இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்வதால், பல எண்ணெய் கிணறுகள் மீது , ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியுள்ளது.இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது.

மேலும் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிர,இந்தியாவில் 60% வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, இந்தப் போரால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்து கொண்டு வரக்கூடிய வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால், மக்கள் மாற்று எரிபொருள் சக்தியை பயன்படுத்துவதை தவிர, ,வேறு வழி இல்லை. மேலும்,

இதற்கு மாற்று எரிபொருள் மின்சாரம், அது சூரிய ஒளி மின்சாரமாக இருக்கலாம் அல்லது நீர் மின்சாரத்தின் மூலம் வரக்கூடிய மின்சாரமாக இருக்கலாம் .அது எப்படிப்பட்ட மின்சாரமாக இருந்தாலும் ,மக்கள் அதிக அளவு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மேலும்,இந்த எரி பொருள் தட்டுப்பாட்டால், அத்தியாவசிய பொருட்களின் விளைவு உயர்வு, இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், டீசலில் இயங்கக்கூடிய சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் வாடகையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப் படுவதால், அனைத்து பொருட்களும் விலை உயர்வு ஏற்படும் என்பது உறுதி.

இதற்கு உடனடியாக அரசாங்கம், மின்சார பயன்பாட்டில் சரக்கு வாகனங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அதேபோல், பேருந்துகள் கட்டண உயர்வு அதிகரிக்கும் அதனால், மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேருந்து வாகனங்கள் ,அதிக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும்,நீர் அல்லது காற்று அல்லது நிலக்கரி போன்றவற்றை மாற்று எரிபொருள் சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகளை புதிய கண்டுபிடிப்புகளாக அரசு ஊக்குவித்து, அதில் மாற்றத்தை மக்களின் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் .

அப்போது தான் கச்சா எண்ணெய் எரிபொருள் சக்திக்கு மாற்றான சக்தியாக இதை உருவாக்கலாம். இதன் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்றலாம்.மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அங்கு இயல்பு நிலை திரும்ப ஆண்டு கணக்கில் ஆகும் என்பதை நினைவில் கொண்டு, மத்திய அரசு இதற்கான மாற்றத்தை மக்களின் வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *