இன்று தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளான ஜனவரி 6 ல் சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது.
பிறகு தேசிய கீதத்தை புறக்கணித்து இருக்கிறார்கள். தேசிய கீதம் பாடுவதால் என்ன பாதிப்பு? தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்திற்கும் ஏற்படுகிறது?
இது தமிழக மக்களின் கேள்வி மேலும் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இது என்ன உங்களுடைய கௌரவ பிரச்சனையா?அல்லது மக்கள் பிரச்சனையா? ஒரு தேசத்தின் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு? என்ன பிரச்சனை? திமுக தவறான பாதையில் செல்கிறது.
மேலும், ஆளுநர் ஆர். என். ரவி தேசிய கீதம் பாட வேண்டும் என்று கேட்டு பாடாமல் மறுத்துவிட்டனர். தவிர,
தேசிய கீதம் நாட்டினுடைய ஒரு முக்கியமான பாடல் இதை ரவீந்திரநாத் தாகூர் எழுதியது. இந்த தேசிய கீதத்தை பள்ளியில் காலையிலும், மாலையிலும் பாடிய காலங்கள் உண்டு. அப்படிப்பட்ட தேசிய கீதத்தை திமுக அரசு எதற்காக சட்டமன்றத்திலே அதை எதிர்க்கிறது?
மேலும் ஆளுநர் ரவி தேசிய கீத அவமதிப்பு சட்டமன்றத்திலே, திமுக அரசு நடத்துவதால் அவர் வெளிநடப்பு செய்கிறார். ஆளுநர் வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தேசப்பற்று இருக்கிறது.
இங்கே ஏன்? அந்த தேசப்பற்று இல்லை.ஒருவேளை இந்த துண்டு அரசியல் கட்சிகள் எல்லாம் கூவதைப்போல, தமிழ்நாடு தனி நாடு என்று முட்டாள்களிடம் பேசிக்கொண்டு சுயநலத்திற்கு அரசியல் செய்யும் இவர்கள் ஒரு நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வந்தால் அப்போது தமிழ்நாடு தனி நாடு என்று சொல்வார்களா?
இந்தியா என்று சொல்வார்களா?ஒருவேளை இவர்களே அந்த நாட்டோடு சண்டை செய்து வெற்றி பெற்று விடுவார்களா? இதையெல்லாம் முட்டாள்கள்,அடி முட்டாள்கள் கூட பேச மாட்டார்கள். ஒரு தேசத்தின் வலிமை அந்த நாட்டின் ஒற்றுமை.அதனால், பல நாட்டின் அரசியல் வரலாறுகளை படித்துப் பார்த்தால் புரியும்.
எனவே, இந்தியாவின் வலிமை தேசபக்தி கொண்ட மக்களிடம் தான் உள்ளது. அது பிரிவினைவாத சக்திகள் இடம் இல்லை. சுயநலத்திற்காக பிரிவினைவாதங்களை பேசிக்கொண்டு தமிழ் தேசியம்,சமயத்திற்கு எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள். இது எல்லாம் தகுதியற்ற அரசியல்வாதிகள் தகுதியற்ற ஆளும் திமுக அரசின் நடவடிக்கையா? – தமிழக மக்கள்.