மத்திய மாநில அரசுகள் ! சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும், பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏன்?

இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மனிதன் உயிர் வாழ காற்று அவசியம். இந்த காற்று, இயற்கையிடம் இருந்துதான் மனிதன் பெற முடிகிறது. இயற்கையை பாதுகாத்தால் தான், மனிதன் உயிர் வாழ முடியும். இயற்கையை இன்று பாதுகாக்க தவறியதால், பல நாடுகளில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

 (சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறையின் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்)

இந்த பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு ,இயற்கையின் சுற்றுச்சூழல், வனப்பகுதி, நீர்நிலை, காடுகள், ஆறு, குளம், ஏரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை சரியாக பாதுகாத்து பராமரிப்பது இல்லை. அதில் மண் எடுத்து வியாபாரம் செய்கிறார்கள். காடுகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இவையெல்லாம் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒன்று என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் பாதுகாக்க மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே முடியும் இல்லையென்றால் அரசியல் அதிகாரத்தால் இதை தன் சுயநலத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி கடந்த மக்கள் அதிகாரம் இதழில் கூட இக்கருத்தை வலியுறுத்தி இருக்கிறேன்.

மேலும், காடுகளில் உள்ள வனவிலங்குகளை பாதுகாப்பது அரசுக்கு மட்டுமல்ல ,அது மனித வர்க்கத்திற்கும் அதில் அவசியம் பங்கு உண்டு. அதன் அடிப்படையாகக் கொண்டுதான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 30 ஆண்டுகள் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

 இந்த திட்டம் பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான சிறந்த வழிமுறைகளில், உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பது மிக முக்கியமானது. இது ஒரு சிக்கலான முயற்சியும், சவாலான அணுகுமுறையும் இதில் உள்ளது. அந்த வகையில் உலக அளவில் பெருகிவரும், ஆசிய யானைகளை இந்தியாவில் பாதுகாப்பதும் அடங்கும். மேலும், யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் ஆழமானது. இதற்கு உலக அளவில் ஈடு இணை இல்லை. இது இந்திய கலாச்சார அடையாளங்களிலும், கலை, இலக்கியம், நாட்டுப்புற கலைகள், மதம் சார்ந்த கலாச்சாரங்கள், ஆகியவற்றோடு யானைகள் பின்னிப்பிணைந்த ஒன்று.

 மேலும், இதிகாச புராணங்களிலும், விநாயகர் தனது தந்தங்களில் ஒன்றை ஒடித்து மகாபாரதத்தை எழுதியதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. மேலும், 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மற்ற நாடுகளை விட யானைகளின் எண்ணிக்கை நிலையானதாக இருந்தது. தவிர, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ல் கொண்டு வந்த போது, வனவிலங்கு பராமரிப்புக்கு உரிய சட்ட பாதுகாப்பை காடுகளில் உள்ள யானைகளுக்கும், மற்ற விலங்கினங்களுக்கும், இந்த சட்டம் வழங்குகிறது.

 மேலும், 1980ல் கொண்டு வந்த வன பாதுகாப்பு சட்டம், யானைகளின் வசிப்பிடங்களை பாதுகாக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் செயல்படும் மத்திய அரசு, யானைகளை பாதுகாக்க வலுவான நெறிமுறைகளை இந்தியா வகுத்துள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் ஐந்து சதவீதம் பகுதியில் யானைகள் காணப்படுகின்றன.

 மேலும் தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடியதில், நாம் ஏராளமான யானைகளை இழந்துள்ளோம். இந்த இழப்பை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதன் அடிப்படையில் மத்திய மாநில அரசுகளின் பெரும் ஒத்துழைப்பு காரணமாக, யானைகளை பாதுகாக்கும் திட்டத்தை தீவிரமாக மத்திய அரசு,  செயல்படுத்தி வருகிறது. தவிர, புலிகளை பாதுகாப்பதற்கான ப்ராஜெக்ட் டைகர் என்னும் திட்டத்தின் மூலமும், 1992 இல் ப்ராஜெக்ட் எலிபென்ஃட் என்னும் யானைகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அது முதல் மத்திய அரசு நிதி உதவியுடன் ,தொழில்நுட்ப உதவியும் இத்திட்டத்திற்கு வழங்கி செயல்படுத்தி வருகிறது.

 இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8078 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 33 யானைகள் சரணாலயங்கள் உள்ளன. மேலும், 2022 ஆம் ஆண்டு யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 30 வது ஆண்டு குறிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் யானைகள் பாதுகாப்பு திட்டத்தை ஒருங்கிணைந்து ,அதன் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவமானது என்பதை வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு புதிய யானைகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 மேலும், உத்தரப்பிரதேசத்தின் துத்துவாப் பகுதி, தொராய் யானைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பெரியார் மற்றும் அகஸ்தியர் மலைகளுக்கு இடையே அகஸ்தியர் மலை யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.தவிர, இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இயற்கை கலாச்சார உறவுகளை நாம் பேண வேண்டி காலத்தின் கட்டாயமாக அது இருந்து வருகிறது.

மேலும், நம் கலாச்சாரம் வாழ்க்கை முறை, கலை இலக்கிய பண்பாடு, இவை அனைத்தும் இயற்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்ற செய்தியை மக்களிடையே கொண்டு செல்ல மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அசாம் வனத்துறை ஆகியவை இணைந்து யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 30 ஆண்டுகளை குறிக்கும் வகையில் யானைகள் திருவிழாவாக கொண்டாட உள்ளன. இந்த பிரம்மாண்ட வனவிலங்கு பாதுகாப்பு திட்டம் ,அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *