தமிழகத்தின் பொருளாதாரம், மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கி செல்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கும் கருத்து. தமிழகம் மிக ஆபத்தான ஒரு நிலையை நோக்கி பயணிக்கிறது.
கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு தங்களுடைய சுயநலத்திற்காக தொடர்ந்து ஆட்சியாளர்களின் ஊழல்களையும்,அடாவடித்தனங்களையும் மூடி மறைத்து செய்திகளை வெளியிட்டு வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையயெல்லாம் மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுய பரிசோதனையில்,தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்த நிலைமை எடப்பாடி பழனிசாமி இருந்ததிலிருந்து தொடர்கிறது. இது தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதற்கு மிக முக்கிய காரணம்.இதன் பின் விளைவு இன்று தமிழகம் பொருளாதாரத்தில் பின்னோக்கிய வளர்ச்சி! தனி மனித வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கு யார் காரணம்? என்று மக்களுக்கு தெரிந்த ஒன்று. ஆட்சியாளர்கள் தான் இதற்கு முக்கிய பொறுப்பு.
இதைப் பற்றி சிந்திக்கும் ஒவ்வொருவரும்,ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்த வேதனை பற்றிய புலம்பல் தான் இது. நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ, அத்தனை அரசியல் கட்சிகளில் சமூக நோக்கமில்லாமல், சுயநலத்திற்காக பொது சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வது, கோயில் நிலங்களை பங்கு போட்டுக் கொள்வது, இது தவிர, சவுடுமண், மலைமண், போன்ற குவாரி ஓட்டுபவர்களிடம், பணம் வாங்காத கட்சியினர் இல்லை.
மேலும்,விவசாய சங்கம், சமூக அமைப்புகள் இவர்களும் வாங்கி விடுகிறார்கள். தவிர, கார்ப்பரேட் பத்திரிகை,தொலைக்காட்சிகள் பெரிய தொகையே வாங்கிக் கொள்கிறது. இப்படி ஆள்,ஆளுக்கு இல்லீகல் பிசினஸ், எதுவானாலும்,அங்கே காவல் துறைக்கு முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் அவர்களை மீறி இதை செய்ய முடியாது.
இது இல்லீகள் மது விற்பனை முதல் போதைப் பொருள் விற்பனை வரை நாட்டில் எவ்வளவு பேர் இப்படி பட்ட தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்? குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் அதிக வருமானம் பார்க்கும் தொழில்தான் சட்டத்திற்கு புறம்பான தொழில். இதில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் பின் புலத்தில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள் பகல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சி கூட்டமாக இருந்து வருகிறார்கள். இவர்கள் தான் எல்லா அரசியல் கட்சியிலும் ஊடுருவி சமூக நலனுக்கு எதிராக இருந்து வருகிறார்கள். மேலும்,இவர்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வார்களே தவிர,
எவ்வளவு பேர் இதற்காக போராடுகிறார்கள்? இதில் சமூக நலன் சார்ந்த கட்சிக்காரர்கள் எத்தனை பேர்? இது எல்லாம் மிகவும் குறைவானது. மேலும், நாட்டில் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது . இதில் கட்சி குடிகாரர்கள், குடிகாரர்கள், வேலை செய்யும் குடிகாரர்கள் இப்படி பல குடிகாரர்களை வகைப்படுத்தலாம். இதை விட ஒரு கொடுமை பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் நிருபர்களில் 95 சதவீதம் குடிகாரர்கள். இவர்கள் எப்படி சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லுவார்கள்?
இவர்களுக்கு எப்படி சமூக நலன் அக்கறை இருக்கும்? நிச்சயம் இருக்காது. ஐந்து, ஆறு மணி ஆனால், எங்கே கூட்டாக சேர்ந்து தண்ணி அடிக்கலாம்? இந்த மன நிலையில் இருப்பவர்கள் நிச்சயம் சமூக அக்கரை இருக்காது. எவ்வளவோ நிகழ்வுகள் வெளிவராமல், உண்மைகள் மறைக்கப்படுகிறது. அதற்கு இவர்களும் ஒரு முக்கிய காரணம்.
மேலும்,தகுதியற்றவர்களும் பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்கிறார்கள். அது அடையாள அட்டை என்று அவர்களுடைய நினைப்பு. அதனால் உழைப்பு, தகுதி. திறமை இல்லாமல் அந்த இடத்திற்கு வர அவர்கள் தான் அதிகம் ஆசைப்படுகிறார்கள் . இது எங்கே போய் நிற்கிறது என்றால், நாட்டில் ஊழல் ஆட்சியின் பின்னால் நிற்கிறது. ஊழல்வாதிகளால் எதையும் கேட்க முடியாது. ஏனென்றால் நீ சரியாக இருந்தால் தான் அடுத்தவனை கேள்வி கேட்க முடியும். நீயே சரியில்லாத போது நீ எப்படி அடுத்தவனை கேள்வி கேட்க முடியும்? இங்கே அதுதான் வந்து நிற்கிறது.
இதனால் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? ஒரு டீக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள். வேலை கிடைத்தவர்கள் தங்களுக்கு ஊதியம் மிகக் குறைவானது என்று புலம்புகிறார்கள். படித்த இளைஞர்கள் முதல் வேலை தேடி அலைபவர்கள் வரை அவர்களுடைய வேதனைப் புலம்பல் இது .
எந்த வேலையும் இல்லை. எந்த தொழிலும் தெரியாது. ஆனால், அவன் எல்லாம் ஒரு ஏதோ ஒரு கட்சி கொடி பிடித்துக் கொண்டு,வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி என்றால், கஷ்டப்பட்டு உழைப்பவன்,கஷ்டப்பட்டு படித்தவன்,கஷ்டப்பட்டு பத்திரிகை நடத்துபவர்கள்,பொதுவாக உழைப்பவர்கள் முன்னுக்கு வர முடியவில்லை. இந்த வேதனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இது படித்த சமுதாயத்தின் நிலைமை என்றால்!,
விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்கள் இன்று வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று விவசாயத்துடன் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்திருக்கக் கூடாது. அது விவசாயமே இல்லாத ஊர்களில் அல்லது மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம். இதனால் விவசாயம் 100 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் விவசாயம் சார்ந்த பூமி, இங்கே விவசாயத்தை நம்பி பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளது. இப்போது வடமாநில தொழிலாளர்களை நம்பி தமிழகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சுருக்கமாக சொல்லப்போனால், ஊருக்கு 60% மக்கள் உழைக்காமல் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்கள். இதில் ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களும் இருக்கிறார்கள். இந்தப் பெண்கள் பொறுத் அளவில் இந்த இன்னொரு நாள் வேலை திட்டத்தில், கார்டு போட்டுக்கொண்டு, கணக்கு காட்டிக்கொண்டு தினமும் 300 ரூபாய் நமக்கு வருகிறது. என்று வேலை செய்யும் தகுதி உள்ளவர்கள் கூட அரசாங்கம் அவர்களை சோம்பேறியாக்கி உட்கார வைத்துள்ளது. இது தவிர,
இலவசங்கள் கொடுத்து அவர்களை உழைக்காமல் சாப்பிட இன்று அரசாங்கமும்,அரசியல் கட்சிகளும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரம், வருமானம் குறைந்துவிட்டது. இது உழைப்பவர்கள் தெரிவிக்கின்ற வேதனை.
இது விவசாயத்தின் நிலைமை என்றால், ஹோட்டல் முதல் கட்டுமானத்துறையில் வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு அவர்கள் குறைந்தபட்சம் 800 முதல் ஆயிரம் வரை எதிர்பார்க்கிறார்கள். இது கடைநிலை வேலை. இதில் இவர்கள் போதைப் பழக்கத்தால் அடிக்கடி லீவும் போடுவார்கள். ஆனால் வடமாநில தொழிலாளிகள் இரண்டு மணி நேரம் கூடுதலாக வேலையும் செய்கிறார்கள். சம்பளமும் 500 லிருந்து 600 கொடுத்தால் போதும் என்கிறார்கள்.
மேலும்,சில சிறு, குறு கம்பெனிகள் கூட கொரோனா காலத்திற்கு முன்னாடி தமிழகத்தில் லட்சக் கணக்கான யூனிட்டுகள் மூடப்பட்டுள்ளது.ஆனால், வட மாநில மக்கள் உழைக்கவும் தயாராக இருக்கிறார்கள். மீதி நேரத்தில்,ஏதோ ஒன்று வியாபாரம் செய்கிறார்கள். இதைத் தவிர்த்து கல்வியின் தரம் பட்டதாரிகளை உருவாக்குகிறது.ஆனால்,திறன் மிக்கவர்களை உருவாக்குவதில்லை. அரசியலில் பெயருக்கு பின்னால் படிக்காமலே பட்டம் போட்டுக் கொண்டு, ஜாதி கட்சிகளில் ஏமாற்றும் கூட்டம், அரசியலில் கொள்ளையடிப்பது தான் தொழிலாக கொண்டுள்ளனர். எனவே,
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நலனுக்கும், பொதுநலத்திற்கும், ரவுடிகளையும், சுயநலவாதிகளையும், சோம்பேறிகளையும், வெத்து வெட்டுகளையும், அரசியல் கட்சியினர் என்று உழைக்கும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,
சமூக அக்கறை உள்ளவர்களை, மற்றும் படித்தவர்களை, அரசியல் தெரிந்தவர்களை, உழைப்பவர்களை,நேர்மையானவர்களை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை புலம்ப வைத்துள்ளது. அதனால், மக்கள் விழித்துக் கொள்ளாமல், இவர்களிடம் ஏமாந்தால்! வருங்கால இளைய தலைமுறைகள் பொருளாதாரம், வருமானம் எல்லாம் கேள்விக்குறியாகும்…..? எனவே,
தமிழக மக்கள் தகுதிக்கு, திறமைக்கு, கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பீர்களா? அல்லது கட்சி சோம்பேறிகளுக்கு, வெத்து வெட்டு கூட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்களா? இவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடுவதற்கு அரசு அதிகாரிகளும், குடிகாரர்களும், 100 நாள் வேலை திட்டமும், முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் மனக்குமுறலுடன் இச் செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இனியாவது, தமிழக மக்கள் உண்மையைப் புரிந்து வருங்கால சமுதாயத்தை வாழவைக்க திருந்துவார்களா? -ஆசிரியர்.