2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் டப் பைட் கொடுக்கும் அதிமுக, திமுக, பிஜேபி . மூன்று கட்சிகள் ! மாற்றத்தை நோக்கி தமிழக மக்கள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை வெற்றி என்பது ஒரு சில தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகள் மிகவும் டப் பைட் அதிமுக, திமுக, பாஜக கட்சிகள் இடையே இருந்து வருகிறது .இதில் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும், அதற்கு மிகப் பெரிய கடுமையான போட்டி என்பது வாக்காளர்களிடையே இருந்து வருகிறது. இந்த அளவிற்கு கடும் போட்டி என்பது எதனால் ? வாக்காளர்களின் விழிப்புணர்வு .

வாக்காளர்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள். மக்களிடையே இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாறி, மாறி வாக்களித்து நமக்கு என்ன கிடைத்தது? என்பதுதான் பொது வாக்காளர்களின் முக்கிய கேள்வி ? அரசியல் கட்சியை சார்ந்த வாக்காளர்கள், வாக்களிக்கும் போதும் அந்த கட்சியில் அவர்களுக்கு பணம் கொடுத்து விடுகிறார்கள். பிறகு வெற்றி பெற்றால், அதற்கான பலனும் அனுபவித்துக் கொள்கிறார்

ஆனால், பொது வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் வாக்களித்து என்ன கண்டார்கள்? இதுதான் தமிழ்நாட்டு பொது வாக்காளர்களின் முக்கிய கேள்வி? இது தவிர, எந்த ஒரு வேலைக்கும் சிபாரிசுக்கும் சென்றால் கூட பணம், ஒரு சின்ன வேலைக்கு போனாலும் பணம், நியாயமான கோரிக்கைகளை கூட இவர்களைப் பார்த்து கேட்க முடியவில்லை.வெற்றி பெற்றால் தொகுதி பக்கமே வருவதில்லை .மக்களை சந்திப்பதும் இல்லை.மக்களுக்கு கொடுக்கும்  1000,500 ரே பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறார்களா ? இல்லை, இதுதான் அவர்களின் ஓட்டுக்கு நிர்ணயிக்கப்படும் விலையா ? 

ஆனால், ஓட்டு கேட்கும் போது மட்டும் மைக்கில் பெரிய அளவில் பொய்களை செய்தது, செய்யாதது, கொடுத்தது, கொடுக்காதது இது ஒரு பக்கம் பேசுவார்கள். அடுத்தது தேர்தல் அறிக்கையில் சொல்லுகின்ற பொய்கள் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்ததால், இந்த இரண்டு அதிமுக, திமுக கட்சிகள் இந்த அளவுக்கு மக்களின் விழிப்புணர்வு எப்படி ஏற்பட்டது? என்பதுதான் அவர்கள் திகைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது என்னவென்றால், இன்றைய இன்டர்நெட் உலகம் எந்த ஒரு சிறிய செய்தியும் மக்களிடம் விரைவில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. இதில் படித்த கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு 90 சதவீதம் ,எங்களுடைய வாக்கு பிஜேபிக்கு தான் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்களாம் .அது மட்டுமல்ல, பிஜேபியில் ஐடி விங் மூலம் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், திமுகவும் ,அதிமுகவும் அதே ஐடி விங் மூலம் பொய்களை விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். இது படித்த மாணவர்கள் அல்லவா? அவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். 

எது உண்மை? எது பொய்? இதை சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. இந்த படிக்காத மக்கள் கூட, இந்த முறை அவர்களும் மிகவும் கசப்பான அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், திமுக ,அதிமுக இரண்டுமே, தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து விடும். இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் அரசியல் கட்சியினரும் பணம் கொடுத்தால், வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்களும் மட்டும்தான் இவர்களுடைய பெரும்பான்மை வாக்குகளாக இருக்கும் மற்ற தகுதியானவர்கள். வாக்குகள் எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டம் தான். 

ஆக கூடி இருந்த இணையதளம் தான், அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வரப் போகிறது. இனி கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எவ்வளவுதான் இந்த அரசியல் கட்சிகளின் பொய்களை உண்மை என எத்தனை காலத்திற்கு மக்களிடம் சொல்லி ஏமாற்ற முடியும்? மக்கள் விழித்துக் கொண்டார்கள்.அதன் தாக்கம் தான் மாற்றத்தை நோக்கி தமிழக மக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *