ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் அவர்களின் ஜால்ராவாக இருப்பது அது பத்திரிகையா ? எது உண்மை? எது பொய்? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பத்திரிக்கையா? சலுகை விளம்பரங்களுக்காக அடிமைகளாக இருப்பது பத்திரிகையா? எது என்பதை மக்களே தீர்மானியுங்கள்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 22, 2024 • Makkal Adhikaram

திமுக (youtube) யூ – டியூபர் மணி ! பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் என்று ஏமாற்றுகிறாரா ?

மதவெறி என்பதை எதை சொல்கிறார் ? என்னுடைய சாமியை, என்னுடைய மதத்தை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? அல்லது என்னுடைய குல தெய்வத்தை கும்பிடக்கூடாது என்று சொல்கிறாயா? அல்லது தெய்வங்களை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? எதுடா மத வெறி? மதவெறிக்கு என்ன அர்த்தம்? மற்ற மதங்களை மதிக்கவில்லையா? அல்லது மற்ற மதங்களை பிடிக்காமல் ஏசுகிறார்களா? அல்லது மற்ற மதத்தினரை துன்புறுத்துகிறார்களா ? அல்லது மற்ற மதத்தினரை மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்களா? அது தான் மணி மத வெறி . நீயாவது எந்த கட்சியிடம் ஆவது கூலி வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறாய் .

 ஆனால், எந்த கூலியும் வாங்காமல், இந்த நாட்டுக்காக, இந்த நாட்டு மக்களுக்காக உழைப்பவன் ஆர்எஸ்எஸ் . மக்களை மூளை செலவை செய்து அரசியல் என்றால் என்ன? என்று தெரியாமல் இந்த பத்திரிகையும், தொலைக்காட்சியும் ஆரம்பத்தில் இருந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் எழுதிய தமிழ்நாட்டில் ஒரு முதல் பத்திரிக்கை மக்கள் அதிகாரம் தான்.

 இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் ஒரு போலியான ஊடக பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது .இதுதான் பெரிய பத்திரிகை, இதுதான் பெரிய தொலைக்காட்சி, உண்மை மக்களிடம் கொண்டு போய்க் சேர்க்க செல்லவில்லை. இதற்கு எல்லாம் காரணம் திராவிட கட்சிகளின் இந்த கார்ப்பரேட் ஊடக பிம்பங்களை வைத்து தான் அவர்கள் அரசியல் . இதை மற்ற அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும் . திமுக வின் ஆட்சி வந்ததுலிருந்து மக்களுக்கு செய்தது என்ன ? 

ஆட்சியாளர்களின் தவறுகள் என்ன? நிர்வாகத்தில் தவறுகள் என்ன? இதைப்பற்றி சொல்வதுதான் பத்திரிக்கையின் வேலை. இதை சரி செய்து கொள்வது ஆட்சியாளர்களின் வேலை. ஆனால், கூலிக்கு மாரடைப்பவர்கள் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் யூ – டியூபர்கள் இன்று போலிகளாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? யார் வந்தால் மக்களுக்கு நன்மை? எது உண்மை? எது பொய்? இதுதான் பத்திரிக்கை.மேலும்,

எத்தனை நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் ? ஒன்று மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் கூறினாலும், என்னதான் கத்தினாலும், நாட்டு மக்களுக்கு மேடையில் இருந்து, தெருமுனைப் பிரச்சாரங்களில் இருந்து எவ்வளவு பேசினாலும், அது எல்லாம் திமுகவால் ஜெயிக்க முடியாது. ஒன்றே ஒன்று மட்டும் தான் இன்று ஜெயித்துக் கொண்டிருக்கிறது. ஓட்டுக்கு பணம். இந்த பணம் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

 அதை தேர்தல் ஆணையம் நிறுத்தட்டும் திமுக ஜெயிக்குமா? அல்லது அதிமுக ஜெயக்குமா? அல்லது பணம் கொடுக்கும் எந்த அரசியல் கட்சிகளாவது ஜெயிக்குமா ? தேர்தல் ஆணையம் மகளிர் உடைய வங்கி கணக்குகள் ஓராண்டு முதல் அதை கண்காணிக்கப்பட வேண்டும். அதேபோல் ரகசிய கேமராக்கள் ஓராண்டுக்கு முன் வாக்காளர்களை கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும் . இவர்களுடைய தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்பட வேண்டும் . ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால், ஊழல்வாதிகள் ஜெயிக்க முடியாது. தகுதியானவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும்.

மக்களுடைய வறுமையை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு வருகின்ற தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் தேர்தல். அதனால், தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நடத்துவது தேர்தல் அல்ல. நீங்கள் நடத்துவது தேர்தல் ஏலம் .அரசியல் புரிதல் இல்லாத மக்களின் வறுமையை,அரசியல் புரிதல் இல்லாத மக்களின் உரிமையை பணம் கொடுத்து வேலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் திமுக (39) எம்பிக்களின் வெற்றி. அதுதான் திமுகவின் இன்றைய ஆட்சியின் வெற்றி . சீமான் சொல்வது போல ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், எந்த கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் ?

