அமைச்சர் துரைமுருகன் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு பற்றி வன்னியர் சமூகம் என்ன நினைக்கிறது ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

துரைமுருகன் தேர்தல் நேரத்தில் மட்டுமே நெருங்கி பேசுவதாக வன்னியர் சமுக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் அவர் மகன் கதிர் ஆனந்தும் அப்படி தான் என்கிறார்கள். மேலும்,

ஓட்டு கேட்கும் போது மட்டுமே மாமா,மச்சான், உறவு முறைகளை கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு யார் எங்கே இருக்கிறார்கள்?என்று யாருமே திரும்பி கூட பார்ப்பதில்லை என்கிறார்கள் அந்த சமுக மக்கள். மேலும்,

வன்னியர் சமுதாயம் ஒரு ஏமாந்த சமுதாயம். தேர்தல் நேரத்தில் இனிக்க பேசி ஆயிரம்,500 கொடுத்தாலே போதும். அவர்களுக்கு குவாட்டரும், பிரியாணியும் கொடுத்தாலே அதற்கே குறிப்பிட்ட சதவீதம் இருகிறார்கள்.இதை தவிர,

ராமதாஸின் அரசியல்! மொத்தமா அதிமுக,திமுக, பிஜேபியிடம் அடகு வைத்து 500, 1000, கோடி பேரம் என்றால்,ராமதாஸை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம், அந்த சமுகத்தில் தரமான தகுதியான, படித்தவர்களை கூட மிரட்டி அரசியல் செய்து ஊர் சொத்துக்களை கொள்ளை அடிக்க இவருடைய கட்சி புரோக்கர்கள் வேலை.

இதனால் இந்த சமுதாயத்தில் ஒற்றுமையை சீர்குலைத்ததற்கு ராமதாஸின் பங்கு மிக, மிக முக்கியமானது. சமுதாயத்திற்கு நல்லது செய்யவில்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கு தீங்கு செய்யக்கூடிய ஒரு கூட்டமாக ராமதாஸின் அரசியல். எந்த ஊரில் ஆவது இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்தவர்கள் எத்தனை பேர் என்று பட்டியலிட்டு ராமதாஸ் சொல்ல முடியுமா?

அதேபோல் ஜெகத்ரட்சகன்!ஜெகத்ரட்சகனாாாவது எனக்கு தெரிந்த ஒரு நண்பர் ஒருவர் அந்த காலத்தில் அதிமுகவில் எம்பி ஆக இருந்தபோது சில பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவிகளை செய்துள்ளார் என்று கேள்விப்பட்டேன்.

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியிலே, சென்னை அருகில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட எனக்குத் தெரிந்த ஒருவர் அன்புமணி அமைச்சராக இருந்தபோது அவருடைய சொந்தக்காரருக்கு எம்பிபிஎஸ் சீட்டு கேட்டபோது அப்போது எழுவது லட்சம் கேட்டதாக தகவல். அவர் டெல்லியில் இருந்து பிளைட் ஏறும்போது இந்த குமுறலை என்னிடம் தெரிவித்தார்.

இப்படி ஒரு சமுதாயத்தின் துரோகியாக அவரை சார்ந்த கூட்டமும் இருக்கிறது என்பதில் இந்த சமுதாயத்தில் விவரமானவர்களின் குற்றச்சாட்டு. மேலும், 40 ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வாயிலே ராமதாஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார்.மேலும்,

ஜெயலலிதா உங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். கருணாநிதியும் இந்த இட ஒதுக்கீடு கொடுப்பதாக தெரிவித்தார். எங்களுக்கு மந்திரி பதவி கொடுங்கள் பணம் கொடுங்கள் என்று அடமானம் வைத்து பேரம் பேசியவர் தான் ராமதாஸ். ராமதாஸ் பற்றி தெரியாத கூட்டம் கூட ஏதோ தனக்கு பதவி கொடுத்தது போல் கத்திக் கொண்டிருப்பார்கள். நான் ஜெயிலுக்கு போனேன். இதை இன்னும் சிலர் பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள். என்ன பிரயோஜனம்? இது தவிர,

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எடப்பாடியிடம் சொல்லி 10.5 சதவீத இட ஒதுக்கீடு வாங்கித் தந்தார் . அது மட்டுமல்ல, திமுகவை எதிர்த்து எடப்பாடி டெல்லி சுப்ரீம் கோர்ட் வரைக்கும் பிரச்சனையை கொண்டு சென்றது சி.வி. சண்முகம் தான் முக்கிய கராணம்.மேலும்,

திமுக மற்றும் இதர கட்சிகளில் இருக்கக்கூடிய வன்னிய சமூகத்தின் முக்கிய புள்ளிகள் நன்றாக பல ஆயிரம் கோடிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பார்த்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் துரைமுருகன் இப்படி பலர் வரிசையாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பல ஆயிரம் கோடிகளை அரசியலில் சம்பாதித்து அதில் ஒரு சதவீதம் கூட இந்த சமுதாயத்திற்கு செலவு செய்திருக்க மாட்டார்கள்.மேலும்,

இன்று அமலாக்கத்துறை பக்கத்து வீட்டில் கடப்பாரை வாங்கிக் கொண்டு போய் இவர்களுடைய இரும்பு பெட்டிகளையும், ரகசிய அறைகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எவ்வளவு கேவலம்?. நீ எத்தனை கோடி சம்பாதித்து? எத்தனை நாட்டில் சொத்து வாங்கி போட்டு என்னையா பிரயோஜனம்? உன்னை

ஒரே நாளில் சமுதாயமே இவ்வளவு கொள்ளைக்காரர்களா? இவர்கள் என்று சிந்திக்க வைத்திருக்கிறது. மேலும், இந்த கருப்பு பணம் வைத்து பினாமி சொத்துக்களை வாங்கி அதிகாரிகள்,அமைச்சர்கள், இதனால் இவர்களுக்கு என்ன பயன்? சும்மா பாத்துட்டு தான் இவனுங்க போய் சேரனும். இதை இவர்கள் குடும்பத்தினர் கூட சந்தோஷமாக அனுபவிக்க முடியாது. கர்மா இவர்களை அனுபவிக்க விடாது. ஏதோ ஒரு வழியில் இவர்களை அந்த கர்மா இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும் வாட்டிக் கொண்டுதான் இருக்கும். தவிர,

நல்ல வழியில் சம்பாதிப்பதே அழிந்து போகும்போது, இது மட்டும் இவர்களுக்கு நிரந்தரமாக இருக்குமா? கடவுள் இவர்களுக்கும் சரியான முறையில் தண்டனையும், ஊழல் செய்து சம்பாதித்து சொத்துக்களும் எப்படி ஒரு காலத்தில் ஜமீன்கள் அழிந்தது?அதேபோல் இந்த சொத்துக்களும் அழிந்து விடும்.

மேலும்,துரை முருகன் சமூகத்திற்காக 10.5 இட ஒதுக்கீடு கூட திமுக ஆட்சியில் பேசியதில்லை. அவர்களுடைய வருமானத்தை பற்றி தான் பேசி இருப்பார்களே ஒழிய, அதைப் பற்றி பேசவில்லை. மேலும்,ஓட்டுக்கு மட்டும் தான் இவர்கள் சமூகத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது கூட இப்போதாவது இந்த சமுதாயத்திற்கு உண்மை தெரியுமா? என்று கூட தெரியவில்லை.

அதனால், இவ்வளவு பணத்தை நமக்கெல்லாம் கொடுத்து ஏதோ கொஞ்சம் உதவி செய்திருந்தால், கல்வி, கல்யாணம், நல்ல காரியங்களுக்காவது இந்த சமுதாய மக்களுக்கு பயன்படுத்தி இருந்தால் ,இந்த E D ரைடு வருமா? வன்னிய சமூகத்தின் மிகப்பெரிய ஆதங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *