2024 நாடாளுமன்ற தமிழ்நாட்டின்தேர்தல் களம் ! எந்தெந்த அரசியல் கட்சிக்கு எந்தெந்த சமூகத்தின் வாக்குகள் எப்படி விழப் போகிறது ? மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆய்வு .

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சினிமா ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 14, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டின்2024  நாடாளுமன்ற தேர்தல், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் கடினமானது. இந்த தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் குறைந்த வாக்குகளாக தான் பெரும்பான்மை வெற்றி, தோல்வி இருக்கும் .மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக, பிஜேபி, அதிமுக கட்சி கூட்டணிகளுக்குள் தான் போட்டி கடுமையாக இருக்கும் .மேலும், 

திமுக பணத்தை வாரி இறைத்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அதிமுக, இதற்கு அடுத்தபடியாக பாஜக கூட்டணி கட்சிகள். ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றிற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திமுக அதிக பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் அறிக்கையில் சொல்லுகிறார்கள். அதே போல், அதிமுக, சீமான் அடுத்தடுத்த நிலையில் இருக்கிறார்கள். 

இது தவிர, ஊடகங்கள் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், போட்டி போட்டுக் கொண்டு, அவர்களுடைய கருத்துக்களை பொய்யாக இருந்தாலும், உண்மையாக இருந்தாலும் ,மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களுடைய கருத்துக்களை அரசியல் கட்சிகளிடம், சொல்வதற்கு எந்த ஊடகமும் இல்லை.மேலும், மக்கள் வாங்கித் தான் பழக்கம், கொடுத்து பழக்கம் அல்ல. இந்த தேர்தலில் யார் கொடுத்தாலும், மக்கள் வாங்கிக் கொள்வார்கள். ஆனால், யாருக்கு வாக்களிப்பார்கள்? என்பதுதான் எல்லோருக்கும் மிகப்பெரிய கேள்வி ? மேலும்,   

திமுகவை பொறுத்த அளவில், அவர்களுடைய கட்சியின் கட்டமைப்பு பணத்தை ஒவ்வொரு வார்டு வாரியாகவும், தெருக்கள் வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும், அந்தந்த நிர்வாகிகள் இந்த ஓட்டு அதிமுக ஓட்டா ?அல்லது திமுக ஓட்டா? அல்லது பிஜேபி ஓட்டா ? என்று கணக்கெடுத்து, அவரவர்களுக்கு பணத்தை கொடுத்து விடுவார்கள். அதே போல், கிறித்துவ மிஷனரிகள், முஸ்லிம் சிறுபான்மையினர் வாக்குகள் யாரிடம் பணம் கொடுத்தால், அந்த பணம் இவர்களுக்கு வாக்காக செலுத்துவார்கள்? என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவையெல்லாம் வைத்து தான், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திமுக நின்று கொண்டிருக்கிறது.மேலும்,  

 இந்துக்களை எவ்வளவு திட்டி பேசினாலும், அதனால் மகிழ்ச்சி அடையும் கிருத்துவ,முஸ்லிம் மக்கள், திமுகவிற்கு வாக்களிக்க தயங்குவதில்லை. மேலும், பிஜேபிக்கு இவர்கள் ஏன் வாக்களிக்க தயங்குகிறார்கள்? என்றால், பிஜேபி வெளிநாட்டிலிருந்து வருகின்ற ஹவாலா பண மோசடிகளை தடுக்கிறது. வெளிநாட்டுகளுக்கு கொண்டு செல்லும் கருப்பு பணத்தை தடுக்கிறது. ஊழல் பணத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறது. சமூக விரோத செயல்களை கண்டிக்கிறது.அது மட்டுமல்ல,

தீவிரவாத செயல்களை ஒடுக்குகிறது. தேசவிரோத சக்திகளை நாட்டில் களை எடுக்கிறது.இந்த கும்பல் எல்லாம்,இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல் திட்டங்களை தீட்டி, இந்திய கூட்டணி அரசியல் கட்சிகளின் பின்னணியில் செயல்படுகிறது.இதைப் பற்றி தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் யூ டிபர்கள் , கார்ப்பரேட் கம்பெனி ஊடகங்கள், தினசரி பத்திரிகைகள் என்று பஸ் பாஸ் சலுகை, விளம்பரங்கள் வாங்கக்கூடிய பத்திரிகைகள் ஏதாவது ஒன்று இப்படி வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிவித்துள்ளதா ?மேலும்,

இதையெல்லாம் சிந்திக்காமல் மூளை செலவை செய்யப்பட்டவர்கள் போல், இந்த சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் செய்கின்ற தேசத்துரோக வேலைகளை கண்டும் காணாமல் இருக்கும் கட்சிகள் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் .அப்படி என்றால், இந்த கட்சிகளுக்கு தேச நலன் மக்கள் நலனை விட, பெரும்பான்மை மக்கள் நலனை விட, திமுக, அதிமுக கட்சிகள் தேச துரோக வேலைகளுக்கு துணை போகிறதா? அல்லது இப்படிப்பட்டவர்களை வைத்து பணம் பார்க்கிறதா? அதுதான் ஜாபர் சாதிக்காக திமுகவின் அயலக அணி பொறுப்பா?மேலும்,

போதைப்பொருள் மூலம் நாட்டில் சினிமாத்துறை, தொழில் துறை ,ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதை பிஜேபி கண்டுபிடித்து விட்டது. இது எல்லாம் அவர்களுக்கு ஒரு தடை போல் பிஜேபி இருந்து வருகிறது. எவ்வளவு குறுக்கு வழியில் அரசியலிலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களிலோ, ஈடுபட்டு, பணம் சம்பாதித்தாலும், சிறுபான்மை மக்கள் என்று எங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. எங்களை யாரும் சட்டத்தின் நடவடிக்கையில் ஈடுபடுத்தக் கூடாது .அப்படி இருப்பவர்களுக்கு தான் நாங்கள் வாக்களிப்போம் என்று இவர்களுடைய வாக்குகள், குறுகிய வட்டத்தில் இந்த திமுக, அதிமுகவிற்கு செலுத்தி வருகிறார்கள் .

அப்படி என்றால், இந்த நாட்டின் மீது பொது நலன் கருதி செயல்படும் அரசியல் கட்சிகள் திமுக, அதிமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அல்ல என்பதை தமிழக இந்துக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து ஒட்டுமொத்த இந்துக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,திமுக, தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை இந்து கோயில்களை இடித்துள்ளது ?  தவிர,

இந்து கோயில்களில் உள்ள வருமானத்தைக் கூட ,இவர்களுக்கு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதை தான் இந்துக்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று .அவர்களுடைய கோயில்களில் உள்ள வருமானங்கள் வெளிநாட்டிலிருந்து, இந்த சர்ச்சுகளுக்கு கொடுக்கின்ற ஹவாளா பணம் எல்லாவற்றையும், இவர்கள் பங்கு போட்டு கொள்வார்கள். அதையும் இந்தியாவில் இவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இந்த அளவிற்கு இந்துக்களை முட்டாள்களாக அதிமுக, திமுக வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பது இந்துக்களுக்கு தெரியாத ஒரு மறைமுக அரசியல்.மேலும்,

இந்த வாக்குகள் தற்போது திமுகவிற்கு அதிகமாகவும், அதிமுகவிற்கு சொற்ப வாக்குகளாகவும் தான் விழப்போகிறது. இதற்கு அடுத்த இடத்தில் பிஜேபி கூட்டணிக்கு ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகள் அதிலும் பெரும்பான்மை சமூகமான வன்னியர், முக்குலத்தோர்,கள்ளர், மறவர், தேவர் சமுதாய வாக்குகள், முதலியார் ,ஆச்சாரி ,வண்ணார் ,நாடார் ,முடி திருத்துவோர்,உடையார், பிராமணர் போன்ற வாக்குகள் அதிகப்படியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

மேலும், மிகக் குறைந்த வாக்கு சதவீதம் உள்ள நாயுடு சமுதாயம் திமுக, அதிமுக, பிஜேபி, மூன்றிலுமே முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள் தங்களை வலப் படுத்திக் கொள்ளவே மூன்று கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்த கட்சி மெஜாரிட்டியாக ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்குள் என்ன தேவையோ அதை செய்து கொள்வார்கள். அதனால், நாயுடு சமுதாயம் மற்ற சமூகங்களை அரசியலில் ஏமாற்றி வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது . அதைப்பற்றி மற்ற சமூகத்தினர் அரசியல் கட்சிகளில் பேச ஆரம்பித்து விட்டனர். ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி இருந்தவரை இவர்களுக்கு பிரச்சனை இல்லை. இனிமேல், எந்த கட்சியில் நின்றாலும் இனி யோசனை செய்து தான் மற்ற சமூகங்கள் வாக்களிக்கும்.மேலும்,தாழ்த்தப்பட்ட சமூகம் பிஜேபிக்கு வாக்களிக்க தயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. 

