உச்சநீதிமன்றத்தில் 10.5% இட ஒதுக்கீட்டை மாநில அரசே நிறைவேற்றிக் கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
ஆனால் ,அதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலினுடைய மைத்துனர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ,மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. தரவுகள் சரியாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1985இல் அம்பாசங்கர் அறிக்கை இன் படி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என உருவாக்கப்பட்டது.
அதில் 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை. இந்த அறிக்கை தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை .இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி ஆகும்.
மேலும் இந்தியாவில் 1931இல் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு 1985 அம்பா சங்கர் ஆணையத்தின் சாதிவாரி மக்கள் தொகைப் படி தான் 1993 முதல் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு (அதில் BC -30%, MBC -20%,SC/ST – 19% = 69%),BC (M) – 3.5% ( முஸ்லீம் உள் இடஒதுக்கீடு) , SC(A) – 3% (அருந்ததியர் உள் இடஒதுக்கீடு மற்றும் MBC (V)-10.5% (வன்னியர் உள் இடஒதுக்கிடு) என அனைத்து இடஒதுக்கீடுகளும் தற்போது வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தவிர 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பு இன்று வரை அமுல்படுத்தவில்லை மேலும் அம்பாசங்கர் அறிக்கையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திமுக அரசு சொல்கிறது இதே திமுக அரசு தான் 2010 பத்தாம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி அம்பாசசங்கர் அறிக்கையின் பேரில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
அந்த இட ஒதுக்கீடு இன்று வரை தொடர்கிறது. மேலும், இப்ப பிரச்சனையில் தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும், உச்ச நீதிமன்றத்திலும் சரியாக மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடவில்லை .அதனால்தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையும் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அதற்கு இடைக்கால தடை விதித்தது. பிறகு ,அந்த தடையும் நீக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், சிக்கல்கள் ஏற்படுத்தி இதை நிறைவேற்றக்கூடாது என்பதில் திமுக அரசு ஒரு உள்நோக்கத்துடன் தான் இருந்து வருகிறது.
ஆனால், மதம் மாறிய கிறிஸ்துவ, முஸ்லிம் ஆதி திராவிட இந்துக்களுக்கு சலுகை தேவை என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதே தீர்மானத்தை ஏன் வன்னியர்களுக்கு திமுக அரசு நிறைவேற்ற முன் வரவில்லை? இது திமுக அரசின் உள்குத்து வேலையா?
மேலும், இது பற்றி வாய் திறக்காத திமுகவை சேர்ந்த வன்னிய சமூக அமைச்சர்கள் ,எம்எல்ஏ , எம்பிக்கள் இனி வன்னிய சமுதாய மக்களிடம் வாக்கு கேட்க அவர்களுக்கு அருகதை உள்ளதா? என்கின்றனர் வன்னிய சமூக மக்கள் – வன்னியர் சத்ரிய சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் – சி ஆர் ராஜன்.