2024 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து உலக நாடுகளுக்கிடையே வேற்றுமைகள், கருத்து மோதல்கள் ஆரம்பம் ஆகிவிட்டது. இன்றும் இஸ்ரேல், காசா போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் சைனா தன்னுடைய ஆதிக்கத்தை கடன் கொடுத்த நாடுகளிடம் தன்னுடைய ஆதிக்கத்தை மறைமுகமாக செலுத்த முயன்று வருகிறது. அந்த வகையில் இலங்கையில் தனது போர்க்கப்பலை நிலை நிறுத்த கொடுத்த கடனுக்கு பேசிப் பார்த்தது, அந்த முயற்சிக்கு இலங்கை ,சைனாவுடன் ஒத்து போகவில்லை. மாறாக இலங்கை இந்தியாவுடன் தான் சமரசத்துடன் இருந்து வருகிறது.
ஆனால், தற்போது மாலத்தீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் நம் இந்திய பிரதமரை தரக்குறைவாக விமர்சனத்திற்கு ஆட்படுத்தியது மட்டுமல்ல, சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு, இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இப்படி சூழல்கள் உலக அளவில் நாடுகள் இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கிறது. இது ஒரு புறம் என்றால், இந்தியாவில் தற்போது கட்டப்பட்ட ராமர் கோயில் ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயம் அதை அரசியலாக்கி ,அதிலும் மத அரசியலை தூண்டுகின்ற அரசியல் கட்சிகள், உள்நாட்டுக்குள்ளே எழுப்பி வருகிறார்கள்.
இதைப் பற்றியும் பத்திரிகை, தொலைக்காட்சிகள் விவாதம் நடத்துகிறது. நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன், இந்த தேச நலன் ,எதைப் பற்றியும் கவலைப்படாமல் குறுகிய எண்ணத்துடன் இந்த பத்திரிகை தொலைக்காட்சிகள் அப்படிப்பட்ட செய்திகளை பரப்பி வருகிறார்கள் .அதாவது, சவுக்கு சங்கர் போன்ற பத்திரிகையாளர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்களா? அல்லது யாரை உயர்த்தி, யாரை தாழ்த்தி, எந்த கட்சியை உயர்த்தி, எந்த கட்சியை தாழ்த்தி பேசினால் பணம் வரும்? யாருக்காக பேசினால் லாபம் கிடைக்கும்? இப்படியெல்லாம் youtube சேனல்கள் ,பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இருப்பது இந்த பத்திரிகை துறையை கேவலப்படுத்துவது போன்று உள்ளது .
இந்த துறைக்கு என்று சில கண்ணியங்கள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இருக்கின்றன. இதையெல்லாம் கடைபிடிக்காமல் நானும் பத்திரிகையாளர்கள் என்று எப்படியும் பேசுபவர்கள் பத்திரிகையாளர்களா? என்பது மக்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும். அதாவது ராமர் கோயில் கட்டப்பட்டது.
அகழ்வாராய்ச்சி செய்து ,அங்கே ராமர் சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டு, உண்மையை அகழ்வாராய்ச்சி குழு நிரூபித்த பிறகே, உச்சநீதிமன்றம் அந்த இடத்தில் ராமஜென்ம பூமி கட்டுவதற்கு உத்தரவு வழங்கியது .அதன் அடிப்படையில் இந்த ராமர் கோயில் இந்துக்கள் கொடுத்த நன்கொடையால் இந்த ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது .
ஆனால், இதற்கும் பிஜேபிக்கும், என்ன சம்பந்தம் ?அவர்கள் இந்த கோயிலை கட்டுவதற்கு உதவி செய்தாலும் ,உச்சநீதிமன்ற அகழ்வாராய்ச்சி குழு என்ன சொன்னதோ, அதை தான் தீர்ப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினார்கள். அவர்களையும் தற்போது விமர்சிக்கிறார்கள். நாட்டில் எப்படிப் பேச வேண்டும்? என்ற வரைமுறை தெரியாதவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். சவுக்கு சங்கர் சொல்வது போல, நிலம் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டாமல், ராமர் கோயில் கட்டியது தவறு என்கிறார் .
ராமர் கோயில் என்ன பிஜேபியா? கட்டிக் கொடுத்தது? அல்லது பிஜேபி கட்சி பணத்தில் கட்டி இருக்கிறார்களா? எல்லாமே வெளிப்படையாக டிரஸ்ட் அமைத்து, அந்த டிரஸ்ட் மூலம் யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள்? என்ற வரவு செலவு கணக்குகள் அத்தனையும் வெளிப்படையாக இருக்கும் போதே, இப்படிப்பட்ட கேவலமான அரசியல், நாட்டில் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், அரசியல் கட்சிகளும், மக்களிடையே பேசுவதால் மக்கள்தான் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசியல் எதற்கு? அடுத்தது அரசியலுக்கும் ,அதற்கும் என்ன சம்பந்தம்? பிஜேபி தேர்தல் அறிக்கையில் சொன்னது நிறைவேற்றியுள்ளது .இங்கே இது போன்ற அரசியல் பேச்சுக்கள் இந்துக்களை முட்டாளாக்கி ,குளிர் காய ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது. கட்சி என்பது வேறு, மதம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு, இப்படி இருக்கும்போது ,மக்களுக்கு தெரியாது என்று எதை வேண்டுமானாலும் பேசி அவர்களை ஒரு குழப்பமடைய செய்து, அதில் யார் பணம் கொடுக்கிறானோ, அவனுக்காக எப்படியும் பேசும் வித்தை தான் சமூக ஊடகங்களா? அல்லது பத்திரிகை தொலைக்காட்சிகளா ?
மேலும், இந்த ராமர் கோயிலால் இந்துக்களின் பெரும்பான்மை ஓட்டு பிஜேபிக்கு சென்று விடும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் செய்கின்ற அரசியல், சூழ்ச்சி பிரச்சாரமா? இதையெல்லாம் தெரியாமல், புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் எது உண்மை? எது பொய்? என்று சிந்திப்பது அவர்களுடைய முக்கிய கடமை .அது மட்டுமல்ல படித்தவர்கள், இளைய தலைமுறைகள், இதைப் பற்றி எல்லாம் நன்கு சிந்திக்க வேண்டிய காலம் 2024 ஆம் ஆண்டு. அது மட்டுமல்ல, எங்கு வெளியில் சென்றாலும் எச்சரிக்கையுடன் மிகுந்த கவனத்துடன் சென்று வர வேண்டும். அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
தற்போது கூட தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியில் மிகப்பெரிய விபத்து ஒன்று நடைபெற்று உள்ளது .வேகமாக வந்த லாரி தலை கவிழ்ந்து மேம்பாலத்தின் கீழே உள்ள பள்ளத்தில் விழுந்து விட்டது. இதில் இரண்டு கார்கள், அதே சாலையில் மற்றொரு லாரியுடன் தீப்பிடித்து எரிந்து விட்டது . இப்படிப்பட்ட துயரங்கள் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. இங்கே எந்த மதம், எந்த ஜாதி? என்று யாரைப் பார்ப்பது ? அதனால், இப்படிப்பட்ட மதத் தூண்டுதல்களுக்கும், பிரிவினைகளுக்கும் மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.
மேலும், இது போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறது? மக்கள் தர்மத்தின் பாதையில் இருந்து, நீதியின் பாதையிலிருந்து, தன்னுடைய மனசாட்சி பாதையில் இருந்து விலகி, எப்படியும் பேசி, எப்படியும் வாழ்வதாலா? அதனால், இப்படிப்பட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சமூகத்தில்மக்கள் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு 2024 எல்லோருக்கும் ஒரு போராட்டமான ஆண்டாக தான் இருக்கும் என்று ஜோதிடர்கள் முதல் ஆன்மீக சித்தர்கள் வரை தெரிவிக்கின்றனர். மக்கள் தெய்வத்தை நம்பி வாழ வேண்டிய காலம் தொடங்கிவிட்டது.
அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து ,வாழ்க்கையை மேலும் போராட்டம் ஆக்கிக் கொள்ளாதீர்கள் அதேபோல் அரசியல் கட்சிகளை நம்பி ,உங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளாதீர்கள். உண்மை, நேர்மை, தர்மம் ,சத்தியம், தெய்வீக எண்ணங்கள் இது எல்லாம் இந்த தீய சக்திகளிடம் இருந்தும், இயற்கையின் எதிர்ப்புகளில் இருந்தும் ,நம்மை பாதுகாக்க வேண்டிய காலகட்டம் இது. அதனால், எப்படியும் வாழலாம், எப்படியும் பேசலாம் என்று கணக்கில் இருப்பவர்களுக்கு நிச்சயம் அதற்கான பலனை இயற்கை கொடுக்க யாராக இருந்தாலும் ,அதில் பாரபட்சம் பார்க்காது.
இயற்கையின் சட்டங்கள் வேறு, அதனால் மக்கள் தெய்வ நம்பிக்கையும், ஆன்மிகத்தையும் அவரவர் மதத்தில் ,அவரவர் அவர்களுடைய மதத்தில் என்ன உண்மைகள், சொல்லி இருக்கிறார்களோ, அதை பின்பற்றி வாழ வேண்டும். அப்படி வாழாமல் ,பணத்துக்காக, பதவிக்காக எப்படியும் செய்திகளை வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சிகள் சொல்வதைக் கேட்டு, உங்கள் வாழ்க்கையை மேலும் துன்பப்படுத்திக் கொண்டு, மத மோதலுக்கும், ஜாதி மோதலுக்கும், அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல் கட்சிகளின் ஆதாயத்திற்காக ,உங்கள் வாழ்க்கையை பலிகடா ஆக்கிக் கொள்ளாதீர்கள். சித்தர்களின் கண்காணிப்பு தொடங்கி விட்டது.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தண்டிக்காமல் விட மாட்டார்கள். அந்த தண்டனை சட்டத்தின் மூலம் தான் என்று ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் தண்டனை யாருக்கும் தெரியாத ஒன்று. புரிந்தவர்களுக்கு புரியும். அதனால், நல்வழியில் பயணிப்பது, எத்தனை அலைகள் கடலில் கப்பலை கவிழ்க்க வந்தாலும் ,அந்தயில் இருந்து, இயற்கை என்ற தெய்வீக சக்தி காப்பாற்றி விடும்..