மேலும், தீவிரவாதம், போதைப் பொருள் கலாச்சாரம் எல்லாவற்றையும் எந்த ஆட்சியில் அதிகமாக இருந்தது என்பதை சொல்லுங்கள் பார்க்கலாம் மணி? பிஜேபி ஆட்சியலா? அல்லது காங்கிரஸ் ஆட்சியிலா? அல்லது திமுக ஆட்சியலா? மனசாட்சி இல்லாமல் எப்படியும் பேசலாம் .அது கூலிக்கு மாரடைப்பவர்கள் பேச்சு . காங்கிரஸ் ஆட்சியில் குண்டு வெடித்ததா? அல்லது பிஜேபி ஆட்சியில் கொண்டு வெடித்ததா? காங்கிரஸ் ஆட்சியில் தீவிர வாதம் தலை தூக்கியதா ? அல்லது பிஜேபி ஆட்சியில் தலை தூக்கியதா ? மக்களை மூளை சலவை செய்யும் இது போன்ற youtubeபர்கள், சில கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களுக்காக இல்லை.

தவறான கருத்துக்கள் மக்களிடம் பரப்பிக் கொண்டு இருக்கின்ற பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கும்,மக்களின் வரிப்பணத்தில் இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது மிகப்பெரிய தவறு. இந்த தேச விரோத சக்திகளாக இருக்கின்ற ஊடகங்கள் தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்து .மேலும், இவர்களுடைய அரசியல் கட்சிகளை வளர்த்துக் கொள்வதற்கும், இவர்களுடைய பொய் பிரச்சாரங்களை இந்த ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கும், மக்களுடைய வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

இதை தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து சொல்லி வருகிறது. நடுநிலை பத்திரிகைகள் எது? தவறு எது? உண்மை எது ?என்பதை மக்களுக்கு ஆட்சியாளர்களுக்கு சுட்டிக் காட்டுவது தான் பத்திரிக்கை,மேலும், அவர்கள் எந்த தவறு செய்தாலும், அதை நியாயப்படுத்தி செய்திகளை வெளியிடுவது மற்றும் பேசிக்கொண்டு இருப்பது, இது பத்திரிகையின் வேலை அல்ல. இது மக்களை ஏமாற்றும் வேலை.தவிர, நாட்டில் உண்மை எது? பொய் எது? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதுதான் பத்திரிகைகளின் முக்கிய கடமை.

 அதை விட்டு,விட்டு, ஒரு கட்சியினர் பேசுகின்ற பேச்சை, மக்களிடம் கொண்டு செல்வதற்கு, அந்தக் கட்சியை வளப்படுத்திக் கொள்ள, மக்களுடைய வரிப்பணத்தை வீணடிக்க கூடாது .இதை செய்கின்ற செய்தி துறை அதிகாரிகள் மீது, நீதிமன்றம் இவர்களிடம் நஷ்ட ஈடு வசூல் செய்ய வேண்டும் . அல்லது அபராதம் விதிக்க வேண்டும் . தவறான முறையில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து கூட இந்த வழக்கை விசாரிக்கலாம். அதாவது( சுமோட்டாவாக)

நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது? இந்த பத்திரிகை துறையில் பிரச்சனைகள் இருக்கிறது? எவ்வளவோ ஊழல்கள் நடக்கிறது? அதைப் பற்றி எல்லாம் பேச துப்பில்லாமல், மத வெறி, ஜாதி வெறி இதையெல்லாம் அர்த்தமில்லாமல் பேசி, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், உன்னை யாராவது உன் மதத்திலே நீ சாமி கும்பிடக் கூடாது என்று எந்த ஆர் எஸ் எஸ் ஆவது சொல்லி இருக்கிறானா?மேலும்,

இந்துக்களின் மத அடையாளங்களை அழித்து விடலாம். ஆனால், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பர்தா அணியலாம். சிலுவை அணியலாம். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்களுடைய மதப் பள்ளிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், இந்துக்கள் அப்படி ஆரம்பிக்கக் கூடாது. இதுதான் காங்கிரஸ் கொண்டு வந்த சட்டம். இதுவெல்லாம் மதவெறி அல்ல, இதுவெல்லாம் என்ன வெறி? என்று மணி சொல்வாரா? அதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள் .ஆனால் இந்துக்களுக்கு எதிராகவும், இந்த தேச நலனுக்கு எதிராகவும் பேசுவது, பத்திரிகையின் வேலையும் அல்ல. அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு அர்த்தமும் அல்ல . நியாயம் என்பது இரண்டு பக்கமும்.மேலும், 

அரசியல் கட்சிகளின் கைக் கூலிகளாக இருக்கின்ற ஊடகங்கள் எத்தனை? கூலிக்கு மாரடைக்கும் youtube பர்கள் எத்தனை? அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் அர்த்தம் தெரியாத முட்டாள்கள் தன்னை பத்திரிக்கையாளர் என்றும் பத்திரிகை என்றும் சொல்வதில் அர்த்தம் இல்லை. எப்படியும் பேசலாம், எதுவும் பேசலாம், அது பத்திரிகை அல்ல. இப்படி தான் பேச வேண்டும், இதுதான் உண்மை, இதுதான் பொய், என்று விளக்குவது தான் பத்திரிகை .இப்போதாவது உண்மை மக்களுக்கு புரிந்து இருக்குமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *