
தமிழ்நாட்டை பிரித்தாலும், சூழ்ச்சியில் தான் இங்குள்ள திமுக ,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அரசியல்.அதைத்தொடர்ந்து சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த அரசியலை தான் முன்னெடுக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் ?
பிஜேபி தமிழ்நாட்டில் மெஜாரிட்டி வரக் கூடாது என்பதில் திமுக, அதிமுகவும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளும், அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை நம்மை விட்டு பிஜேபிக்கு போகக்கூடாது, இந்த ஒரே நிலைப்பாட்டில் அரசியல் கட்சிகள் இருக்கிறது.மேலும்,

பிஜேபி தேசிய அரசியல், இங்கே தமிழ் தேசிய அரசியல். ஒரே நாட்டில் இப்படி ஒரு அரசியல்! மக்களுக்கு தெரியாமலே இருந்து கொண்டிருக்கிறது. இது எல்லாம் போக தற்போது மக்களிடம் பணம் தான் அரசியலாகிவிட்டது. எந்த ஒரு அரசியல் கட்சியும், மக்களிடம் களத்தில் நிற்காமல் ஆட்சிக்கு வர முடியாது. இங்கே பிஜேபி மக்களின் களத்தில் இன்னும் இறங்கவில்லை. அவர்கள் கார்ப்பரேட் ஊடகங்களில் தான் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி தான் அரசியல் களம் என்று நினைத்துக் கொண்டு, ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவும், திமுகவும் அந்த காலத்தில் மக்களை களத்தில் சந்தித்துள்ளது. அதுதான் தற்போது இன்று வரை அது 50 ஆண்டு கால ஆட்சியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர, இரண்டு கட்சிகளிலும் ,இன்று

ஆட்சியில் இருக்கும் போது, அவரவர் பதவிக்கு தகுந்தவாறு கோடிகளை சம்பாதித்து சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள். இந்த சொத்துக்களை காப்பாற்ற அவர்களுக்கு அரசியல் கட்சி மிக, மிக முக்கியம். இந்த அரசியல் கட்சி ஜெயித்தாலும், ஜெயிக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், அதை தக்க வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக சொல்லப் போனால், இந்த ஊழல் பணத்தை தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் அரசியல் கட்சி தேவைப்படுகிறது.மேலும்,

இங்கே மத்திய அரசு உள்ளே வந்தால் ஊழல் பணத்தை பிடுங்கி விடுவார்களா? ஒரு வேலை, மக்கள் பிஜேபிக்கு மாறினால், இந்த கட்சியினரும் அதிலே சேர்ந்து கொள்வார்கள்.கொள்கைவாதிகள் இங்கே இல்லை .ஆனால், கொள்கைவாதிகளை போல, பேசிக்கொண்டு இருப்பவர்கள் தான், இருக்கிறார்கள். அதுதான் இன்றைய அரசியல் கட்சி மற்றும் கட்சியினர் நிலைமை.சொல்லப்போனால் இது ஒரு சந்தர்ப்பவாத அரசியல்! அதை பயன்படுத்திக் கொண்டு, தங்களை ஒவ்வொருவரும் வலுப்படுத்திக் கொள்கிறார்கள்.

மேலும்,இவர்களுக்கு பிஜேபி என்பதை ஒரு மதவாத கட்சியாக இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு அரசியலும் தெரியாது. மதவாதமும் தெரியாது .அவர்கள் சொல்வதை இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கிறது. நான் பிறந்தது இந்து மதம். நான் பிறந்தது இந்த ஜாதி. இதை பிறக்கும்போதே எனக்கு அரசாங்கம் சான்று கொடுத்து விடுகிறது. இதில் என்ன மத அரசியல்? நான் இந்து கடவுளை தான் கும்பிடுகிறேன். என்னுடைய தெய்வத்தை விடவா? இந்த அரசியல் கட்சிகள்? இங்கே மதம் என்ன? அரசியல் என்ன? இது இரண்டுக்கும் அர்த்தம் தெரியாமல் இருப்பவர்கள் தான், இதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இனி அதிமுக ஆட்சிக்கு வருவது ஒரு கடினமான விஷயம். ஏனென்றால், பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதியிருக்கிறேன். அதிமுகவில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாருமே இல்லை. அங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை தான்.தற்போது அக்கட்சியின் தலைவர்கள் அதிமுகவில் பதவிப் போட்டியாக ஒருவருக்குள் ஒருவர் போட்டி ,போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பதவிப் போட்டியில் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் இப்படி இரண்டாம் கட்ட தலைவர்கள் இவர்களுக்குள் போட்டி ,போட்டுக் கொண்டிருந்தால்! திமுகவை எப்படி இவர்கள் வீழ்த்துவார்கள்? மேலும்,

இப்படி இருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஒரு அரசியல் கட்சி பலத்தினால் தான் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியும். அதுவும் அது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது தான் அதை செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு கடினமான செயல்தான் நாட்டின் அரசியல்.இங்கே ஒற்றுமை இல்லாமல் இருப்பது அதிமுகவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறி தான். ஒரு பக்கம் இங்கே சட்ட போராட்டம், இன்னொரு பக்கம் பதவி போராட்டம், இந்த நிலைமையில் அதிமுக எப்படி மக்களிடம் ஒற்றுமையை நிரூபித்து ஆட்சிக்கு வர முடியுமா? இது திமுகவிற்கு ஒரு சாதகமான சூழ்நிலைதான் .

மேலும், ஒருவேளை, அதிமுக, விஜய் கூட்டணி அமைந்தாலும், அதிமுக ஆட்சி அமைக்க முடியுமா? இந்த ஓட்டு சதவீத கணக்குகள் யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. மக்களின் மனம் மாற்றத்திற்கு சொந்தமானது. அந்த மாற்றம் காலத்தின் கையில் தான் இருக்கிறது. அதனால், 2026 தமிழ் நாட்டின் அரசியல் ஒரு கணிக்க முடியாத சிக்கலான அரசியல்! யாருமே அதிக அளவில் வெற்றி பெற முடியாது. வாக்குகளும் அப்படித்தான் இருக்கும். இந்த தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், கடுமையான போட்டி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.மேலும்,

தேர்தல் வியுக வகுப்பாளர்களாக விஜய்க்கு ,அதிமுகவிற்கு ஜான் ஆரோக்கியசாமியும், மற்றொரு பக்கம் பீகார் பிரசாந்த் கிஷோரூம், போட்டி போட்டு வேலை செய்தாலும், இந்த சிக்கலான அரசியலை இவர்களால் சரி செய்ய முடியாது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அல்லது ஏதோ ஒரு கட்சியினருக்காக இவர்கள் சாதகமாக எழுதிக் கொண்டிருந்தாலும், அல்லது அதை விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தாலும், வேலைக்கு ஆகாது.

இங்கே மக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அரசியலை புரிந்து கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட சதவீதம் அரசியல் என்றால் என்ன? என்று தெரியாது, அவர்களை எல்லோரும் சேர்ந்து போட்டி போட்டு, ஓட்டுக்களை தங்கள் பக்கம் கட்சி புரோக்கர்கள் மூலம் பணம் கொடுத்தோ அல்லது வாயிலே தேனை தடவையோ பிரித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், இனி தமிழ்நாட்டில் டப்(tough) அரசியல் தான்.