மத்திய மாநில அரசின் செய்தித்துறை சமூக நலன் பத்திரிகைகள் இணையதளத்தின் பார்வையாளர்களை ஏன் சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் ரிசன்ட் போஸ்ட் விளையாட்டு

நாட்டின் ஊழலுக்கு எதிராக போராடும் தகுதி வாய்ந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் என்ற சட்டத்தை அந்தப் பத்திரிக்கையின் இணையதளங்களின் பார்வையாளர்கள் வைத்து அதையே சர்குலேஷன் கணக்கில் கொண்டு வர வேண்டும்.

மேலும், இன்றைய அச்சு ஊடகத்தின் செலவு இவர்களால் பணத்தை அந்த அளவுக்கு அதில் முதலீடு செய்வது போராட்டமாக இருந்து வருவதால், செய்திகள் மக்களுக்கு இணையதளம் மூலமாக சென்றடைகிறது. ஒரு செய்தி அச்சு ஊடகத்தின் மூலம் தான் மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரு கட்டாயம் இல்லை .

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பத்திரிகைகள் வாங்கி படிப்பது குறைந்துவிட்டது .இன்று இணையதளத்தின் வாயிலாக செய்திகளை படிக்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் .அதனால், காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் .அது மட்டுமல்ல, இங்கே ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய தகுதி வாய்ந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் இந்த சலுகை,விளம்பரங்கள் தேச நலன் முன்னிட்டு, சமூக நலன் முன்னிட்டு, கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இது தவிர, தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் கார்ப்பரேட் பத்திரிகைகளின் நிர்வாகிகளே அதில் முக்கிய பொறுப்பாளர்களாக இருப்பதால், அதில், இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு இரண்டு பேர் முக்கிய பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும். இதில் தகுதி வாய்ந்த பத்திரிகைகளையும் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்.அப்போதுதான், நாட்டில் ஊழலற்ற ஆட்சிக்கு பத்திரிகைகள் போராட முடியும்.

இங்கே ஊழலுக்கு ஒத்து ஓதக்கூடிய பத்திரிகைகளுக்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் 50 ஆண்டு காலமாக இந்த சட்டங்களை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு,நாட்டின் சமூக நலனுக்கும், தேச நலனுக்கும், முக்கியத்துவம் இல்லாமல் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு ஒத்து ஓதக்கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வந்ததன் விளைவு இன்று ஊழல் நிர்வாகம் நாட்டில் தலை விரித்து ஆடுகிறது.மேலும்,

மக்களின் வாழ்க்கை ஊழலுக்கு எதிராக, அரசியல் அதிகாரத்திற்கு எதிராக ,அவர்களின் வாழ்க்கை போராட்டம் அமைந்துவிட்டது. இது எல்லாம் உண்மை. நாட்டில் மக்களுக்கு நடக்கின்ற சம்பவங்கள் அதிலும், ஏழை ,எளிய நடுத்தர மக்களுக்கு, அதிகார வர்க்கத்தின் அரசியல், அரசியல் கட்சியினரின் கொடுமைகளாக இருந்து வருவது துரதஷ்டவசமானது. மேலும், கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே ஆட்சியாளர்கள் சொந்தமாக்கி, அவர்களின் ஊது குழலாக இருந்து வருவது பத்திரிக்கைகள் நாட்டின் நான்காவது தூண் என்பதை ஏற்க முடியாது.

இதன் விளைவு ,இன்று சமூகத்தில் மக்கள் நியாயம் கிடைக்காமல், சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்காமல்,நீதிமன்றத்தில், காவல் துறையில் வழக்குகள் அதிக அளவில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். மேலும், ஆட்சியாளர்கள் மீது தமிழ்நாட்டில் 90 சதவீதம் ஊழல் வழக்குகள் உள்ளது. இன்னும் இந்த ஊழல் வழக்குகள் சரியாக பதிவு செய்யப்படவில்லை. இது மேலோட்டமான நிலையிலே 90 சதவீதம் உள்ளது. இதனால், நாட்டின் முன்னேற்றம், மக்களின் சமூக முன்னேற்றம், கேள்விக்குறியாகி இன்று மக்கள்சமூகத்தில் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும்,

இதை எல்லாம் மாற்றுவதற்கு நாட்டில் தகுதியான சமூக நலன் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு சர்குலேஷன் சட்டத்தை அச்சு ஊடகத்திற்கு பத்திரிகையின் சட்டம் இருப்பது போல, இந்த பத்திரிகைகளின் இணையதளத்தை சர்குலேஷன் சட்டமாக மத்திய, மாநில அரசாங்கம் கொண்டு வர வேண்டும் .அப்படி கொண்டு வந்தால் ,இது சமூகத்தில் பத்திரிகை என்பது மக்களின் நலனுக்கானது என்பதை உறுதிப்படுத்தி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்லும் கருவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு தான், சலுகை, விளம்பரங்களும், அங்கீகாரமும் கொடுக்கப்பட வேண்டும்.இது காலத்தின் கட்டாயம் என்பதை மறுக்க முடியாது.

மேலும், இந்த பத்திரிக்கை துறையின் சமூக நீதி! ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை கொடுப்பது, அரசின் கொள்கை முடிவாக அதை தீர்மானிப்பது, பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது. இதற்கு ஒரே தீர்வு காலத்திற்கு ஏற்ப நாட்டில் பத்திரிக்கை துறையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பது மிக மிக அவசியம்.மேலும், இது சம்பந்தமாக எமது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துசாமியின் லீகல் நோட்டீஸ் மீண்டும் (Remaining Notice )மத்திய, மாநில அரசின் செய்க்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *