வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது திமுக அரசின் நோக்கமா ? – சி.ஆர்.ராஜன்.

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது திமுக அரசு ! அதில் திட்டவட்டமாக உள்ளது என்கிறார் சத்ரிய சாம்ராஜ்ய நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன்.

கொடுக்கக் கூடாது என்பதற்கு பல காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்கலாம். ஆனால், கொடுக்க வேண்டும் என்றால் எந்த காரணமும் சொல்லத் தேவையில்லை. இது திமுக அரசு சொல்லுகின்ற ஒரு சாக்கு, போக்கு வேலை. அதை எல்லோரும் நம்பத் தயாராக இல்லை. இருப்பினும், இதனுடைய விளைவு தேர்தலில் நிச்சயம் வன்னியர்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள். அதில் 100% உண்மை.

 ஏற்கனவே, இந்த ஆட்சியில் மக்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ,ஒரு சமூக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வேறு ஒரு சமூக இன மக்களை தூண்டிவிட்டு பேச வைப்பது,வழக்கு தொடர்ந்து அதில் தரவுகள் இல்லை என்று தட்டி கழிப்பது ,இது எல்லாம் திமுகவிற்கு கைவந்த கலை என்கிறார் – சி ஆர் ராஜன். மேலும்,

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய 10 .5 சதவீத இட ஒதுக்கீட்டை, திமுக ஆட்சியில் அதை நிறைவேற்ற என்னென்ன தடைகளை ஏற்படுத்த முடியுமோ, அத்தனை தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அம்பா சங்கர் ஆணையத்தின் அறிக்கையில் குளறுபடி உள்ளது .அந்த ஆணையத்தின் அறிக்கைப்படி வன்னியர்களுக்கு 10 .5 சதவீத சட்டம் இயற்றியது தவறு என்று 19 85இல் அந்த சட்டத்தை ரத்து செய்ய வைத்தார். பிறகு, வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய தலைவர் சி ஆர் ராஜன் சார்பாக, எடப்பாடி பழனிசாமியின் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன் மூலம் வன்னியர்களுக்கு 10 .5 சதவீத இட ஒதுக்கீட்டை புதிய தரவுகளுடன் 102 & 105  அரசியலமைப்பு சட்டப்படி நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றத்தில் 31.3. 2022 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்பதில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதில் தெளிவாக இருக்கிறார். ஆகக்கூடிய மு க ஸ்டாலின், ராஜ கண்ணப்பன் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் வன்னியர் சமுதாயத்திற்கு 10 .5 சதவீத இட ஒதுக்கீடு வரக்கூடாது என்பதில் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறார்கள் .அதில் மாற்றுக் கருத்து இல்லை .

மேலும், இவர்கள் சட்டமன்றத்திலே பேசிய உரைகளின் மூலம் பொய்யான தகவல்கள், இந்த சமூகத்திற்கு எதிரான போட்டியில் உள்குத்து வேலை செய்யும்போது ,வன்னியர் சமுதாயத்திற்கு எப்படி 10 .5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவார்கள்?

 மேலும் எம் பி சி(v) உள் ஒதுக்கீடு தரவுகள் மூன்று மாதங்களில் அறிக்கை தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 12 .1. 2023 தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தற்போது, மேலும் ஆறு மாத காலம் நீடிப்பு செய்துள்ளது. இது எதற்காக? இது தவிர, உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு மற்றும் அம்பா  சங்கர் ஆணையத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தவறு என குறிப்பெழுதி வன்னியர்களுக்கு கொடுக்க வேண்டிய 10 .5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை திமுக அரசு திட்டமிட்டு முடக்கி வருகிறது.

மேலும், இவருடைய தந்தை கருணாநிதி செய்த தவறு இந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு ஜாதிகளை ஒன்றாக இணைத்து இட ஒதுக்கீடு கொடுத்தார். இப்போது உச்சநீதிமன்றத்தின் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட, அந்த இட ஒதுக்கீட்டைக் கூட கொடுக்கக் கூடாது என்று முதல்வர் மு க ஸ்டாலினின் முக்கிய நோக்கமா? – சி ஆர் ராஜன் தலைவர் வன்னியர் சத்திரியர் சாம்ராஜ்யம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *