தமிழ்நாட்டு அரசியலை தூய்மைப்படுத்த வேண்டும் என்றால்! அண்ணாமலை சொன்ன ஓட்டு பிச்சை அரசியலை மக்கள் ஒழிப்பார்களா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் ஓட்டு பிச்சை அரசியல் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அரசியல் கட்சியினர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டு பிச்சை அரசியல் என்ன? என்று மக்களுக்கு தெரியாது. அதுதான் அவரவருக்கு ஏற்றார் போல் பேசி அவர்களை கையெடுத்து கும்பிட்டு காலையில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி ஓட்டு பிச்சை கேட்பது, அது ஒரு ரகம்.அது ஒரு சிலர் இப்போதும் பார்க்கிறேன்.

கிராமங்களில் ஏரிக்கு மலம் கழிக்க செல்லும் போது கூட அவன் பின்னாடியே சென்று நான் தலைவராக நிற்க போகிறேன். எனக்கு ஓட்டு போடு என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் நகரங்களிலும் ஏதோ ஒரு பிரச்சனைக்கு அணுகும் போது அல்லது பிரச்சனையை இவர்கள் உருவாக்கும்போது,இந்த நிலைமை இருக்கிறது. இதை ஜாதி கட்சியினர் அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது கீழ் மட்டத்தின் நிலைமை .

மேல்மட்டத்தில் சீமான், திருமாவளவன் போன்றோர் தீவிரவாத இயக்கங்களுடன் ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு, சிறுபான்மை மக்களுக்கு நல்லது செய்வது போல் பேசிக்கொண்டு,அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். அந்த பக்கம் சிறுபான்மை மக்களும் ஏமாற்றுவார்கள் இந்த பக்கம் இந்துக்களையும் ஏமாற்றுவார்கள். ஜாதிகளையும் ஏமாற்றுவார்கள். ஆக கூடி இவர்கள் எதற்காக அரசியல் செய்கிறார்கள்?என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வி?

இவர்களுடைய அரசியல் தேச நலனுக்காகவா? அல்லது சமூக நலனுக்காகவா? அல்லது இவர்களுடைய சொந்த நலனுக்காகவா? இதை தான் மக்கள் பார்க்க வேண்டும். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது போல், கோவை குண்டுவெடிப்பில் பல பேர் இறந்துள்ள சம்பவம் தமிழக மக்களுக்கு தெரியும். அதற்குக் காரணமான ஒரு தீவிரவாதி பாஷா ஊர்வலத்தில் கலந்து கொண்டு சீமானும், திருமாவளவனும்,செல்கிறார்கள் என்றால், அடி முட்டாள் கூட இவர்களுடைய அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

ஏனென்றால், ஒரு தீவிரவாதிக்காக செல்லும் இவர்கள் உழைப்பவர்களுக்கு, நல்லவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்காமல், ஓட்டுக்காக பிச்சை எடுப்பது போல், அந்த ஊர்வலத்தில் முஸ்லிம்களின் ஓட்டு நமக்கு வரும் என்ற ஆதங்கமா? இதை நம் தமிழக மக்கள் தான் இப்படிப்பட்ட அரசியல் கட்சி மற்றும் கட்சித் தலைவர்கள் தேவையா?இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மேலும்,இன்னொரு முக்கிய விஷயம், நாட்டில் நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும், அர்த்தம் தெரியாதவர்கள், எல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் என்கிறார்கள். தலைமையே இப்படி என்றால், இவர்களுடைய தொண்டன் என்று சொல்பவர்கள் எப்படி? என்பது தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களை அப்பா என்று சொல்கிறார்கள் என்றால், அதைவிட கேவலமான அரசியல் வேறொன்றும் இருக்க முடியாது.தவிர,

ஒரு பக்கம் போதைப்பொருள் பழக்கமுள்ள இளைஞர்கள் நேற்றைய முந்தைய நாளில் வடநாட்டு இளைஞர்களையும், இங்கு உள்ளவர்களையும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே ஓட, ஓட விரட்டி, விரட்டி ,வெட்டி இருக்கிறார்கள். இதில் 5 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தீவிரவாதிகளால், மக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .மேலும்,

உழைக்கும் மக்கள் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தால், அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்? திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. காவல் துறை மிகவும் அலர்ட்டாக இருக்க வேண்டும். சமீபத்தில் கூட கவர்னர் ஆர். என். ரவி தமிழ்நாட்டு காவல்துறையின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், ஜாதி அரசியலையும்,மத அரசியலையும், செய்து கொண்டிருக்கும் சீமானும் திருமாவளவன் தமிழ் தேசியத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் அரசியல் தெரியாதகள்,அரசியலில் பிழைப்பு நடத்துபவர்கள், இதை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு கட்சிக்கு அர்த்தம் தெரியாது.அரசியலுக்கும் அர்த்தம் தெரியாது.அவர்களுக்கு கொடி பிடிக்கவும், கோஷம் போடவும், விசில் அடிக்கவும் தான் தெரியும். மேலும்,

கொள்கைக்காக அரசியலுக்கு வந்தவர்களை விட கொள்ளை அடிக்க அரசியலுக்கு வந்தவர்கள் தான் இன்று பல கோடி பேர் இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட அரசியலால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இவர்கள் நன்மை அடைய தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பேசுகின்ற பேச்சு! இதையும் இந்த வியாபார கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் தினமும் காட்டிக் கொண்டிருக்கிறது.மேலும்,

.தமிழ்நாட்டில் சீமான், திருமாவளவன்,போன்ற அரசியல் கட்சிகளால், நாட்டில் தீவிரவாதம், அரசியல் வன்முறை கலாச்சாரம், ஊழல் இதையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்றால், அண்ணாமலை போன்ற நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வர வேண்டும்.

இது தவிர,ராணுவ அதிகாரிகள் ,ராணுவத்தில் பணியாற்றியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.அப்போதுதான் தமிழ்நாட்டின் அரசியலை சீர் செய்ய முடியும். விஜய் அரசியலுக்கு வந்து இப்படிப்பட்ட சமூக விரோத அரசியல் கட்சிகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் ?. அண்ணாமலையாவது எதிர்த்து சமூக விரோத அரசியல் கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்? அந்த தைரியம் வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லையே, ஏன்? என்பதுதான் அரசியல் தெரிந்த மற்றும் அரசியலை படிக்கின்ற தமிழக மக்களிின் கேள்வி?மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு கோவையில் கண்டன பேரணி நடத்தி கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கம் எந்த அளவிற்கு மக்கள் நலனில் அக்கறை உள்ளது என்பது தெரிய வந்துள்ளதா? மேலும்,

அண்ணாமலை கோவைக்கு மட்டுமே, NIA வேண்டுமென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தேன் என்று தெரிவித்தார்.ஆனால், மக்கள் அதிகாரத்தில் ஏற்கனவே மாவட்ட தலைநகரங்கள் ஒவ்வொன்றிற்கும் NIA எழுதி இருந்தோம். அதை மீண்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் NIA ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் தேவை என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் தமிழக மக்களின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *