தமிழ்நாட்டில் அரசியல்! நடிப்பானதால், சினிமாவுக்கும், அரசியலுக்கும் வேறுபாடு தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் மக்களுக்கு ஒரு பக்கம் அரசியல் என்றால் விழிப்புணர்வு இல்லை.
கார்ப்பரேட் பத்திரிகை,தொலைக்காட்சிகள் இந்த அரசியலை ஊடக வியாபாரம் ஆக்கி பல ஆண்டுகளாக இதுதான் அரசியல் என்று ஒரு ஊடக பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது அரசியலுக்கு வந்தவர்கள். அரசியலில் வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பவர்கள். இரண்டும் சேர்ந்து நடிப்பும் வார்த்தைப் போர்களாக,,அறிக்கைகளாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒண்ணுமே இல்லாத திருமாவளவன் எவ்வளவு அரசியல் பில்டப்?நேத்து அரசியலுக்கு வந்த ஆதவ் அர்ஜனா எவ்வளவு அரசியல் பில்டப்? இந்த பில்டப் எல்லாம் மிகப்பெரிய அரசியல் மாயை பில்டப் தான் இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மேலும்,ஒண்ணுமே இல்லாமல் தினமும் சில அரசியல் கட்சியினர் பொழுதுபோக்காக அரசியலை ஆக்கிவிட்டு,தொலைக்காட்சிகளில் உட்கார்ந்து விவாதம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இவர்களுடைய அரசியல் சாதனை. மேலும்,அரசியல் என்றால் என்ன? அந்த அடிப்படை அறிவு இல்லாதவரை உங்களை இது போன்ற அரசியல் கட்சிகள் இந்த கார்ப்பரேட் பத்திரிகை,தொலைக்காட்சிகளை வைத்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.
மக்களின் வேதனையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்க,அதிகரிக்க பணம் என்ற ஆயுதத்தால் உங்களை எளிதில் விழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது கூட உச்ச நீதிமன்றம் இந்த இலவசங்களை நிறுத்திவிட்டு,ஏன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது?என்ற கேள்வி கேட்டிருக்கிறார்கள். அது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. இன்று உழைக்கும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல், இலவசத்தை கொடுப்பது உழைக்காத சோம்பேறிகளை உருவாக்குகிறது. மற்றொரு பக்கம் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் உரிமைகளும் தடுத்துக் கொண்டிருக்கிறது . அதற்கு உதாரணம் விவசாயிகள்.
இந்த 100 நாள் வேலையை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை குட்டிசுவராக்குவதற்கு கொண்டு வந்து விவசாயத்தை அடியோடு அழித்துவிட்டது. வேதனை தெரிவிக்கிறார்கள் . அதன் விளைவு இன்று அன்றாடம் மக்களின் உணவுப் பொருட்கள் விலையேற்றம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இன்று மளிகை கடைக்கு சென்றால் துவரம் பருப்பு இன்னும் விலை ஏறும் என்று தெரிவிக்கிறார்கள். பூண்டு எந்த காலத்திலும் கிலோ 500 ரூபாய்க்கு விற்று பார்க்கவில்லை. இங்கே என்ன முக்கியமாக பார்க்க வேண்டும் என்றால் ,ஏழை எளிய,நடுத்தர மக்கள் யோசிக்க வேண்டியது பணக்காரன் கிலோ ஆயிரமானாலும் வாங்கி சாப்பிடுவான். ஆனால்,
ஏழை எளிய நடுத்தர மக்கள் அவ்வாறு வாங்க முடியாது. இப்போது ஒரு குடும்பத்திற்கு மூன்று பேர் இருக்கக்கூடிய நடுத்தர குடும்பத்திற்கே குறைந்தபட்சம் மளிகை ரூ 15000 ஆகிவிடுகிறது. எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? விவசாயத்தை அழிக்க 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம். மேலும், பிஜேபி கூட இதை எடுக்கவில்லை. இதை எடுத்தால் எதிர்கட்சிகள் அரசியல் செய்வார்கள் என்றே அதை எடுக்கவில்லை.தவிர,
அரசியல் கட்சிகள் இதை எடுத்துவிட்டு,ஓட்டுக்காக அரசியல் செய்பவர்கள்,மக்கள் நலனை பற்றி கவலைப்பட மாட்டார்கள். மக்கள் நலனை கவலைப்படுபவர்கள் ஓட்டுக்காக அரசியல் செய்ய மாட்டார்கள். இங்கே மக்கள் ஓட்டுக்காக நடிப்பு அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளிடம் ஏமாறுவது தான் இவர்களுடைய தலையெழுத்து அரசியலா?
இளைய சமுதாயம் இந்த அரசியலை விட்டு,விட்டு ,, போலிகளை அடையாளம் காணுங்கள் . போலிகளிடம் ஏமாறாதீர்கள்.உங்களுடைய எதிர்கால கனவுகள்மற்றும் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வது இப்படிப்பட்ட அரசியல் கட்சியினரிடம் முடியுமா?என்பதை சிந்தியுங்கள்.
அரசியல் என்பது பேசிவிட்டு போகும் பொழுதுபோக்கு அல்ல,நடித்து விட்டு போகும் அவர்களுடைய திறமையும் அல்ல, எனவே அவர்கள் உழைப்பு,செயல் திறமை, தியாகம் ஒருவருடைய அடிப்படை அரசியல். அந்த அடிப்படை கூட தெரியாமல் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்? இவர்களுடைய பேச்சையும் நடிப்பையும் பார்த்து இவர் பெரிய அரசியல் தலைவரோ அல்லது அரசியல்வாதியோ என்று தீர்மானிக்க முடியாது. அதனால் இந்த கார்ப்பரேட் ஊடக ஏமாற்று அரசியலை நம்பி ஏமாந்தது போதும் விழித்துக் கொள்ளுங்கள். மேலும், சினிமாவில் இருந்து வருபவர்கள் அனைவரும்
எம்ஜிஆர் போல் அரசியல் தலைவராகி விட முடியாது.எம்ஜிஆர் கோடிகளில் ஒருவர். அப்படி எல்லோரும் வர முடியாது. மக்கள் இந்த அரசியலை சிந்திக்காமல் போலி அரசியலை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தால்,உங்கள் வாழ்க்கை வீணாகிவிடும்.
அதனால்,இளைய தலைமுறை ஒவ்வொரு அரசியல் கட்சியும், கட்சி என்பதை தூரத் தூக்கி வைத்து விட்டு யார் இதில் சமூக அக்கறை உள்ளவர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள். அதுதான் இந்த அரசியல் கட்சியினருக்கு நீங்கள் போடுகின்ற மார்க். அது பாஸா? பெயிலா? என்பதை தேர்தலில் உங்களுடைய தேர்வு எப்படி இருக்க வேண்டும்? என்று தீர்மானியங்கள் .
மேலும்,ஒருவருடைய ஒழுக்கம், நேர்மை, தியாகம், உழைப்பு இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், எத்தனை பேர் தேர்வார்கள்? என்பதை சிந்தியுங்கள். வெள்ளை வேஷ்டி,உடம்பும் பார்த்து, கூட்டத்தை பார்த்து, பணத்தை பார்த்து வாக்களித்தால்!உங்கள் வாழ்க்கையில் அரசியல் என்பது ஏமாற்றம் தான் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் . அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும்,மக்களுக்கு சேவை செய்ய, ஆனால், அரசியலில் கூத்தாடிக்கும், கூத்தாடும் வேலை அங்கு இல்லை, அரசியல்வாதிக்கும் கூத்தாடும் வேலை அங்கு இல்லை என்பதை புரிந்து கொண்டால் சரி – ஆசிரியர்.