தாழ்த்தப்பட்ட சமூகம் பிஜேபிக்கு வாக்களிக்க தயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. 

இதற்கு காரணம், இவர்கள் அதிமுக, திமுக இரண்டுக்குமே மாறி, மாறி வாக்களித்து பழக்கமாகிவிட்டார்கள்.தவிர, அரசியலில் குறுக்கு வழியில் தங்கள் முன்னேற்றத்தை பிஜேபி தடை செய்வது அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது.மேலும், குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த சமுதாயங்களை அடிமையாக வைத்துக் கொண்டிருப்பார்கள். இது எல்லாம் பிஜேபி இவர்களுக்கு தங்களுடைய முன்னேற்றத்தை தடுக்கிறது என்று இன்றுவரை, இவர்களுடைய அரசியல் பார்வை. அதனால், இவர்களுக்கு திமுக, அதிமுக அரசியல் கட்சிகளை தவிர்த்து வாக்களிக்க எண்ணம் வரவில்லை .மேலும்,

இவர்களை போல், குறுக்கு வழியில் சம்பாதிக்க நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், போன்ற எந்த கட்சியாக இருந்தாலும் ,அதற்கு ஓ.கே. சொல்வார்கள். இதுதான் இந்த மக்களின் எண்ணமாக இருக்கிறது .மேலும், அரசியல் தெரிந்தவர்கள் பொதுநல நோக்கோடு இருப்பவர்கள், அவர்கள் மாற்றி வாக்களிப்பார்கள். அரசியல் தெரியாதவர்கள் குறுகிய வட்டத்தில் பேசிக்கொண்டு, பணம் வாங்கி இந்த அரசியல் கட்சிகளுடன் அடிமையாக இருந்து கொண்டே இருப்பார்கள். 

தவிர, இந்த கட்சிகள் எந்த பொய் சொன்னாலும் அதை உடனே பிடித்துக் கொள்வார்கள். தவறான கருத்துக்களை சொன்னால், உடனே அதை ஏற்றுக் கொள்வார்கள். அதனால் தான், இவர்களை பேசி முட்டாளாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று, நாட்டின் அரசியல் ஓரளவு மீனவ சமுதாயம் தெரிந்து வைத்துள்ளது.இன்று மீனவ சமுதாயத்தின் பெரும்பான்மை வாக்குகள் பிஜேபிக்கு சாதகமாக உள்ளது.

அதனால், இந்த வாக்குகள் எந்தெந்த பகுதியில் அதிகமாக உள்ளதோ, அந்தந்த பகுதியில் பிஜேபிக்கும், திமுகவிற்கும் கடும் போட்டியாக இருக்கும். இதில் ஊடகங்களின் பொய்கள் மிகவும் கேவலமாக உள்ளது. வாக்காளர்கள் பணத்திற்காக வாக்களிப்பவர்களின் நிலை போல் தான், சில ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள், செய்திகள், வெளிவந்து கொண்டிருக்கிறது . மேலும், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், அந்தந்த பகுதியில் அவர்கள் போய் ஓட்டு கேட்டால் கூட ,பிஜேபிக்கு போடுகின்ற ஓட்டுகள் கூட சமுதாயம் போடாது. அந்த அளவிற்கு ராமதாஸ் ,மற்றும் அவர்களுடைய கட்சி நிர்வாகிகள் சமுதாயத்திற்கு நல்லது செய்து இருக்கிறார்கள் .இவர்கள் சமுதாயத்திடம்,

 எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்பார்கள்?என்கிறார்கள் வன்னிய சமூகத்தினர் .மேலும் ,பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சமுதாயத்தின் மீது சண்டைக்கு ஓடி வரும்  அளவிற்கு, நல்லது செய்ய ஓடி வர மாட்டார்கள்.தவிர, இந்த சமுதாயம் தொடர்ந்து ஏமாந்து கொண்டு இருப்பார்கள் என்று பேசி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். சமுதாயம் விழித்துக் கொண்டது . அதனால் தான், தொகுதி விட்டு, மாவட்டத்தை விட்டு ,மாவட்டத்தில் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஏனென்றால், இந்த முகம் அவர்களுக்கு யார்? என்று தெரியாது .தெரிந்தால் நேரடியாகவே தற்போது இந்த சமுதாயம் கேட்கும். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சி நிலைமை . அதனால், இன்று பெரும்பான்மை  வன்னியர் சமுதாயத்தின் வாக்குகள் பிஜேபிக்கு வாக்களிப்பார்கள். மற்ற சமூகங்களும் சேர்ந்து வாக்களிக்கும். இதில் எந்த தொகுதி தற்போது சொன்ன சமூகங்களில் வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ, அந்த தொகுதிகளில் இவர்கள் வெற்றி பெறுவார்கள்.மேலும்,

சிறுபான்மையினர் வாக்குகள் + திமுக கட்சி வாக்குகள்,+ தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வாக்குகள் + பணம் + வேட்பாளரின் செல்வாக்கு இதுதான் திமுகவின் வெற்றியாக இருக்கும் . இதில் ஒரு சில தொகுதிகளில் குறைவாகவும்,கூடவும் இருக்கலாம். தவிர,சில இடங்களில், மாற்றி போடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால்,பெரும்பான்மை வாக்குகள் இதைப் பொறுத்து தான்  திமுகவிற்கு விழப் போகிறது . 

அதேபோல், அதிமுகவிற்கு கட்சி வாக்குகள் + தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் வாக்குகள் குறிப்பிட்ட சதவீதம்+ சிறுபான்மையினர் வாக்குகள் + பணம்+வேட்பாளர் செல்வாக்கு இதைப் பொறுத்து தான், அதிமுகவின் வெற்றி, தோல்வி இருக்கும் ‌.மேலும், பிஜேபிக்கு பெரும்பான்மையாக வன்னியர் சமுதாயம், முக்குலத்தோர் சமுதாயம், கள்ளர், மறவர், தேவர் சமுதாயம்,தேவேந்திர குல வேளாளர் சமுதாயம், மீனவர் சமுதாயம், முன்னர் சொல்லப்பட்ட அனைத்து சமுதாயத்தின் வாக்குகளும், அதிகப்படியாக பிஜேபிக்கு இருக்கும் +வேட்பாளரின் செல்வாக்கு+பணம் இதுதான் இங்கும் வெற்றி ,தோல்வியை ஒவ்வொரு தொகுதியிலும் நிர்ணயிக்கும்.மேலும்,

இதில் சில இடங்களில் உள்ள சிறுபான்மை வாக்குகள், இவர்களுக்கும் வாக்களிப்பார்கள்.அவர்கள் யார் என்றால்? இந்த தீவிரவாத செயல்களுக்கு துணை போகாத சிறுபான்மை மக்கள், நேர்மையுடன் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற மக்கள், இவர்களுடைய வாக்கு நிச்சயம் பிஜேபிக்கு உண்டு . இது தவிர, சீமான் எந்த அளவிற்கு பொய்களை சொல்லி ,பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு ,அரசியல் தெரியாத முட்டாள்களிடம், நான் வந்தால் இதை செய்து விடுவேன். அதை செய்து விடுவேன் என்று சொல்லும்போது, நம்புகின்ற ஏமாறும் மக்களின் வாக்குகள் தான் சீமானுக்கு போய் சேரும். சீமான் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு கடும் போட்டி தான் இன்றைய தமிழ்நாட்டு 2024 நாடாளுமன்ற தேர்தல் .

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மோடியை பார்த்து தான் பிஜேபிக்கு வாக்களிக்கிறார்களே ஒழிய, இவர்களுடைய கட்சி நிர்வாகிகளை பார்த்தோ அல்லது அவர்கள் செய்த சமூக சேவைகளை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை .இவர்களை பலப்படுத்திக் கொள்ள தான் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே ஒழிய மக்களுக்கான பணியை செய்ய இந்த கட்சியிலும் ஆள் இல்லை + தமிழ்நாட்டில் அதிமுக, திமுக வின் வெறுப்பு அரசியல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *