அமித்ஷா சொன்னதை தவறாக புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள்! அவர் சொன்னது உண்மை – நாடாளுமன்றத்தில் அமித்ஷா .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

டிசம்பர் 18, 2024 • Makkal Adhikaram

நாடாளுமன்றத்தில் பேசுகின்ற எதிர்கட்சியினர், அம்பேத்கர் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்பது புரிந்து பேசுகிறார்களா? அம்பேத்கர் சொன்னது நான் எழுதிய சட்டம் என்னுடைய காலத்திற்கு தான் அது பொருந்தும். காலத்திற்கு ஏற்றவாறு அதை திருத்திக் கொள்ளலாம் என்று சட்டத்திலேயே எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

மேலும்,சட்டம் என்பது காலத்திற்கு ஏற்றவாறும், மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறும், மாற்றங்கள் தேவையான ஒன்று.  எல்லா மதத்திற்கும், எல்லா சமுதாயத்திற்கும், சட்டத்தை பொதுவாக இயற்றியவர். அவர் இயற்றிய சட்டத்தை தான் அனைத்து சமூகங்களும் இன்று அரசியல் சாசனமாக அதை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய அம்பேத்கரே அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் . இது அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் சொன்ன உண்மை. மேலும், நாடாளுமன்றத்தில் அமித் ஷா சொன்னதை தவறாக புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் அம்பேத்கர், அம்பேத்கார் என்று சொன்னதற்கு பதில் இந்நேரம் பகவான் நாமத்தை சொல்லி இருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.

 இது ஒன்றும் தவறு இல்லை. உண்மையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.  அது எனக்கும் பிடித்திருக்கிறது. கடவுளை விட உயர்ந்தவர் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் ஒரு சாமானிய படித்த மனிதர் அவ்வளவுதான்.மேலும்,கடவுளுக்கு நிகர் யாருமில்லை. அதை தான் அமித்ஷா சொல்லி இருக்கிறார்.  எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேள் ,வாபஸ் வாங்கு என்று கூக் குரல் இடுகிறது. 

அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். அம்பேத்கர் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.மேலும், இதே அம்பேத்கர் பி.சி.ஆர் சட்டம் கொண்டு வராமல் இருந்தால் அம்பேத்கரை எவ்வளவு பேர் கொண்டாடுவார்கள்? ஒருவரும் இருக்க மாட்டார்கள் . மற்ற சமூகங்களை அல்லது மற்ற மதத்தினரை மிரட்டலாம். என்ன தவறும் செய்து கொள்ளலாம். சட்டம் என்னை தண்டிக்கக் கூடாது. தவறுகளை அம்பேத்காரே செய்ய மாட்டார். அம்பேத்கர் எப்படிப்பட்டவர் என்பது படித்த சமுதாயத்திற்கு தெரியும். அவர் ஒரு உண்மையான தலித் அல்ல. அவருடைய பிறப்பின் ரகசியம் தெரிந்தவர்களுக்கு தெரியும்.மேலும்,

 அம்பேத்கரை வைத்து அரசியல் கட்சிகள், அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள். அம்பேத்கரை வைத்து தலித் சமூகத்தை எந்த அளவிற்கு அவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அவர் உயிரோடு இருந்தபோது கூட இவ்வளவு பேர் அம்பேத்கருக்காக பேசியிருப்பார்களா? என்பது தெரியவில்லை . ஆனால், அவர் மறைந்த பிறகு அவருடைய போட்டோவையும் ,சிலையையும் வைத்து அரசியல் வியாபாரம் நன்றாக நடக்கிறது. 

இந்த நிலையை அம்பேத்கரே ஏற்றுக்கொள்வாரா? என்பதுதான்  அம்பேத்காருடன் இருந்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டேன். அதனால், மக்களுக்கு அரசியல் ஒரு புரியாத பாடமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், அம்பேத்கரை ஆதாயத்திற்காக கொண்டாடுவது வேறு, அரசியலுக்காக கொண்டாடுவது வேறு, அன்புக்காக கொண்டாடுவது வேறு, யார்? யார்? எப்படி கொண்டாடினாலும், யார் மனதில் எப்படி கொண்டாடுவது யாருக்குத் தெரியப்போகிறது?நமக்கே தெரியாது. இது அம்பேத்கருக்கு தெரிய போகிறதா? ஆனால்,யார் எப்படி கொண்டாடினாலும், கடவுளுக்கு தெரியும். அதனால், அம்பேத்கரை விட கடவுள் தான் மிக, மிகப் பெரியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *