நவம்பர் 23, 2024 • Makkal Adhikaram

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருப்பது அவருடைய உயர்ந்த உள்ளத்தை பாராட்ட வேண்டும் .
மாநாட்டுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அதோடு அவருடைய கொடுக்கல், வாங்கல் நின்று இருக்கலாம். ஆனால், மனசாட்சியோடு அந்த மக்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து ஒவ்வொருவர் குடும்பத்தினர் கையிலும், ஒரு மோதிரத்தை அணிவித்து சால்வை அணிவித்து பாராட்டி இருப்பது உண்மையிலே அவருடைய மனிதபிமானம் ஒரு நடிகராக இருந்தாலும், நடிக்காமல் மனசாட்சியோடு நினைத்துப் பார்த்து வாழ்கின்ற ஒரு சாமானிய மனிதரில் மாமனிதராக அவர்கள் நினைத்துப் பார்க்கின்ற அளவிற்கு செய்திருப்பது அவருடைய சமூக அக்கறை ,சமூக நலன், மக்களுக்கு அவருடைய சேவை, இத்தனையும் அதில் வெளிப்படுத்தி உள்ளார்

அதற்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், எமது மனமார்ந்த பாராட்டுக்கள் .