திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்கு இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
கூட்டத்தில் தங்களுடைய பிரச்சனைகளை விவசாயிகள் தெரிவிக்கும் போது விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார். அதைத்தொடர்ந்து பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாத எம்எல்ஏ பூண்டி கலைவாணன் விவசாயிகளை மிரட்டும் தோரணையில் பேசியது விவசாயிகளுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளித்துள்ளது.
எந்தப் பிரச்சினைகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் எதிர்பார்த்தினரோ அதற்கான பதில் மாவட்ட ஆட்சியரிடம் இல்லை. மேலும், எம் எல் ஏ பூண்டி கலைவாணரிடமும் இல்லை. எதற்கு இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் என்பது தான் அனைத்து விவசாயிகளிடமும் எழுந்துள்ள முக்கிய கேள்வி ?