மத்திய அரசு! உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் – இணைய தளம் ஏற்படுத்தியும், பொது மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு சரியான முறையில் இயக்கவில்லை என்பதுதான் கிராம பொது மக்களின் குற்றச்சாட்டு.

இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து, பல ஆண்டுகளாக, இந்த ஆன்லைன் மூலம் இணையதளத்தில் நிர்வாகத்தின் அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளவும் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களின் கணக்கு வழக்குகள் வெளியிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கட்டுரைகளையும், செய்திகளும் வெளியிட்டு வந்தோம். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய அரசு செய்துள்ளது.

அதற்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வரவேற்று, பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இங்கு தமிழக அரசு அதை சரியான முறையில் இயக்காமல், முடக்கி வைத்துள்ளது என்பது பொதுமக்களை ஏமாற்றும் வேலையா? அல்லது நிர்வாகத்தின் கணக்கு வழக்குகள் வெளிப்படுத்தன்மையை இல்லாமல் இருப்பதற்கு செய்யப்படும் மோசடி வேலையா? பொது மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு சரியான முறையில் இயக்கவில்லை என்பதுதான் கிராம பொது மக்களின் குற்றச்சாட்டு.மேலும், https//:egramswaraj.gov.in

என்ற இணையதளத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதை மாநில அரசு செயல்படுத்தவில்லை என்பது மிக மிக கேவலம். ஆட்சி நிர்வாகம் மக்களுக்கானதா? இல்லை அரசியல் கட்சிகளுக்கானதா? என்பது தெரியவில்லை. அதிகாரிகள் மக்களுக்காக பணியாற்றுகிறார்களா? இல்லை அரசியல் கட்சிகாரர்களுக்கு எடுப்பு வேலை செய்கிறார்களா?

சம்பளம் வாங்குவது மக்களுடைய வரிப்பணத்தில், வேலை செய்வது அரசியல் கட்சிகளின் எடுபிடிகளுக்கு, இதையெல்லாம் சமூக ஆர்வலர்களும், சட்டம் தெரிந்தவர்களும், விவரமானவர்களும், பத்திரிகையாளர்களும், கேள்வி கேட்கும் போது, அதிகாரிகளுக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது.

ஏனென்றால் அவர்கள் கட்சிக்காரர்கள் மூலம் லாபம் அடைவார்கள். மக்கள் பிரதிநிதி மூலம் லாபம் அடைவார்கள். அந்த லாபம் சமூக ஆர்வலர்கள் மூலமும், விவரம் தெரிந்தவர்கள் மூலமும், சமுக நன்மைக்கான பத்திரிகையாளர்கள் மூலமும் அடைய முடியாது.

ஆகையால், இதை சரி செய்ய தமிழக அரசின் ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் ஆன்லைன் வரவு செலவு கணக்குகள் ,பொதுமக்கள் எளிதில் பார்த்து தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு இந்த இணையதளத்தை கொண்டு வர வேண்டும்.நாம் இன்று இந்த இணையதளத்தின் முகவரியில் உள்ள சென்றால், எந்த மாநிலம்? எந்த மாவட்டம்? எந்த ஒன்றியம்? எந்த ஊராட்சி? இதுவரை தான் காண்பிக்கிறது. இதற்கு மேல் அது திறக்கவில்லை. இதை எல்லாம் பூட்டி வைத்து விட்டார்களா? அல்லது செயல்படாமல் ஆக்கிவிட்டார்களா? என்பதை மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் அதற்கான தீர்வை ஏற்படுத்தவில்லை என்றால் அங்கிருந்து ஒரு பைசா கூட தமிழக அரசுக்கு கொடுக்கக் கூடாது.

மக்களின் பயன்பாட்டுக்கு சுமார் 80 சதவீத மத்திய அரசின் நிதி மாநில அரசுக்கு வருகிறது. அப்படி வந்தும், அது பேப்பரில் கணக்கு எழுதி வைத்துவிட்டு, தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதே போல், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும், நகராட்சிகளிலும், House tax ; water tax ; drainage tax ; Company tax போன்ற பல வரிகளை வசூலித்தும், அந்த வரிகள் ஒவ்வொரு மாதத்திலும், ஒரு குடும்பத்தில் அல்லது அந்த தலைவரின் பெயரில் வைக்கப்பட்ட வரவு எவ்வளவு? இது மொத்தமாக ஒவ்வொரு மாதமும் அந்த கிராமத்தில் house tax எவ்வளவு ? Water tax எவ்வளவு? Company tax எவ்வளவு? இவையெல்லாம் சேர்ந்து அந்த கிராமத்தின் மொத்த வரி வசூல் எவ்வளவு ? அல்லது அந்த நகராட்சியின் பேரூராட்சியின் வரி வசூல் எவ்வளவு ?

இதில் ஒவ்வொரு மாதமும், நிர்வாகம் எந்தெந்த காரணங்களுக்காக எவ்வளவு ரூபாய் ?எந்த தேதியில் எடுக்கப்பட்டுள்ள செலவு எவ்வளவு? இது தவிர, எந்தெந்த திட்டங்கள் மூலம் இந்த கிராமத்தில் எந்தெந்த வேலைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது? எந்தெந்த வேலைகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? அதற்கான எஸ்டிமேட் தொகை எவ்வளவு? அதனுடைய ஒப்பந்ததாரர் யார்? அவர் பெயர் என்ன? எத்தனை நாட்களில் அவர் பணியினை முடிக்க வேண்டும்? அதனுடைய மதிப்பீடு எவ்வளவு? தொகை மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு மக்களின் பயன்பாட்டுக்கு வரும்?

இது போன்ற பல விவரங்கள், தெளிவாக மக்கள் பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு மாதமும் முடிந்ததும் ,அதனுடைய வரவு செலவு கணக்கு மறு மாதத்தின் 10 நாட்களுக்குள் அதை அப்டேட் செய்ய வேண்டும். இங்கு அந்த இணையதளமே திறக்காத அளவிற்கு முடக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி? இந்த வரவு செலவு கணக்குகளை மக்களின் பார்வைக்கு, துல்லியமாக வெளிப்படையாக இவர்கள் கொண்டு வருவார்கள்?

மேலும், ஒவ்வொரு மாத சம்பளமும், குறிப்பிட்ட மாதத்தின் 14 தேதிகளுக்குள் அதை எங்கு அனுப்ப வேண்டுமோ, அங்கே அனுப்பி விடுகிறார்கள். ஆனால், இதை மட்டும் ஏன்? இந்த இணையதளம் திறக்காமல் வேலை செய்கிறார்கள்? அப்படி என்றால், இந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் எல்லாம் மோசடியா? இது பற்றி மத்திய அரசுதான், இதற்கான உரிய பதிலை கேட்டு, மாநில அரசுக்கு இனி எந்த நிதி வழங்கினாலும், இந்த இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு கணக்கு ,வழக்குகள் எளிய அளவில் பார்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் பிறகு தான், உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்க வேண்டும். அதுவரை, தமிழக அரசுக்கு நிதி வழங்கக் கூடாது என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *