தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க ஆட்சியாளர்களிடம் மிக நெருக்கமாக இருந்தவர் மட்டுமல்ல பணியாற்றியவர். ஊட்டியில் கலெக்டராக இருந்தபோது அப்போதய கவர்னர் குராணாவிடம் மிக நெருக்கமாக இருந்தவர்.
இவர் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து அக்காலத்தில் மாவட்ட ஆட்சியர் என்ற நிலையை அடைவது சாதாரண விஷயம் அல்ல. கடும் உழைப்பின் மூலம் தான், இந்த நிலையை அவர் அடைந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நிலையை அடைந்து, வாழ்க்கையில் ஒரு சமூக அந்தஸ்து பெற்றாலும், அந்தப் பழமை மாறாமல், தான் கடந்து வந்த கடினமான பாதைகளை மறக்காமல், என்பது(80) வயதிலும் இளமையாக இருந்து வருகிறார் .
இறைவன் அவருக்கு நூறாண்டுகள் நோய் நொடி இன்றி சிறப்புடன் வாழ அருள் புரிய வேண்டும் . இதை ஏன் சொல்கிறேன் என்றால், இவர் பணி ஓய்வு பெற்றும், இன்றும் இவருடைய சமூகப் பணி தொடர்கிறது என்று நினைக்கும் போது, எனக்கும் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது. வயதைப் பற்றி பேசும்போது அவர் சொன்னார் வெள்ளைக்காரன் வயது ஒரு எண்கள் தான் என்றார்.
மேலும், நீங்கள் மூன்று முதலமைச்சர்களிடம் நெருக்கமாக பணியாற்றி இருக்கிறீர்கள் .இதில் யார் சிறந்த நிர்வாகி? என்று கேட்டேன். அவர் சொன்னார் கலைஞர் கருணாநிதி தான் என்றார். அதற்கு அடுத்தது ஜெயலலிதா. எம்ஜிஆர் பொன்மனச் செம்மல், அவருக்கு நெருக்கடியான முக்கிய சில அரசியல் பிரச்சினைகளில் மூளையாக இருந்து செயல்பட்டவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா கான்வென்டில் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தார்.இருப்பினும் அவருடைய இங்கிலீஷ் நாலேஜ் அந்த அளவுக்கு இருக்குமாம் .தவிர,இவருடைய பைலை கூட அந்த அம்மா திருத்துவார்களாம். அந்த அளவுக்கு ஸ்பீச் கூட இருக்குமாம் .அப்படிப்பட்ட ஒரு ஆளுமை மிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்தவர் அதிமூலம் ஐஏஎஸ்.
இவர் ஐஏஎஸ் சங்கத்தின் மாநில தலைவராக இருக்கும்போது, இந்த அம்மா இவர்களை எல்லாம் சாட்டையால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று சட்டமன்றத்தில் சொல்லிவிட்டார். அப்போதுதான் அந்த அம்மாவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார் .அதற்கு பனிஷ்மென்ட் ஆக இவரை ஒரு டெம்மியான போஸ்டில் போட்டு இருக்கிறார். அதை பற்றி கவலை கவலைப்படாமல் பணியாற்றி இருக்கிறார். மேலும்,மீண்டும் தனக்கு ஒரு நல்ல இடத்தை தர வேண்டும் என்று போய் அந்த அம்மாவிடம் நிற்கவில்லை. இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால், அப்போதைய ஐஏஎஸ் எப்படி இருந்தார்கள் என்பதற்காகத்தான் .
இதே போல தான், திருவள்ளூர் மாவட்டத்தில் நான் மாவட்ட செய்தியாளராக பணியாற்றியபோது அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் சந்திரமோகன் என்ற கலெக்டரிடம் தினமும் காலையில் நான்கு முறை, அதேபோல் மாலையில், இரவில் பேசுவேன். அப்போது கூட நான் எந்த ஒரு வேலையும், எனக்காக கேட்டு நின்றதில்லை .ஒரு தடவை என்னுடைய கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி நானும் ஒரு புகார் அளித்தேன் .
அப்போதைய எம்எல்ஏ ரவி ராஜூம் புகார் அளிக்கிறார், அதைப்பற்றி அவர் கொண்டு வந்த பைலை தூக்கி தூர போட்டார். இது அவர்களுடைய பணியின் நேர்மை எந்த அளவுக்கு இருந்தது என்பதுதான் இங்கே சொல்ல வந்த முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இவர் இப்படி தான் என்று பேசும் அளவிற்கு அப்போதைய ஐஏஎஸ் இருந்தார்கள். இப்போதைய ஐஏஎஸ் கள் கட்சிக்காரர்களுக்கு பாத பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தவிர ,ஆதி மூலம் ஐஏஎஸ் விவசாயத் துறை செயலாளராக இருந்தபோது, (Agriculture secretary)அப்போதைய கலைஞர் ஆட்சியில் வீரபாண்டி ஆறுமுகம் விவசாயத் துறை மந்திரி, இருவரும் இரண்டு விதமான கோப்புகளை முதல்வர் கலைஞரிடம் கொடுக்கிறார்கள். அதில் கலைஞர் செகரட்டரியின் கோப்பு ஏற்கப்படுகிறது என்று வெளிப்படையாகவே தெரிவித்தாராம். இதை சொல்ல வேண்டிய அவசியம், ஒரு அமைச்சருக்கு கீழ்தான் செக்ரட்டரி அவருக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றி விடுவார்கள்.
ஆனால், இவர் அமைச்சருக்கு பிடித்த மாதிரி வேலை செய்யாமல், அந்த துறையின் நிர்வாகம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று பணியாற்றி பெருமை சேர்த்திருக்கிறார். அதனால், காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறக்கூடாது. எனவே ,இந்திய ஆட்சிப்பணி மக்களின் சமூக சேவைக்காக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முக்கிய கருத்து.
கடவுள் எல்லாரும் ஐஏஎஸ் ,ஐபிஎஸ் ஆக ஆக்கவில்லை. அந்தப் பொறுப்புக்கு வருபவர்கள் புண்ணியம் செய்து, அவர்களுடைய தாய் தந்தையர்கள் செய்த புண்ணியத்தின் பலனால்தான் உயர்ந்த பொறுப்புக்கு வருகிறார்கள். அப்படி வந்தும் கொடுக்கப்பட்ட வேலையை, ஆட்சியாளர்களின் கொத்தடிமைகளாக கிளர்க்கு வேலை பார்ப்பதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க தேவையில்லை.
இது மக்களுக்கான இந்திய ஆட்சிப் பணி என்பதை இருக்கின்ற அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கும் தெரியும். ஆனால், சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாறிவிடுவது அப் பதவிக்கும், பணிக்கும் கொடுக்கின்ற மரியாதை பற்றி தான் அனைவரும் சிந்திக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறேன்.மேலும்,
தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நல்ல மனிதர் என்று இவருக்கு சான்றிதழ் அளிக்கிறார்- ஆதிமூலம் ஐஏஎஸ் .