2024 நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி. இதில் எந்த கட்சிக்கு வெற்றி அதிக வாய்ப்பு?எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு? என்பது அவ்வளவு எளிதில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன்.
மேலும், கட்சியின் வேட்பாளர்யார்? அவருடைய தகுதி அரசியல் செல்வாக்கு? மக்கள் செல்வாக்கு? இவை அனைத்தும் சேர்த்து தான் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப் போகிறது. இதில் பாமகவிற்கு சமுதாய வாக்குகளை தவிர, மற்ற சமுதாய வாக்குகள் அக்கட்சி பெறுவது மிகவும் கடினம் . வன்னியர் சமுதாயம் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
இந்த கட்சியை வைத்து வன்னிய சமுதாயத்தையும், வன்னிய சமுதாய மக்கள் வாழும் பகுதிகளில் சமுதாய நலனில் அக்கறை காட்டாமல் சுயநலமாக இருப்பதால். வன்னியர்களின் பெரும்பான்மை வாக்கு மற்ற கட்சிகளுக்கு தான் போய் சேரப் போகிறது. அதில் மாற்று கருத்து இல்லை. மேலும், இவர்களுடைய நோக்கம் எல்லாம் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வந்தால், சமுதாயம் தொடர்ந்து ஏமாறாது என்பதை புரிந்து கொள்வார்கள். மேலும், திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் தங்களுடைய கட்சியினரின் வாக்குகள் , தவிர, பணம் கொடுத்தால் மட்டுமே இருவருக்கும் வாக்களிப்பவர்கள் இருப்பார்கள். மேலும். தற்போது சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக, திமுக, பிஜேபி மூன்றுமே பங்கு போடும் அளவில் தான் இருக்கிறது.
இது ஒரு சில பகுதிகளில் அதிமுகவுக்கும், ஒரு சில பகுதிகளில் திமுகவுக்கும், ஒரு சில பகுதிகளில் பிஜேபிக்கும், இப்படி மாறி மாறி வாக்குகள் மக்கள் அளிக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர, அந்தந்த பகுதி அரசியல் கட்சியின் நிர்வாகிகள் செய்த மக்களுக்கான சேவைகள், மற்றும் கட்சி வேட்பாளரின் அரசியல் செல்வாக்கு ,அந்தந்த பகுதியில் உள்ள அந்தக் கட்சியை வேட்பாளரின் ,அவருடைய நன்மதிப்பு. இதைப் பொறுத்து தான் வெற்றி தோல்வி நாடாளுமன்ற தேர்தல் நிர்ணயிக்கப் போகிறது.மேலும்,
ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் படித்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் விஷயம் அறிந்தவர்கள், பொதுநல நோக்கம் கொண்டவர்கள் வாக்கு பிஜேபிக்கு நிச்சயம் உண்டு. இதில் அனைத்து சமுதாயமும், இதில் வாக்களிக்கும். இதே நிலை கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமா? என்பதும் உறுதியாக சொல்ல முடியாது. ஒவ்வொரு கிராமத்திற்கு கிராமம், ஒவ்வொரு நகரத்திற்கு நகரம் என்று மக்களின் வாக்கு வேறுபடும் .அந்த வேறுபாடு இந்த மூன்று அரசியல் கட்சிகளின் கூட்டணியில் கடும் போட்டியாக இருக்கும். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது .
தவிர, மக்களுக்கான சேவைகள் செய்யாமல் ,வாயிலே சுடுகின்ற வடைக்கு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் தான் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடும் போட்டி என்பதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் தெரிவித்து வருகிறது .இங்கே பணத்தை கொடுத்து திமுக வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்தாலும் அவள் நிச்சயமற்ற வாக்காக தான் இருக்கும். பணத்தை வாங்கிக்கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் போடுவார்கள். இங்கே வெற்றி தோல்வி என்பது கடுமையாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .
மேலும், பெரும்பான்மையான இந்துக்களின் வாக்கு தமிழ்நாட்டில் பிஜேபிக்கு நிச்சயம் உண்டு. அதேபோல், சிறுபான்மை மக்களில் முஸ்லிம் பெண்களின் வாக்கு பிஜேபிக்கு உண்டு .ஏனென்றால், இந்த முத்தலாக் சட்டம் அவர்களுக்கு ஒரு வாழ்வியலை கொடுத்துள்ளது. அதை நினைத்து பார்ப்பவர்கள் வாக்களிப்பார்கள். தவிர, கிறிஸ்தவர்கள் சில பாதிரியார்கள் பிஜேபி பக்கம் இருக்கிறார்கள் .அவர்கள் குறிப்பிட்ட சதவீதம் அந்த வாக்குகளும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்த்து, பணத்திற்காக வாக்களிப்பவர்கள் திமுக, அதிமுக இடையே கடும் போட்டியாக இருக்கும். இதில் யார் அதிகம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு வாக்களிப்பார்கள் .இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கடுப்பு போட்டி தான் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல்.
மேலும், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கடும் போட்டி . தாழ்த்தப்பட்ட சமுதாயமும், அந்த சமுதாயத்தின் வாக்குகளும் தொடர்ந்து வாக்களித்து ஏமாந்து கொண்டிருக்கிறது. அதனால், அந்த சமுதாயத்தில் சமுதாய நலன் விரும்பிகள் மற்றும் தகுதியானவர்கள் திருமாவளவனுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அது நன்றாகவே தெரிந்த உண்மை. அதனால், என்னதான் இவர்கள் சமுதாயம், சமுதாயம் என்று கூறிக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து எந்த சமுதாயமும் ஏமாறாது. எத்தனை நாளைக்கு இவர்களுடைய பொய்கள் மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்?
அதனால்! இந்த தேர்தல் கடும் போட்டி .இந்த போட்டிக்கு அரசியல் கட்சிகள் இடையே போய் பிரச்சாரங்கள், விமர்சனங்கள் அதிக அளவில் இருந்து கொண்டிருக்கும். இது தவிர்த்து வாட்ஸ் அப் செய்திகள், பல குரூப்புகளில் ஒருவரை பற்றி ,ஒருவர் விமர்சன பேச்சுக்கள் ,தற்போதே சகிக்க முடியவில்லை. மேலும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்களும், தேவர் சமுதாயம் கள்ளர் சமுதாயம், மறவர் சமுதாயம் இந்த வாக்குகள் இவர்களுக்கு எதிராகத்தான் தெரிகிறது .பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பார்களா? அல்லது பிஜேபி கூட்டணி பற்றி சிந்திப்பார்களா?மேலும்,
அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய தேவர் சமூகம் மற்றும் திமுக ,அதிமுக போன்ற அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வன்னியர்களுக்கு கூட வன்னியர்கள் வாக்களிப்பார்களா? கேள்வி எடுத்துள்ளது .ஏனென்றால் வாக்குகளை கேட்கும் போது மட்டும் தான் நம்மால் என்று சொல்கிறார்கள். பதவிக்கு வந்தவுடன் சமுதாயத்திற்கு எதிராக தான் இருக்கிறார்கள். எந்த நன்மையும் செய்வது இல்லை. எப்படி சமுதாயங்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளும்?
அதனால், சொந்த செல்வாக்கு + அரசியல் கட்சி செல்வாக்கு + அரசியல் கட்சி கூட்டணி+பணம் இதுதான் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க போகிறது. இதில் திமுக, அதிமுக இரண்டு அரசியல் கட்சியும் மக்கள் செல்வாக்கு இழந்துள்ளது .இந்த இழப்பை இரண்டு கட்சிகளும் எப்படி தமிழ்நாட்டில் ஈடு செய்யப் போகிறார்கள்?