தேனி மாவட்ட ,இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கடந்த 2017 முதல் 2022 வரை ஊராட்சி நிதியினை ஊராட்சி செயலர் திருப்பதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கி-ஊ),
இளநிலை பொறியாளர்,அரசு ஒப்பந்ததாரர்கள், ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா மற்றும் தலைவரது மகன்கள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஊராட்சி நிதியினை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்தோடு ஊராட்சி நிதியினை பல வழிகளில் முறைகேடாக கணக்கு எழுதி கையாடல் செய்துள்ளதாக சர்வதேச உரிமைகள் கழக, நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு . மேலும் இதுகுறித்து சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் பெற்ற தகவலின் படி ஊராட்சியில்-
(1)மத்திய அரசு பணியில் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருபவர் பெயரில் காசோலை மூலமாகவும், நிதி கையாடல்.(2)ஊராட்சி கணக்கில் வேலை செய்ததாக குறிப்பிட்டு காண்பித்துள்ள நபர்கள் அவ்வூரிலேயே இல்லாத நபர்கள் பெயரில் காசோலை மூலமாகவும் பொது நிதி மூலமாகவும் நிதி கையாடல்.(3)தனியார் கட்டிடத்திற்கு வயரிங் பொருள் ஊராட்சி செயலர் திருப்பதி பெயரில் வாங்கியதாக காசோலை மூலமாகவும் நிதி கையாடல் மேலும்,
(4)இயங்காத சுகாதார வளாகத்தினை சுத்தம் செய்ததாகவும்,குடிநீர் குழாய் பழுதை சரிசெய்ததாகவும்,மோட்டார் பழுதை சரிசெய்ததாகவும், காசோலை மூலமாகவும், பொதுநிதி மூலமாகவும் நிதி கையாடல்.(5)நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாத நபர் வங்கி கணக்கில் தொகை செலுத்தியும்,கணவர் இறந்தபின்பு வேறு திருமணம் செய்து வெளியூரில் வசித்துவருபவர் பெயரில் நூறுநாள் வேலை செய்ததாக கணக்கில் தொகை செலுத்தியும் நிதி கையாடல்.மேலும்,
(6)ஆழ்துளைகிணறு, மோட்டார் வாங்காமலேயே வாங்கியதாக கணக்கில் எழுதியும்,சாக்கடை இல்லாத பகுதியில் சாக்கடை எடுத்ததாகவும், சுகாதார வளாகம் சுத்தம் செய்யாமலேயே சுத்தம் செய்ததாகவும்,OHT தொட்டி சுத்தம் செய்யாமலேயே சுத்தம் செய்ததாகவும், கேட்வால்வு வாங்காமல் வாங்கியதாகவும், குடிநீர்குழாய் பராமரிப்பு செய்யாமல் பராமரிப்பு செய்ததாக காசோலை மற்றும் பொதுநிதியின் மூலமாகவும் நிதி கையாடல். தவிர,
(7)நுறுநாள் வேலையாட்கள் பெயரில் வேலை செய்யாமல் வேலை செய்ததாக காசோலை மற்றும் பொதுநிதி மூலமாகவும் நிதி கையாடல்.(8)தலைவரின் மகன் திருப்பதிராஜ் பெயரில் நூறுநாள் வேலை செய்ததாகவும் அதே தேதியில் ஊராட்சியில் வேலை செய்ததாகவும் காசோலை மற்றும் பொதுநிதியின் மூலமாகவும் நிதி கையாடல்.மேலும்,
(9)ஊராட்சி தலைவரின் மகன்கள் ராஜேஸ்கண்ணா, பாண்டியராஜ் ஆகியோர் ஊராட்சியில் பல வேலை செய்ததாக காசோலை மற்றும் பொதுநிதி மூலமாகவும் நிதி கையாடல்.(10)ஆதிதிராவிடர் மேம்பாட்டு நிதி,15-வது மானியக்குழு நிதி ஆகியவற்றில் திட்டப்பணிகளை செய்யாமலேயே வேலை செய்து முடிக்கப்பட்டதாக நிதி கையாடல். இது தவிர,
(11)வேலை செய்யாத நபர்களான வீரா,விஜயசாரதா, ரீனா,பாலமுருகன், முருகன்,பரமன்,சுரேந்திரன்,கோபிநாத் போன்ற இன்னும் பல பெயரில் வேலை செய்ததாக முறைகேடாக கணக்கில் எழுதியும் நிதி கையாடல் செய்துள்ளார்கள்.
இந்த முறைகேடு சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் அவர்களிடம் கடந்த 30.09.2022 அன்று அலுவலகத்தில் நேரில் புகார் மனுவினை ஆதாரங்களுடன் அளித்தும், நினைவூட்டும் மனுவினை பதிவு தபாலில் அனுப்பியும், மக்கள் குறைதீர் மனுநாளில் பல மனுக்கள் அளித்தும் இன்று வரை 90 நாட்களைக் கடந்தும் மேற்கண்ட புகாரினை விசாரணை செய்து மேற்கண்ட நபர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டாக சேர்ந்து நிதியை கையாடல் செய்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் ஊழல் செய்தவர்களுடன் துணை போவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
அது சமயம், இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி நிதியினை எனக்கு தெரிந்தவரையில் ஐம்பது இலட்சத்துக்கும் மேலாக கையாடல் செய்துள்ள மேற்கண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும்,அரசாணை எண்: 73-ன் படி 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்(மதுரை கிளை)-யில் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக சர்வதேச உரிமைகள் கழக, நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் . இருப்பினும் மாவட்ட ஆட்சியரே ஊராட்சிகளின் மோசடிகள் குறித்து இந்த எண்ணில் தொடர்பு கொள்ள தெரிவித்துள்ளதால் ,
சர்வதேச உரிமைகள் கழகத்திற்கு மக்கள் அதிகாரம் சார்பில் அவர் வெளியிட்டுள்ள எண்ணில் ஜனவரி 1 முதல், (8925811328) தொடர்பு கொண்டு உங்கள் புகாரை தெரிவியுங்கள் .அதற்கு என்ன பதில் வருகிறது? அல்லது நடவடிக்கை வருகிறது? என்பதை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கலாம் அல்லவா ?
-முரளிதரன்.