மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு நிவாரணத் தொகை ரூபாய் 6000 கொடுத்தும், மக்களின் நிலை என்ன ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக அரசு மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது .அதற்கான டோக்கன்கள் ஒருபுறம் கொடுத்து வருகின்றனர் .ஆனால், இந்த 6 ஆயிரம் ரூபாய் மக்களை திமுக அரசுக்கு ஆதரவாக ஆறுதல் படுத்துமா?  நிச்சயம் இல்லை.அவர்களுக்கு இந்த 6000 ரூபாயை விட, மழை நீர் வடிய வைத்தால் போதும்.

மேலும் ,சென்னை பகுதிக்கு ஒதுக்கப்பட்ட 4000 கோடி ரூபாய் மழை வெள்ள நீர் வடியும் திட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் என்ன வேலை செய்தார்கள்?  ஏன் இவ்வளவு வெள்ள நீர் சென்னையில் தேங்குகிறது ? அதற்கான காரணம் என்ன?  இவர்கள் வேலை செய்தார்களா?  இல்லை வெறும் வெற்று அறிக்கை விடுகிறார்களா?  இதுதான் சென்னை வாழ் மக்களின் முக்கிய கேள்வி?

 இது தவிர, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சில இடங்களில் சாலை வசதி இல்லாமல், சேற்றில் சென்று வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி பள்ளி மாணவி ஒருவர் கூறும் தகவல் என்ன?  மேலும், சென்னை வாழ் மக்களின் மனநிலை என்ன?  இவையெல்லாம் தமிழக அரசு எப்படி சரி செய்யப் போகிறது?  இதுதான், சென்னை வாழ் பாதிக்க பட்ட மக்களின் முக்கிய அதங்கம்.

அதுமட்டுமல்ல, இவர்கள் நிவாரண பொருட்களையும் ,இலவசத்தையும் கொடுக்க தேவையில்லை .எங்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அரசாங்கம் செய்தால் போதும் என்பதுதான் இந்த மக்களின் முக்கிய கேள்வி? அரசாங்கம் பிரச்சனைகளுக்கு எல்லாம் போர்க்கால நடவடிக்கை எடுக்குமா? இல்லை ஊடகங்களில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கப் போகிறார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *