சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது விவசாய நிலத்திற்கு விவசாயிகள் ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளலாம். அது வண்டல் மண்ணா? அல்லது சவுடு மண்ணா? எந்த மண் எடுப்பது? மேலும் ஒரு விவசாயி எத்தனை லோடு எடுக்கலாம்? எந்த வண்டியில் எடுக்கலாம்? எந்த விவரம் இல்லை.

மேலும், எதற்காக விவசாயி அந்த மண்ணை எடுத்து, எந்த பயன்பாட்டிற்கு கொண்டு செல்கிறான்? அதன் வரைமுறை என்ன? கலெக்டர் கொடுக்கின்ற அனுமதி, அது ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுக்காதா? இது விஞ்ஞான பூர்வமான ஊழலுக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?

மேலும், எத்தனை விவசாயிக்கு நாட்டில் ஏரிகள் மண்ணை எடுத்து நிலத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது? இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா? மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏன் ?என்றால் ஏரிகள், ஆறுகள், குளங்கள் பாதுகாக்கப் பட வேண்டிய ஒன்று. திமுக அரசு இதில் மிக பெரிய ஊழலை விஞ்ஞான பூர்வமாக ஏற்படுத்த திட்டம் போட்டுள்ளதா ?
.jpg)
மேலும்,ஏரிகள் தூர் வாரி கரைகளை பல படுத்துவதாக சொல்லி, ஏரி மண்ணை ஏன் வெளியே எடுத்து செல்ல வேண்டும்? கரைகளை பல படுத்த பல கோடிகளை இதன் மூலம் சுருட்ட வாய்ப்புள்ளது. இது பற்றி சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏ கூட வாய் திறக்கவில்லை என்பது தான் வேடிக்கை. அரசியல் என்பது லாபம் பார்க்கும் தொழிலா? வாக்காளர்கள் கேள்வி……?
.jpg)
மேலும்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான்வர்கிஸ் சாலை ஓரங்களில் மண் கொட்ட கொடுக்கப்பட்ட (Order) அனுமதி இன்று பல செங்கல் சூளைகளுக்கு அந்த மண் விற்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்த லட்சணத்தில் கிராமங்களில் இவர்களுடைய மண் கொள்ளைக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதா ? இதை திமுக அரசு எப்படி சமாளிக்க போகிறது?
%20(1)%20(1).jpg)
அரசியல் கட்சி கிரிமினல்களுக்கு இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இப் பிரச்சினை கிராமங்களில் திமுக அரசுக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.