மோடியால் கூட்டணி ஆட்சியை ஐந்தாண்டு நிறைவுசெய்ய முடியுமா ? – கஷ்டம் தான் என்கிறார்கள், அரசியல் ஆய்வாளர்கள் .

அரசியல் இந்தியா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 08, 2024 • Makkal Adhikaram

மோடி வளமான பாரதத்தை உருவாக்க நினைத்த நேரத்தில், மக்கள்  பிஜேபிக்கு மெஜாரிட்டி இல்லாமல்,கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இது நாட்டு மக்களின் துரதிஷ்டவசம்.மேலும், 

மோடியின் கனவு, எதிர்கால இளைஞர்களின் கனவாக இருந்தது. இந்தியா எதிர்கால இளைஞர்களின் கையில் மிளிரட்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார் .அந்த வகையில் மோடி மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியும், நேர்மையான ஆட்சியும் சமூக ஒற்றுமை உள்ள ஆட்சியும் இதுவரை கொடுத்தார்.

ஆனால், மக்கள் இப்போது கூட்டணி ஆட்சியை மோடியின் கையில் கொடுத்துவிட்டார்கள். கூட்டணி ஆட்சியில் இப்போதே டிமாண்ட் வைக்கிறார்களாம். எங்களுக்கு கேபினட் மந்திரி 3, 3 இணைய அமைச்சர்கள் போன்ற பொறுப்புள்ள பதவிகளை சந்திரபாபு நாயுடு டிமாண்ட் வைத்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது தவிர ,ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நெருக்கடி கொடுப்பார் என தெரிகிறது.

அதேபோல் நிதீஷ் குமார் இப்படி தன்னால் தான் இந்த ஆட்சி ,அப்படின்ற ஒரு நிலைமைக்கு இவர்கள் வந்துவிட்டால், மற்ற மாநிலங்களின் நிலைமை என்ன? இவர்களுடைய சொந்த மாநிலத்தை மட்டும் இப்படி பார்த்துக் கொண்டால், மற்ற மாநிலங்கள் எங்கே செல்வார்கள்? மேலும், மோடி என்ன கனவு கண்டாரோ, அதை இனி செயல்படுத்த முடியுமா? என்பது சந்தேகம் தான். அதேபோல் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் அவர்களெல்லாம் மணி மைண்ட் உள்ளவர்கள் என்கிறார்கள் .மணி மை ண்ட் உள்ளவர்களிடம் சேவையை மக்கள் எதிர்பார்க்க முடியாது .அது எல்லாமே வியாபார நோக்கமாகத்தான் இருக்கும்.

அரசியல் தெரியாத மக்களிடம் 1000 ,500 என்று விலை கொடுத்து வாங்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். முட்டாள் அரசியல் கட்சியினரின் பேச்சை நம்பி இவர்கள் தலையில், இவர்களே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம், மற்றொருபுறம் நாட்டுக்கே நேரம் சரியில்லை. என்கிறார்கள் ஜோதிடர்கள். அதனால் தான் ,ஊழல்வாதிகளே ஆட்சியாளர்களாக வருகிறார்கள் .

இல்லையென்றால் இந்த மக்கள் நல்லவர்களை தேர்வு செய்ய மாட்டார்களா ? அவர்கள் பேசுகின்ற பொய்யை நம்பிக் கொண்டு ,ஆயிரம் ரூபாய் பெரிய விஷயமாக நினைத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏமாற்றும் அரசியலில் மட்டுமல்ல ,அது வாழ்க்கையில், தொழிலில், வியாபாரத்தில், எல்லாவற்றிலும் தொடர்கிறது .ஒரு நாட்டின் அரசியல் சரியில்லை என்றால் அந்த நாட்டு மக்களுடைய வாழ்க்கையில் அமைதி,சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி, போன்றசரியான முறையில் இருக்காது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் எல்லாமே அரசியலைத் ஒட்டி தான் வருகிறது அப்படி இருக்கும் போது, அரசியல் எப்படி தீர்மானிக்கப்படுகிறதோ, அப்படித்தான் மக்களின் வாழ்க்கையும் இருக்கும். அதனால், அரசியல் என்பது மிக மிக கவனமாக கையாள வேண்டிய ஒரு கடமை உணர்வு . இதை தவறாக ,அலட்சியமாக இருப்பவர்கள், எப்படியும் பேசி ,எப்படி வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் இந்த நாட்டைப் பற்றியும், சமூக நலன் பற்றியோ ,அக்கறை இருக்காது. அதனால் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழல்வாதிகளும், எதற்கு இவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்? செய்தால் மட்டும் ஓட்டு போடுவார்களா? செய்யாமலே பணத்தைக் கொடுத்து, இவர்களுடைய வாக்குகளை விலைக்கு வாங்கினால் நமக்கு கஷ்டமில்லாமல் வருகிறது. எதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும் அதற்கு பதிலாக எத்தனை கோடி எந்த திட்டத்தில் கொண்டு போகலாம்? என்பதை மட்டும் பார்த்தாலே போதும் .இது தான் தமிழ்நாட்டின் நிலைமை. யாராவது பணமும் கொடுத்து சேவையும் செய்வார்களா? இது கூட தெரியாமல் வாக்களித்தால் மக்களின் முன்னேற்றம் வாழ்வாதாரம் எப்படி ஏழை எளிய நடுத்தர மக்கள் தீர்மானிக்க  போகிறார்கள் ? மேலும்,

சரி மோடி வேண்டாம் என்று சொன்னாலும், காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணிகளை சமாளித்து,மக்களுக்கு ஒரு ஊழல் அற்ற ஆட்சியும் நல்லாட்சியும் தர முடியுமா ?நிச்சயம் முடியாது.ஏனென்றால்,இந்தியா கூட்டணியின் உள்ள ஒவ்வொரு மாநில கட்சிகளும் ஊழலில் சிக்கித் தவிக்கும் அரசியல் கட்சிகள். அதனால் தான் பணத்தையும் ,போய் பிரச்சாரங்களையும் அள்ளி வீசி இந்த அளவுக்கு வந்திருக்கிறது. மக்களுக்கு அரசியல் தெரியாத காரணம் தான் தொடர்ந்து இது போன்ற பொய்களை நம்பி ஏமாறுவதும் கார்ப்பரேட் ஊடக பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் பொய்களை பரப்புவதும், நாட்டில் ஏமாற்றும் கலை.

 செய்ய முடியாதது எல்லாம், செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கொடுப்பார்கள். அதில் ஒன்று கூட செய்ய முடியாது. எம்பி தேர்தலில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி அதுதான். ஏற்கனவே, சொன்ன எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள் .மக்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவின் ஆட்சி எந்த அளவுக்கு நெருக்கடிகள் கொடுக்கப் போகிறது? என்பது தெரியும். சொல்வதற்கும், செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. அதுதான் இந்தியா கூட்டணியின் சாராம்சம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *