டிசம்பர் 26, 2024 • Makkal Adhikaram
நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு காரணமே, அரசியல் கட்சிகளின் பின்புலம் .இப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம்.மேலும்,திமுகவிற்கு இதனால் மாணவர்களிடையே இமேஜ், டோட்டல் டேமேஜ் .தவிர,
இது ஒரு பக்கம் அரசியல் ஆக்கப்பட்டது. அதிமுக இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியல் செய்துள்ளது.இந்த சம்பவத்தை மாணவர்களிடையே பிஜேபி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றாக அரசியல் செய்து இதைப்பற்றி கடுமையாக முதலமைச்சரையும், திமுகவையும் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே, மக்கள் அதிகாரத்தில் பலமுறை குற்றத்திற்கான காரணம், அதன் பின்னணி பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளோம்.
குற்றவாளிகள் எங்கும் இல்லை, அரசியல் கட்சிகளில் தான் குற்றவாளிகள் அதிகம் இருக்கிறார்கள். சமூக குற்றவாளிகளை விட இன்று அரசியல் கட்சி குற்றவாளிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், அரசியல் கட்சி குற்றவாளிகள் மீது எத்தனை வழக்குகள்? எந்தெந்த கட்சியில் பதியப்பட்டுள்ளது? என்பது தமிழ்நாடு பூரா கணக்கு எடுத்தால், உண்மை பொது மக்களுக்கு தெரிய வரும்.மேலும்,
போதை பொருள் சம்பவமாக இருக்கட்டும், கடத்தல் சம்பவமாக இருக்கட்டும், கள்ளச்சாராயமாக இருக்கட்டும் ,ரவுடிசமாக இருக்கட்டும் ,கற்பழிப்பு, கொலை குற்றங்கள் ஆக இருக்கட்டும், அரசியல் கட்சி பின்னணி ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. முதலில் தன்னுடைய கட்சி நிர்வாகி, அதனால் அவரைக் காப்பாற்றிய ஆக வேண்டும். இப்படிதான் ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்களுக்கு சாதகமாக சட்டத்தை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.காவல்துறை இவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.மேலும்,
இதுதான் சமூகத்தில் குற்றங்கள் பெருகப், பெருக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காமல், வாழ்க்கையே போராட்டமாக இருந்து வருகிறது.மேலும், அரசியல் கட்சிகளில் உள்ள அடியாட்களையும், புரோக்கர்களையும், கட்சிக்காரர்கள் என்கிறார்கள். இதை அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தமிழக மக்களுக்கு அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாத கூட்டங்களாக இருக்கிறார்கள்.
தேர்தல் என்று வந்தால், பணம் கொடுத்தால் ஓட்டு என்று வாய் திறந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு யார் வந்தாலும் நமக்கு ஒன்னும் நல்லது செய்து விடப் போவதில்லை. இப்படி ஒரு தவறான பேச்சு அடித்தட்டு மக்களிடம் இருக்கிறது. ஆனால்,இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவது ,நடுத்தர மக்கள்.இவர்களுக்கு வருங்கால இளைய தலைமுறைகள் இதனால் எவ்வளவு பாதிக்கும்? என்பதைப் பற்றிக் கூட சிந்திக்க மாட்டார்கள்.
அதனால்தான் இந்தப் பிரச்சனை கல்வி பயலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறது. இது மக்களின் சுயநலம் ,தனக்கு வலி ஏற்படும் போது என்ற கத்துகிறார்கள். அதுவே அடுத்தவர்களுக்கு நிகழும் போது அதை அலட்சியமாக பார்க்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் மக்களைப் பற்றி சிந்திக்க கூடிய அரசியல் கட்சி தலைவர்களும், அதற்கு தகுதியானவர்களும் நாட்டுக்கு தேவை என்ற மன உறுதி இல்லாமல் மக்கள் வாழ்ந்தால், இப்படிப்பட்ட பல சம்பவங்கள் மக்கள் அனுபவிப்பது சாதாரணமாகிவிட்டது.மேலும்,கார்ப்பரேட் ஊடக செய்திகள் நடுநிலையானது என்று நம்ப முடியாது. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்.எனவே, தமிழ்நாட்டில் சட்டமன்ற பிரச்சனை தொடர்கிறது .
இதிலே சில வெளிவரும், பல வெளிவராதது. அதனால், மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்களாக இருந்தாலும்,குறிப்பாக மாணவிகள், உங்களுடைய பாதுகாப்பு ,ஒவ்வொரு நாளும் மிக மிக முக்கியமானது என்பதை உணர்ந்து வாழுங்கள்.