ரயிலில் சீட்டைப் பிடித்தவர்கள் மற்ற பயணிகளுக்கு மன வலியை ஏற்படுத்துவதை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

அரசியல் இந்தியா சமூகம் தமிழ்நாடு தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 31, 2024 • Makkal Adhikaram

ரயில் பயணம் என்பது வலியும் வேதனையும் ஆன பயணமாக இருப்பதற்கு காரணம் முண்டியடித்துக் கொண்டு சீட்டு பிடிக்கும் கூட்டங்கள் சீட்டு பிடித்த உடன் நிற்பவர்களுக்கு ஏதோ சாதித்தது போல கற்பனை. அந்த அளவிற்கு கூட்டத்தின் நெருக்கடிகள். இது உட்கார்ந்து இருப்பவர்களை தவிர, நிற்பவர்கள் அனைவருக்கும் வலிக்கும் மன வலி தான் அது.

 குறுகிய நேரமாக இருந்தாலும், அதில் ஒரு வேதனையான பயணம்தான் சீட்டு பிடித்து விட்டு யாரோ அவருக்கு வேண்டிய நண்பர்கள் அவர் எங்கு வருகிறார்? என்று கூட தெரியாது. அவர் வருவாரா? வரமாட்டாரா? என்பது கூட தெரியாது. ஆனால் இவர் சீட்டை போட்டுவிட்டு ஆள் வராங்க, ஆள் வராங்க சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது என்னவோ ரயில் பயணத்தின் போது இவர்கள் அந்த சீட்டை விலைக்கு வாங்கினவர்கள் போல் மற்ற பயணிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 இது படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இப்படித்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். இதற்காக சிலர் வாய் சண்டை ,தகராறு போட்டுக் கொண்டவர்களும் உண்டு. இங்கே எல்லோரும் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் ரயிலில் பயணம் செய்கிறோம். ஆனால், அந்த ரயிலில் ஒருவருக்கு சீட்டு கிடைத்து விட்டால் நிற்பவர்கள் பார்த்து ரயில்வே சொத்தை வேலைக்கு வாங்கியது போல, சில முட்டாள்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த செயலை பார்த்து தங்களுடைய மன வேதனையை இரண்டு பேர் என்னிடம் தெரிவித்தார்கள் இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கை ரயில்வே நிர்வாகம் எடுத்தால் தான் ரயில் பயணிகளுக்கு அது பொது சொத்து என்பது தெரிய வரும். 

அதனால், இப்படிப்பட்ட சீட்டைப் பிடித்துக் கொண்டு தகராறு செய்பவர்கள் சீட்டு போட்டுவிட்டு இவருக்கு வேண்டியவர்கள் வரும் வரை அந்த இடத்தில் யாரும் உட்காரக் கூடாது என்று தடுத்தால், அப்படிப்பட்ட நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 500 அபராதம் விதித்தால் மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் சொத்துக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது என்ற ஒரு உணர்வை அப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே மற்ற பயணங்களுக்கு ஏற்படும் மன வலியை தடுக்க முடியும்.

 இதனால் வரக்கூடிய வாய் தகராறுகள் ,சண்டை சச்சரவுகள் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று ரயில் பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *