டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றத்திலே வைஸ் சேன்சிலர் நியமனங்கள் (vaice chancellor, s) தங்களுக்கு வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இது ஆளுநர் நியமிக்க வேண்டிய மிக பொறுப்பான வேலை. காரணம் கல்வியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஆனால் இருக்கிறது. இங்குதான் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு மாணவன் எப்படிப்பட்ட கல்வி கற்க வேண்டும்? அவனுடைய வாழ்க்கைத் தரத்திற்கு அல்லது வேலை வாய்ப்பிற்கு தொழில் வாய்ப்பிற்கு எந்த முறையான கல்வி அவன் பின்பற்றி படிக்க வேண்டும்? அதில் என்னென்ன சப்ஜெக்ட் உள்ளே கொண்டு வர வேண்டும்? என்பது கல்வியாளர்கள் குழு தீர்மானிக்க வேண்டும் .ஆனால், இங்கே கல்வியை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்படியே இவர்கள் இடம் இந்த வைய்ஸ் சேன்சிலர் அப்பாயின்மென்ட் கொடுத்தால் என்னவாகும்? யார் பணம் அதிகம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு அப்பாயின்மென்ட் போடுவார்கள்.தகுதி என்பது அரசியலுக்கு இல்லை. ஆனால், கல்வியாளர்களுக்கு தகுதி உண்டு. என்பதை அரசியல்வாதிகள் மறந்து விடக்கூடாது.
மேலும் ,தற்போது பல மாநிலங்கள் வைஸ்சென்சிலர் நியமனம் விஷயத்தில் கவர்னருக்கும், முதல்வர்களுக்கும் உள்ள மாறுபட்டு கருத்து போட்டி எல்லாம் அரசியலாக்கப்பட்டது. இதனால், பல மாநில ஆளுநர்கள் இந்த தீர்மானத்திற்கு கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டு வந்தனர். இறுதியில் இவர்களே சுப்ரீம் கோர்ட்டுக்கு இப்ப பிரச்சினையை கொண்டு சென்றதால், அங்கே சுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லிவிட்டது. வைஸ்சேன்ஸ்லர் நியமனம் ஆளுநருக்கே உள்ள அதிகாரம். அதை அவர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம். அதனால், அதற்கு தகுதியானவர்கள் யாரோ அவர்களை தான் நியமனம் செய்ய வேண்டும். மேலும், அரசியல் கட்சியினருக்கு வேண்டிய வழக்கறிஞர்களை பிபியாக சேர்த்து விடுவார்கள். அது போல் இதில் சேர்த்தால் என்னவாகும்? கல்வி துறையே சுத்தமாக நாசமாகிவிடும்.
ஏனென்றால் ஒரு பக்கம் கல்லூரியில் தனியார் நிர்வாகம் இருந்து வருகிறது. மற்றொரு பக்கம் அரசு கல்லூரிகள் நிர்வாகம் இருக்கிறது. இதில் மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் அவர்களை தேர்வு செய்து இவர்கள் கல்லூரியில் அதிக எண்ணிக்கை காட்டி பணம் சம்பாதிப்பார்கள். இந்த வேலை தான் நடக்கும். அதனால் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்து விடும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால், எந்த காலத்திலும் அரசியல்வாதிகள் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், ஒரு கல்வி மாணவனுக்கு எப்படி கொடுக்க வேண்டும்? எந்த முறையில் அவனுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்? என்னென்ன பாடத்திட்டங்கள் அதில் கொண்டு வர வேண்டும்? இதை எல்லாம் தீர்மானிப்பது கல்வியாளர்கள் குழுவாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், சட்டமன்றங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி,கல்விக்கு எதிராக உங்கள் கருத்து மோதலை மாணவர்களிடம் ஏற்படுத்தக் கூடாது. ஏனென்றால் கல்வி தான் அவர்களின் எதிர்காலம்.
அவர்கள் நன்றாக கல்வியில் தேர்ச்சி பெற்றால் தான் எந்த வேலையும் சரியான முறையில் செய்ய தகுதியை அவர்கள் பெற முடியும் .இதற்கு முன் கூட ஒரு செய்தியில் குறிப்பிட்டு இருந்தேன். நீட் தேர்வு பற்றி பேசுவதற்கு அரசியல் கட்சியினருக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் தகுதி கிடையாது. அதை யார் பேச வேண்டும்? மருத்துவ கல்வியாளர்கள் குழு அதைப் பற்றி பேச வேண்டும் .அவர்கள் தான் இந்த சப்ஜெக்ட் பற்றி தெரிந்தவர்கள். இவர்களுக்கு என்ன தெரியும்? நீட் வேண்டுமா? வேண்டாமா? கடந்த காலங்களில் இருந்தது. இப்போதும் அதுவே இருக்க வேண்டும் என்று ஒரு கட்டாயம் கிடையாது. காரணம் காலங்களுக்கு ஏற்றவாறு புதுப்புது நோய்கள் ஏற்படுகிறது. அதற்கு ஏற்றவாறு மருத்துவர்கள் பயின்றாக வேண்டும்.
அதனால் சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது போல, கல்வியிலும் மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் அவசியம். மேலும், உச்ச நீதிமன்றம் கல்வித்துறையை வைத்து முதலமைச்சர்கள், ஆளுநருடன் அரசியல் செய்து வந்ததற்கு சரியான முற்றுப்புள்ளி வைத்து தீர்ப்பளித்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு .