மத்திய அரசின் பொது சிவில் சட்டம் ஜாதி, மத அரசியலை முன்னெடுக்கிறதா ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மத்திய அரசின் பொது சிவில் சட்டம் அனைத்து மதங்களுக்கும், அனைத்து ஜாதிகளுக்கும் ஒரு சமமான தீர்வாக இருக்கும் போது, முஸ்லிம் மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும், சீக்கிய மதத்திற்கும் ஏன் அது இடையூறாக பேசுகிறார்கள் ? எதிர்க்கிறார்கள்? எதிர்ப்பது பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்யவா?

மேலும், எல்லா சமூகமும் ,எல்லா ஜாதியினரும் ஆண் ,பெண் என்ற பாலினங்களுக்கு பொதுவான சட்டமாக இருக்கும்போது, மலை ஜாதி மக்களுக்கு ஏன் அது எதிராக இருக்கிறது? அதேபோல், முஸ்லிம் பெண்களுக்கு, கிறித்துவ பெண்களுக்கு ஏன் எதிராக இருக்கிறது? அவர்களுக்கும் சொத்தில் சம உரிமை அந்தஸ்து இருக்கக் கூடாதா? அந்தப் பெண்களை அடிமையாக வைத்திருப்பது தான் அவர்களுடைய சட்டமா?

பெண்கள் கல்வி வளர்ச்சியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும்போது, அவர்களுக்கு உரிய சொத்து உரிமை கொடுப்பதில் ஏன் பாரபட்சம்? இது பெண் சமூகத்திற்கு எதிரான ஒன்று. இருப்பினும், அந்தப் பெண்களுக்கு தாய் தந்தையரின் சொத்துக்களில் குறைந்தபட்சமாவது, தாய் தந்தையரின் அனுமதியோடு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். மேலும், ஆங்கிலேயர்கள் போட்ட சட்டத்தை இதுவரை தொடர்ந்தது தவறு. தவிர

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சட்ட முறைகளை மாற்றினால் தான், நாட்டில் பிரிவினவாத சக்திகளை ஒடுக்க முடியும். இந்த பிரிவினைவாத சக்திகளை வைத்து அரசியல் சதுரங்கத்தை எதிர்க்கட்சிகள், மத அரசியல், சாதி அரசியல், செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. பொருளாதார வளம் பெற்றால் தான், நாட்டில் இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க முடியும் .மக்களின் வருமானத்தை உயர்த்த முடியும்.

 இந்த தேசத்தை வளமிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்றால், இந்த பிரிவினை வாத சக்திகளை பொது சிவில் சட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை தடுத்தால் தான், இந்தியாவுக்குள் அந்நிய சக்திகளின் தலையீடு அடியோடு அழிக்க முடியும். இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை உள்ள சில நாடுகள் மறைமுகமாக ஆதரவு தரும் தேச துரோக வேலையை அமைப்புகள், மதவாத அமைப்புகள், ஜாதி அமைப்புகள் ,சில மத அரசியல் கட்சிகள், ஜாதி அரசியல் கட்சிகள், இந்தியாவுக்குள் செய்து வருகிறது. இந்த விஷயம் பாமர மக்களுக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இதைப்பற்றி மிகவும் குறைவானவர்கள். இவர்களையும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முன்னிலைப்படுத்துகின்றன. இல்லையென்றால், அவர்களே சில பத்திரிகை, தொலைக்காட்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 இது இந்துக்களுக்கு ஆதரவும் மற்ற மதத்திற்கு எதிரானதாகவும், சில ஊடகங்கள் செய்தியும் வெளியிடுகிறது. இல்லையென்றால் ,சில மத அமைப்புகள், பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன .ஒரு நாட்டின் சட்டம் அனைத்து ஜாதி மத பிரிவினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் .அதை தான், இந்த பொது சிவில் சட்டம் வலியுறுத்துகிறது .அப்படிப்பட்ட சட்டத்தை ஏன் காங்கிரஸ் ,திமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி மற்றும் வட இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள் என்றால் நாட்டில் எதிரி கட்சிகளாக இருப்பது மக்களுக்கு தேவையற்ற ஒன்று. எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை காட்டுவது தான் அரசியல் கட்சிக்கு ஏற்றது.

 ஆனால், குறை சொல்வதும், குற்றம் சொல்வதும் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால், நாட்டின் முன்னேற்றம் ,வளர்ச்சி, அமைதி என்பது எல்லா மக்களுக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா மதத்தினருக்கும் அவசியம் தேவையானது என்பதைப் புரிந்து ஆதரிப்பது அனைவரின் முக்கிய கடமை – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *