கொடுத்து வருகிறது .

அதையே இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுத்தால், உண்மைகள் மக்களிடம் போய் சேர்வதற்கு அது மிக முக்கிய வாய்ப்பாக இருக்கும் .அதை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக கொடுக்காமல் இருந்து வருகிறது .அதற்கு சர்குலேஷன் என்ற ஒரு விதிமுறை இந்த பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு பலமுறை மத்திய மாநில அரசின் செய்தி துறையின் கவனத்திற்கு மக்கள் அதிகாரம் கொண்டு சென்றுள்ளது.

ஆனால், அதிகாரிகளும் ,ஆட்சியாளர்களும் அதைப் பற்றி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு சமூக நீதியில்லை . இது பற்றி செய்திகளை தமிழ்நாட்டின் தற்போதைய மத்திய செய்தி துறை அமைச்சர் எல் .முருகனுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய பி.ஏ.விடமும் இது பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறேன். என்ன என்று கேட்டார் ஐயா நாங்கள் சர்குலேஷன் இரண்டாயிரத்திற்குள் இருந்தாலும் ,RNI புதுப்பிக்க இணையதளம் ஏற்றுக்கொள்கிறது. 

தற்போது சொந்த அச்சகம் நடத்துபவர்களாக இருந்தாலும், அதற்கு ஜிஎஸ்டி என்பது எங்களுக்கு தேவையற்றது. ஏனென்றால், 20 லட்சத்திற்கு மேல் அதனுடைய ட்ரான்ஸ்க்க்ஷன் அதாவது வரவு ,செலவு வருமானம் இருப்பவர்கள் ஜிஎஸ்டி வாங்கலாம் .ஆனால், 10 லட்சத்தை கூட தாண்டாதவர்கள் எப்படி ஜிஎஸ்டி வாங்குவது? அடுத்தது, மத்திய அரசின் செய்தித் துறையில் இருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட விளம்பரம், சலுகைகள் எதுவும் கொடுக்கவில்லை.  அரசு அடையாள அட்டை கூட கொடுக்கவில்லை.

 ஆனால் இந்த ஜிஎஸ்டி மட்டும் கொடுக்கிறார்கள். ஜிஎஸ்டிக்குள் வந்துவிட்டால் இதற்கு மாத மாதம் அந்த ஜிஎஸ்டிக்கு உரிய கணக்கு காட்ட வேண்டும். இதனால் ஆடிட்டர் செலவு, அது ஒரு பெரிய சுமை, பத்திரிக்கை நடத்துபவத்தே எங்களுக்கு பெரிய சிரமமாக இருக்கும்போது, இவர்கள் எந்த சலுகையும் விளம்பரமும் கொடுக்காமல் ஜிஎஸ்டி என்ற ஒன்றை கொண்டு வந்து அதிலே உள்ளே புகுத்துவது இந்த பத்திரிகைகளை அழிக்கும் வேலையை மத்திய அரசு ஆரம்பித்து இருக்கிறது.

இதற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக இதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு எமது இணையதள செய்தியின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *