எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ, அப்போதெல்லாம் இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை ராமதாஸ் கையில் எடுப்பார்.
இப்போது 10.5% போராட்டத்தை மீண்டும் அந்த அறிக்கையும், போராட்டமும், வன்னிய சமூகத்திற்கு இதைப் பார்த்துப், பார்த்து புளித்து போய்விட்டது. இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் 10.5% நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால்,என்ன? நடக்கப் போகிறது? வன்னியர் சமுதாயத்திற்கு இது ஷோ காட்டும் போராட்டமா? இப்படிப்பட்ட போராட்டம் நடத்துவதை விட நடத்தாமல், இந்த சமூகத்திற்கு நீங்க செய்த சேவைகள் போதும் என்று தான் சமூகம் புலம்பி தவிக்கிறது. தொடர்ந்து சமூகம் ஏமாறுமா?