டிசம்பர் 07, 2024 • Makkal Adhikaram

நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் ,அதற்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பின்னணி அவசியம் தேவை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், பொருளாதாரம் இல்லாமல் அரசியல் கட்சி நடத்த முடியாது. பத்திரிகை எப்படியோ அதே போல் தான் அரசியல் கட்சியும் பொருளாதாரம் இல்லை என்றால், எல்லா பத்திரிகை ,தொலைக்காட்சியும் ஊத்தி மூட வேண்டியதுதான். இதில் கார்ப்பரேட் ஆக இருந்தாலும்,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கையானாலும், விளம்பரம் இல்லாமல் பத்திரிகை நடத்துவது வெள்ளத்தில் சீக்கியவர்கள் கதிதான்.
இப்படி இருக்கும்போது ,அரசியல் கட்சி நடத்துவதற்கு நிச்சயம் கார்ப்பரேட்டுகளின் தயவு இல்லாமல் முடியாது. தற்போது தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினரே கார்ப்பரேட்டுக்களாக மாறிவிட்டார்கள் என்ற தகவல். அதாவது அதிமுக, திமுக அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வரை சுமார் 500 லிருந்து 1000 கோடிகள் வரை இவர்கள் கொள்ளையடித்து கருப்பு பணங்களை பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள். அதில் சில மட்டும்தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுவும் அதை
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ கண்டுபிடித்தால் உண்டு. இல்லை என்றால் இல்லை. ரைய்டு நடத்தினால் நாங்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்று அறிக்கை விடுகிறார்கள். சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதில் எவ்வளவு போராடுகிறார்கள்? இந்த பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டால் அல்லது வெளி மாநிலங்களில் முதலீடு செய்து பதுக்கப்பட்டால், தமிழ்நாட்டில் பணப்பழக்கம் குறைந்து விடுகிறது. இங்கிருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைகிறது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் முதலீடு செய்கிறார்கள். இது யாருடைய தவறு? மக்களுடைய தவறு ,மக்களிடமே போய் சேர்கிறது. இப்போதாவது இந்த உண்மை புரிந்து கொள்வார்களா? மேலும், வாக்களிக்கும் முன் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக ,அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த உண்மையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். குடிகாரர்களுக்கும், நாட்டில் 100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கும், பணம்தான் முக்கியமே தவிர, அவர்களுடைய வருங்கால சந்ததிகளை பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இதை வருங்கால இளைய தலைமுறைகள், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அவசியம் இந்த உண்மையைத் தெரிவியுங்கள் .மேலும்,
தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறிய அதிகாரிகள் மீதுதான் பாய்ந்து கொண்டிருக்கும். அவர்கள் ஆயிரம் ,500 வாங்கினாலும், ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கினாலும் ,அது லஞ்சம் .ஆனால், ஆயிரக்கணக்கான கோடிகளை ஊழல் செய்தவர்கள் கணக்கு என்ன? இதுதான் எங்களைப் போன்றவர்கள் கேள்வி? மேலும், அதானி இந்தியாவுக்கு எதிரானவர் என்று எதிர்க்கட்சி ஊடகங்கள் கதை கட்டினாலும், அதானியால் இன்று பல லட்சம் குடும்பங்கள் இவரை நம்பி இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதானியின் கம்பெனி நஷ்டம் அடைந்தால், அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டை மிகப்பெரிய மெகா ஊழல் செய்து கொள்ள அடிப்பார்கள். நிர்வாகமும் தெரியாது. முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளோடும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகளோடும் மறைமுகமாக கைகோர்த்துக்கொண்டு, இந்தியாவுக்கு எதிரான சதி திட்ட வேலைகளில் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்கும் முட்டாள்களுக்கு எந்த உண்மையும் தெரியாது. மேலும்,
அதானிக்கு எதிராக சதிவலை பன்னி அவரை அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கில் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் அன்னைய சக்திகளின் கூட்டு சதி நிச்சயம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.இது தவிர,

இந்தியாவில் 2000 கோடி அவர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு லஞ்சம் கொடுத்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை இவர் லஞ்சமாக கொடுத்துள்ளார், இதுதான் இதில் குற்றச்சாட்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதானிக்கு எதிராக இப் பிரச்சனையை உருவாக்கினார்கள். இதில், அமெரிக்க முதளீட்டாளர்கள் பணமா? அல்லது அதானி பணமா? என்று கூட ஆய்வு செய்யாத நிலையிலே அமெரிக்க நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆக கூடி இந்தியாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ், ராகுல் காந்தி எந்த நிலைக்கும் போவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .மேலும்,
அவருடைய கணக்கு அதானியை வீழ்த்தினால், மோடியை வீழ்த்தி விடலாம். ராகுல் காந்தியின் வேஷம் ,இந்தியாவில் களைந்து விட்டது. இனி இந்திய மக்கள் ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை பற்றி சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.மேலும்,
எந்த அளவிற்கு நாட்டின் வளர்ச்சியை, அடுத்த கட்டத்திற்கு மோடி நகர்த்துகிறார்? என்பதும் தெரியாது. படித்த இளைஞர்களின் எதிர்கால கனவு, மக்களின் வருமானம், ஏழை எளிய நடுத்தர வர்க்கத்திற்கு அவர் செய்து வருவது எதுவாவது தெரியுமா? இங்கே அரசியல் கட்சி பிராடுகள் மோடியோ, பிஜேபியோ வந்துவிட்டால், சொத்துக்களை சேர்க்க முடியாது. ஏமாற்ற முடியாது. அரசாங்கத்தை ஏமாற்ற முடியாது .சட்டத்தை ஏமாற்ற முடியாது. இந்த சுயநலத்திற்காக தான் பிஜேபியை, திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்து வருகிறார்கள்.
அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில், எந்த அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அவர்களுக்கு இந்த தாக்கம் தான் மறைமுகமாக இருந்து வருகிறது. இதில் வெளி வேஷங்கள் அதிகம். கட்சி என்பது சமூக தேவைக்கும், நோக்கத்திற்கும் என்ற அடிப்படை கூடத் தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிக்குள், அரசியல் செய்து கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால், வருங்கால இளைய சமுதாயம் அரசியலை நீங்கள் எந்த ஜாதியில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும், அவசியம் உண்மையைப் படியுங்கள். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இந்த உண்மைகளை உங்களுக்காக, சமூக சேவையாக செய்து கொண்டிருக்கிறது.அரசியல் கட்சிகளின் ஏமாற்றத்தில் இருந்து உண்மையை புரிந்து மக்கள் வாழ்ந்தால் வளமான இந்தியா! வலிமையான பாரதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.